ஆகத்து 2025
நண்பனைக் கண்டுபிடித்தேன்!
கண்டுபிடித்தேன் என் நண்பனை!
பிள்ளைப்பருவத்தின் பாசமிகுத் தோழனை!
பள்ளிக் கூடமெனும் கூட்டில் வளர்ந்தோம்!
சொல்லித் தந்ததை ஏட்டில் வரைந்தோம்!
எதுகை மோனை பேசி மகிழ்ந்தோம்!
நல்ல நட்பை நாளும் புகழ்ந்தோம்!
கனவுகளைச் சுமந்து பள்ளிக்காலம் கடந்தோம்!
நினைவுகளைச் சுமந்து பருவக்காலம் தொடர்ந்தோம்!
நல்லதோர் நட்பு அன்பின் புகலிடம்!
அதனைப் பெற்றவர் நட்பின் பிறப்பிடம்!
அறிமுகமோ ஆனதோ சில காலம்!
நட்பு தொடருதே நெடுங்காலம்!
நட்பிற்கு நட்புதான் எந்நாளும் அடைக்கலம்!
நன்பின்றி சுழலுமோ நண்பா முக்காலம்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.