நவம்பர் 2023
தமிழ்நாடு நாள் பெருவிழா!
இலக்கியம் படித்தேன்! தமிழின்
இனிமையை உணர்ந்தேன்!
இலக்கணம் படித்தேன்! தமிழின்
சொற்சுவை அறிந்தேன்!
தமிழைப் படித்தே நான்
அறிவை வளர்த்தேன்!
தேனினும் இனிக்கும்
தமிழ்தனில் அமிழ்ந்தேன்!
என்றும் அழியா திது
இறவா மொழியே!
ஒழுக்கம் நிறைந்த தமிழ்
இறைவன் மொழியே!
எங்கள் உயிரில் தமிழ்
வாழும் மொழியே!
தமிழைக் காக்கப் போகும்
எங்கள் உயிரே!
சந்தம் நிறைந்த தமிழ்
விந்தை மொழியே!
உலகில் சிறந்த தமிழ்
மொழியொரு கடலே!
தணிந்திட வில்லை இன்னும்
தமிழ்நாட்டு வீரம்!
எனினும் பொறுத்திடக் காரணம்
தமிழ் நெஞ்சின் ஈரம்!
இந்நாளில் பிரிந்தோம் இடம்
அதிகம் இழந்தோம்!
இருந்தும் சிலிர்த்து எழுந்தோம்
தமிழ்நாடாய் நிமிர்ந்தோம்!
உரிமையை மீட்பதில் நாம்
உறுதியாய் இருப்போம்!
அதிகாரம் பிடிப்போம்
திமிருடன் திருப்பி அடிப்போம்!
நவம்பர் ஒன்று திருவிழா!
தமிழ்நாடு நாள் பெருவிழா!
வாழ்க! வாழ்க! தமிழ் வாழ்க!
வளர்க! வளர்க! தமிழ்நாடு வளர்க!
திரு. சி.க.செந்தில்,
துணைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.