நவம்பர் 2022
துவக்கு மௌனித்தாலும் தூவல் இலக்கு நோக்கியே!
எமது எல்லைக்கு வேலியிட்ட எதிரிக்கு முன்,
குவதெய்வமாய் எல்லை காக்க
படை கட்டிய தலைவனே…
இன விடுதலைப் போராளிகளுக்கு
மத்தியில், இன விடுதலைப்
போராளியாக எமக்கு இருந்தவரே..
முறம் கொண்டு புலியை விரட்டிய,
தமிழச்சியின் வீரத்தை இகழ்ந்தவரை,
புலிப்படையைக் கண்டு வியக்க வைத்தவரே..
நாங்கள் சோர்ந்துவிடும் போதெல்லாம்,
பிரபாகரன்! பிரபாகரன்!! பிரபாகரன்!!!
என உங்கள் பெயரை உச்சரித்தால் போதும்…
உறைந்து போன உதிரம் கூட,
உங்கள் பெயர் உச்சரிப்பில்
நரம்பு புடைத்து ஓடும்…
தமிழர் நெஞ்சங்களில் புகுந்தவரே!
தமிழருக்கு இள உணர்வை
குருதியில் ஏற்றியவரே!
அதனால் முப்படை கண்டவரே…
தாயுள்ளம் கொண்ட தலைவனே,
உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தான்,
தமிழுக்கும், தமிழருக்கும், பெருமை…
தமிழீழத் தாயகத்தை எப்போது
நான் காணுவேன் என்ற ஏக்கத்தோடு…
திரு. ச.சிவகாமசுந்தரி,
மகளிர் பாசறைச் செயலாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.