ஆகத்து 2022
தேம்பி திரியும் ஞாபகங்கள்…
தோளிலே பையிட்டு தெருவெங்கும் ஓலமிட்டு
வகுப்பறை வாசலிலே பலநேரம் காத்திருந்து
ஆசானிடம் அடிவாங்கி ஆதரவு யாருமின்றி
ஆத்தோரம் வருகையிலே நாவல்மரம் கண்டேனே!
கூடயாரும் வரலையே கூட்டாளியும் காணலையே!
மாமரக் கிளையினிலே மகிழுந்து ஓட்டியது
மனசவிட்டு பாறலயே மறக்கமனம் தோனலையே!
கட்டம் கட்டி சில்லுப் போட்டு
கூட்டு சேர்ந்து பழம் பறிக்க
கலந்து விளையாடியது நினைவாகி நிற்கிறதே!
காளைமாட்டு வண்டியிலே குடும்பமாய் உறவோடு
கூத்துப் பார்த்த காலங்கள் இனிவருமா?
கடந்தகால நினைவுகள் கண்ணிலே நிற்கிறது!
கடந்துபோன வாழ்க்கையும் கனவாகிப் போனது!
திரு. மு.ஷாஜஹான்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.