நவம்பர் 2022
தமிழீழம் காத்திட்ட காவலன்
மூவேந்தர் வழிவந்த மறத்தமிழ் வேந்தனே!
தமிழினத்தைத் தலைநிமிரச் செய்திட்ட தமிழ்க்குல மாந்தனே!
நந்திக் கடலை ஆட்சிபுரிந்த கரிகாலச் சோழனே!
கயவர்களை கதறச் செய்திட்ட தமிழீழக் காவலனே!
தலைவா உந்தன் அகவையோ அறுபத்தி எட்டு!
உந்தன் புகழைப் பாடுவோம் முரசுகொட்டி முழக்கமிட்டு!
தமிழீழ மக்களின் குறைதீர்த்த சேயோனே!
முல்லை நிலத்தையே வாழ்வாகக் கொண்ட மாயோனே!
தலைவா ஈரெழு வயதில் எடுத்தாயே துவக்கு!
நீயும் வைத்தகுறி தவறாது முடித்தது இலக்கு!
சங்கத்தமிழ்ப் பாடலாய் உந்தன் அழகுத்தமிழ் பேச்சிருக்கும்!
புறநானூற்று வீரமாய் உந்தன் புகழ் ஓங்கியிருக்கும்!
வஞ்சகம் கொண்டோர் வாழும் உலகிலே!
வரிப்புலியாய் வாழ்ந்து காட்டிய மாவீரனே!
எதிரிகள் நம்மக்களுக்கு கொடுத்தனர் தினமும் பிணக்கு !
நீயெடுத்த துவக்கு துரோகியைத் தீர்த்தது கணக்கு!
வள்ளுவரின் குறளாய் உந்தன் வாழ்க்கையும் தமிழருள் கலந்ததே!
வல்வெட்டித் துறையும் வரலாற்றில் இடம்பெற்று நின்றதே!
இன்பத்தமிழைத் திசையெங்கும் பரவச்செய்த செம்மலே !
இராவணன் வழிவந்த அருந்தமிழ் அரசனே!
மனக்கணக்கு போட்டவர் மாண்டு வீழ்ந்தனர் மண்ணிலே!
தலைவா உந்தன் பெயரைச் சொல்லி மீண்டெழுந்தோம் தரணியிலே!
வன்னிக்காட்டு வேந்தனே! தமிழீழக் காவலனே வாழியவே!
வரலாற்று நாயகனே! தலைவனே! பிரபாகரனே! வாழியவே!
திரு. ஜான்பீட்டர் சவரிமுத்து.
இணையதளப் பாசறை,
செந்தமிழர் பாசறை – அமீரகம்