பிப்ரவரி 2023
தேர்தல் எனும் நாடகம்!
மேற்குத்தொடர்ச்சி மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
அது ஈரோடு கிழக்கு வீதியிலே வலம் வரும் தென்றல்….!!
ஈரோடு கிழக்கு வீதியிலே வலம் வரும் தென்றல்….!!
கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி உலாவரும்
நாம் தமிழர் களப்பணியில் அனல் பறக்கும் பரப்புரை….!!
தேர்தல் களப்பணியில் தேன்தமிழ் முத்தமிட்டுச்
சிரித்திடும் வாக்குறுதிகள்…..!!
தமிழாலே சேர்ந்திருக்கும் கருவண்ண நிறமேனியர்
குவிந்திருக்கும் நாடு நம் தமிழ் நாடு இது….!!
வட்டமிட்டு வட்டமிட்டு நல்லவர் மீது வழக்கு
தொடுத்து வஞ்சகம் தீர்த்துக் கொள்ளும் …!!
வான் பறக்கும் கொடியினிலே எங்கள் சீறிப்பாயும்
புலிக்கொடி சின்னம்…!! தமிழ் மண்வாசனை
மணக்கும் தமிழ்நாடு வீதியிலே வான் பறக்கும்
கொடியினிலே எங்கள் சீறிப்பாயும் புலிக்கொடி சின்னம்…!!
மக்கள் நலன் மறந்தே போச்சே…!!
நோட்டுக்கு ஓட்டு, நாட்டுக்கு வேட்டு’
100 சதவீதம் ஓட்டு போட்டா சரித்திரம்
போடலேனா நாட்டுக்கே தரித்திரம்’
வளர்ந்த நாட்டில் எல்லாம் கடமையை மீறுவதற்குப் பணம்…!!
நம் தமிழ்நாட்டில் தான் கடமையைச் செய்வதற்குப் பணம்…!!
கையில் காசு கொடுத்தால் போதும் டான் டான்
வேலை நடக்கும் பார் பார்…!!
தமிழ்ச் சமுக பொருளாதார கல்வி மருத்துவ மாற்றம்
நம் விரலில் தானே இருக்கு.. அதுதான் நம் வாக்கு….!!
பணம் கொடுத்து வாக்கு கேட்கும்
வழக்கொழியப் பாடுபடு…..!!
மக்கள் வரிப்பணத்தை வீண் விரயமாக்கும்
தேர்தல் ஆணையத்துக்குப் பிடித்திருக்கு கிறுக்கு…!!
காசு, பணம், கொடுத்து வீதியில் மக்களை விலங்குகள் போலடைத்து
இன்பச் சுற்றுலா கூட்டிச் செல்லும் வழக்கம் ஒழிக ஒழிக….!!’
உலகிற்கே உணவு தரும் விவசாயி சின்னம்!
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா பின்வாங்க கூடாது…!!
பணம் வாங்காம ஓட்டு போடுங்க அது தான் நமது உரிமை…!!
வாங்காதே வாங்காதே இலவசம்!
நீ வாங்கிய பிறகு ஏங்காதே ஏங்காதே அடுத்து ஐந்தாண்டு …. !!
வேசமில்லா நாம் தமிழர் ஆட்சி வந்தால்
வாக்குறுதியை மறவாது நிறைவேற்றுவோம்…. !!
திரு. சி.தோ.முருகன்,
செந்தமிழர் பாசறை – குவைத்.