நவம்பர் 2022
தலைவா வாழ்கவே!
வல்வெட்டித்துறை தந்தருளிய அருந்தமிழ் முதல்வா!
அன்னை பார்வதித் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வா!
தலைவா உந்தன் அகவையோ இன்று அறுபத்தி எட்டு!
நீர் தானே தமிழருக்கு என்றென்றும் நம்பிக்கை ஊற்று!
ஈரெட்டுப் பதினாறில் ஈழம் காத்திட்ட வீர வேந்தனே!
தமிழரின் வீரத்தைப் பாருக்குப் பறைசாற்றிய மாந்தனே!
தமக்கை கொடுத்த கணையாழி கொண்டு துவக்கைப் பிடித்தாயே!
தனித் தமிழீழமே இலக்கென வெகுண்டெழுந் தாயே!
இயற்கையை உனது நண்பனாக்கி வன்னிக்காடும் கண்டாய்!
வரலாற்றை உனது வழிகாட்டியாய் ஏற்றுக்கொண்டாய்!
ஆலகால விடத்தைக் கழுத்தினில் அணிந்த எங்களின் ஈசனே வாழியவே!
தமிழீழத்தைக் காக்க வந்த எங்களின் பேரரசனே வாழியவே!
தலைவா உனது வாழ்க்கையே தமிழருக்கு வீரத்தை ஊட்டியது!
தம்பி என்ற பெயரும் தமிழருக்குள் பாசத்தைக் கூட்டியது!
வீரத்தின் விளைநிலமாய்த் தமிழீழத்தை கட்டமைத் தாயே!
மாசற்ற மாந்தனாய் என்றும் வாழ்ந்தாய் நீயே!
தலைவா கண்டோமே நீயும் தரணியில் உதித்த இந்நாள்!
உமது அகவை நாளே தமிழருக்குத் திருநாள்!
பைந்தமிழர் மரபணுவில் வீரத்தின் உயிரணுவான தலைவா வாழியவே!
நானிலத்து நற்றமிழ் மாந்தர் போற்றும் தலைவா வாழியவே!
தமிழரின் அறத்தை அறிவியலை நிலைநாட்டிய அரணே வாழியவே!
வான்நிலவும் வான்படை கண்டு வாழ்த்திய பிரபாகரனே வாழியவே!
தன்னிகரற்ற தமிழர்களின் வேங்கைத் தலைவனே வாழியவே!
வரலாறாய் வாழ்ந்திருக்கும் வல்வெட்டித்துறை நாயகனே வாழிய! வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
துணைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.