செப்டம்பர் 2022
நான் போராளி!
எங்கள் இனம் அறிவோம்! களம் அறிவோம்!
போராட்டம் எங்கள் குணம் என்று அறிவோம்!
தேசம் எனது என்று அறிவோம்!
தாகம் எங்கள் சுதந்திரம் என்று அறிவோம்!
வாழ்வோம்! வீரமறவனாய் வீழ்வோம்!
மாண்டாலும் வீரமறவனாய் மாய்வோம்!
காதல் எங்கள் தமிழ் என்று அறிவோம்!
உயிர் தருவோம்! காதல் உன்னதம் என்று அறிவோம்!
உண்மைக்கு உயிர் தருவோம்!
உரிமை நமது நாடி என்போம்!
கன்னியர் எங்கள் உடமை என்போம்!
புன்னகையே அடையாளம் என்போம்.
நாங்கள் மறைந்து புதைத்த இடம்
போராட்ட விதைகளின்
கூடாரம் என்போம்!!
திரு. ச.தமிழ்வினோ,
செந்தமிழ்ப் பாசறை – சவூதி அரேபியா,