தமிழினத்தின் மணிமகுடம்
அரசருக்கு அரசே அருந்தமிழ் வேந்தே!
மன்னருக்கு மன்னா தமிழினத்தின் மணிமகுடமே!
தென்னவன் நாட்டுக் கவிஞனாக
உனக்கொருக் கவியெழுத!
சோழநாட்டுப் புலவனாக
இன்பத் தமிழில் பாட்டெழுத!
உந்தன் புகழைப்பாட
சொற்களை எடுத்தேன்
அகநானூற்றில்!
எந்தன் வேந்தனின் வீரத்தைப்
போற்ற தமிழெடுத்தேன்
புறநானூற்றில்!
சொற்குற்றம் பொருட்குற்றம்
உண்டோ எம் தலைவா!
பொதுவாய் பொறுத்து
அருள்வாய் தமிழர் முதல்வா!
தமிழர் இடர் தீர்க்க வந்த கடம்பா!
இனம் ஒன்றாக துணையாக நின்ற பிரபாகரா!
அறமெனும் உளி கொண்டு உன்னையே
வடிவாக வடித்தாயோ!
வரமொன்று பெற்று தமிழினத்தில்
வந்து உதித்தாயோ!
பொருட் செல்வம் இல்லை எனக் கலங்கா
தமிழர் வேந்தே!
உந்தன் அருட் செல்வத்தால்
தமிழீழம் கண்ட முடியரசே!
உந்தன் தீரத்தால் வீழ்ந்தது சிங்களக் கொடியவன் அரசே!
தலைவா உமது வீரத்தைப் போற்றிப்பாடுது தமிழரின் முரசே!
மெழுகாய் உருகி தமிழினம்
மீட்டு ஒளி தந்தாய்!
ஒளிரும் வைரமும் உந்தன் குறுநகைக்கு
ஒப்பாகுமா!
மணிவிளக்கே தமிழரின் மாசற்றக் குலவிளக்கே!
பகைவரும் உமது பாசத்தால் பனியென
உருகுவார்!
சாரலாய் சங்கத்தமிழோசையாய்
உந்தன் குரல் கேட்டவர் பலகோடி!
தமிழினம் மீண்டும் உய்ய உனைக்காணத்
தவமிருப்போர் கணக்கோடி!
வேங்கைத் தலைவனே
தமிழினத்தின் மணிமகுடம்
நீ!
மாசற்ற மாந்தருக்கு தமிழரசே
நீயுமொரு மணற்கேணி.
திரு.பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.