மே 2024

தளபதி பால்ராச்
அனலேறிய விழியும் – விடுதலைக்
கனலேறிய வாய் மொழியும்
வீரம் விளைந்தாடிடும் இதயம்
இவர் பேர் கேட்டாலே
எதிரிப் படைகள் சிதையும்!
எம் தலைமகனுக்குத் தலையானவர் – அவர்
உள்ளன்புக்கு உரித்தானவர்,
வா என்று சொல்லும் முன்பே
வந்து நிற்பார் – அவர்
செய் என்று நினைக்கும்போதே
செய்து முடிப்பார்!
“தலைவர் வந்தால் கூட
போரிட்டுப் பார்க்கலாம் – ஆனாலவர்
தளபதி பால்ராச் என்றால்
எந்நேரமும் தோல்வியைத் தழுவலாம்” என
எதிரிக்கும் தெரியுமிவர் வீரம்
அதனாலேயே பார் உள்ளவரை
தமிழ் போற்றுமிவர் தீரம்!
நெருப்பாற்றங் கரையிலே
முளைத்த வேங்கை – இவர்
வன்னிக் காட்டு ஓரத்திலே
தாய்ப்புலிக்கு பிறந்த தமிழ்ப்புலி…
வீரத்திற்கு பிறந்த மூத்தமகன்
இவர் தமிழ் இனத்திற்கென
பிறந்துவந்த இளையமகன்..
தான் கடந்த காடெல்லாம்
வீர விதைகள்…
இவர் நடந்த தடமெல்லாம்
எரிமலைக் கனிகள் – யான்
கொண்ட வீரர்களோ
விடுதலைப் புலிகள் – வாழ்வில்
கண்ட போரெல்லாம்
வெற்றிக் களங்கள்!!
திரு. காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.