செப்டம்பர் 2022
நஞ்சாகிப் போனதே பிஞ்சுகளின் உணவு!


தரணியெங்கும் தரமான உணவளித்த தாயகம்
தரங்கெட்ட உணவால் தடமாறிப் போனதே!
தளிர்விடும் பிஞ்சுகளும் நஞ்சுணவை
உண்ணவே நவக்குறைவு ஆனதே!
காற்றை அடைக்கும் நெகிழியில் உணவதையும்
அடைப்பர் சீர்கெடுப்போர் சுவையும் மணமும் இல்லை
ஆயினும் சுவைப்பர் சிறார் அவலம்!
ஆபத்தறியாது அதையும் ரசிப்பர் பெற்றோர்!
உடலுக்கு தீங்கெளில் உறவுகள் தழைக்கா
உடலை சிதைக்கும் உணவை உண்போர் மேனாட்டார்
அதை நாமும் உண்பது மேனாட்டு போகம்!
நலங்கெட்ட பகட்டான வாழ்விற்கு பாதை தேடும்
பயணத்தில் பெரும்பங்காற்றும் இப்பாழ்ப்பட்ட உணவுகள்!
புழக்கத்திலிருந்த பண்டைய உணவுகள் மறந்தோம்!’
பாழ்ப்பட்ட உணவை உண்டோம் நவீனமென்ற
போர்வையில் நஞ்சையுண்டோம்!
கேப்பங்கஞ்சி சோற்றுக்கஞ்சி குடித்தோம்!
கம்பங்களி தின்றோம் திண்ணையோரம்
கிடந்தாலும் சுகமாக வாழ்ந்தோம்!
உடலும் உயிரும் நலமுற
நமதுணவை மட்டும் நாடுவோம்
நஞ்சான நவீனவுணவை நீக்குவோம்!
திரு.மு.ஷாஜஹான்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.