மார்ச் 2025
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
ஒன்றுபட்ட தமிழினத்தை சீர்குலைக்கும் பெரு முயற்சி பெருகிவிட்டது…!
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
தமிழா வாக்குரிமையெனும் பேராயுதத்தைத் தன்வசம் வைத்துக்கொண்டு வசைபாடும்
வடுகன் காலில் வீழ்ந்து கிடப்பதேனோ?
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
தமிழ் மண்ணைத் தின்றழிக்கும் திராவிடத்தை வீழ்த்துவதற்கு வாக்கு என்ற ஓ(பே)ராயுதம் போதாதா?
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
புரியாத புது மொழியை புகுத்திடவே
அரும்பாடுபடும் ஆரியமே திராவிடமே!
எங்கள் தாய்த்தமிழ் உயிர்நிகர் எமக்கு!
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
பழமைமிகு எங்கள் தாய்த் தமிழ் மொழியை
இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியாக்கு..!
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
திராவிட ஈ.வெ.ரா எனும் குப்பையைப் பொசுக்கிவிட்டது நாம் தமிழர்!
திராவிடத்தின் அடித்தளத்தைத் தகர்த்துப்
தூரப்போட்டது நாம் தமிழர்!
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
மாநகரம் முதல் கடைக்கோடிச் சிற்றூர் வரை தமிழர் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் பகைவர்..!
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
தமிழினத்தை மதுக்கோப்பை ஏந்தி மயங்க வைத்த திராவிடத்தை வீழ்த்தியே தீருவோம்!
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
ஊழல் மிகுந்த தமிழ்நாட்டில் தடம் மாறாத தமிழ்த் தேசியம் வளர்ப்போம்
அறமற்ற ஆட்சிக்கு முற்றுப்
புள்ளி வைத்து தரணி போற்றும் புதியதொரு தமிழர் நாட்டை அமைப்போம்
தமிழா! நீ தமிழ்த்தேசிய அரசியல் செய் அல்லது செத்து மடி!
நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!
திரு. சி.தோ.முருகன்,
செந்தமிழர் பாசறை – குவைத்.