spot_img

நாம் தமிழரென ஒன்று கூடுவோம்!

மார்ச் 2025


நாம் தமிழரென ஒன்று கூடுவோம்!

எங்கிருந்தோ வந்தவர்கள் தமிழர் நாட்டை ஆள்கிறார்… தமிழரை அடிமைப்படுத்தி ஆட்டம் போடுகிறார்…

இதைச் சதி என்று சகித்துக்கொள்வதா? இல்லை விதி என்று விட்டுவிடுவதா?

ஏதும் அறியாத் தமிழ் சொந்தமோ அங்கே மதுவைக் குடித்து கொடிகள் பிடிக்குதே..!!

தமிழர்களுக்கிடையே சாதி மத பேதங்களைத் தூண்டி விடுகிறான்…

நம் தமிழ் மொழியை அழித்திடவே தினமும் துடிக்கிறான்..!!

சதிகாரன் விரிக்கின்ற வலைகள் ஆயிரம்
அதில் சிக்கித் தவிக்கும் தமிழர் பல்லாயிரம்..!!

தமிழ்நாட்டின் அதிகாரம் திராவிடன் கையில் இருக்கும்போது, அண்ணனின் பேச்சால் திராவிடத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டது…

இதுதானே நாம் தமிழரின் அரசியல் மாற்றம்… அமைப்பை மாற்றும் அடிப்படை மாற்றம்…

இது மட்டும் போதாது… புரட்சிகள் பல செய்திடல் வேண்டும்..!!

தமிழ்நாட்டின் மாந்தர்களே! இன்பத்தமிழ் பேசுங்கள்!!
செந்தமிழே எங்கள் மொழியென்று கூறுங்கள்..!!

இனிய மொழி எங்கள் தமிழென்று மகிழ்ந்து பேசுங்கள்! இதை நாள்தோறும் பேசிப் பழகுங்கள்..!!

இன்பத் தமிழுக்கு அமுதென்று பெயர் சூட்டினான் எங்கள் பாரதிதாசன்! எங்கள் பாரதிதாசன்..!!

எங்கள் தீந்தமிழில் பல கவிதைகளுண்டு! காவியமுண்டு! அவை சொல்வது தானே அறம் பொருள் இன்பம்..!!

செந்தமிழில் பல நூல்படித்து வென்று காட்டுங்கள்!
உலகின் மூத்த மொழி தமிழ் மொழிக்குப் புகழைச் சேருங்கள்..!!

சுவையான தேன்தமிழை மறந்துவிடாதீர்கள்!
தாய்த்தமிழை மறந்து இருந்து விடாதீர்கள்..!!

எட்டுத்திசை போற்றும் திருக்குறள் போதும்
நம் தமிழ் தேசிய அரசியல் பேச..!!

அறிவார்ந்த எம் தமிழ் மக்களே! நாம் அறவழியில் போராடுவோம்..!!

சாதி மத பேதங்களைத் தள்ளி வையுங்கள்! அது பல சிக்கல்களைத் தரும் என்று புரிந்து கொள்ளுங்கள்..!!

எதிரியும் துரோகியும் பல்லாயிரம் சதிகள் செய்வான்! அதை முறியடித்து முயன்று காட்டுவோம்..!!

இவ்வுலகில் முயற்சி செய்து முடியாததென ஒன்றுண்டோ? தமிழர்களே எண்ணிப் பாருங்கள்..!!

தமிழ் பேசும் அனைவரையும் நம்பி விடாதே… நம்பிநம்பி வெம்பிவிடாதே..!!

நல்ல தமிழ் மாண்புகள் கொண்ட ஆளுமைகளை மடை மாற்றுவான்…! அவர்களை திராவிடன் என்று பறைசாற்றுவான்..!!

சிறந்த தமிழ்க் கூறுகளை திராவிடம் என்பான்…!! தமிழைத் தின்று செரிக்க அடையாளத் திரிபு செய்வான்!!

நம் பகைவர் யாரென்று அறிந்திடல் வேண்டும்! அதற்கான அரசியல் அறிவினை நாம் வளர்த்திடல் வேண்டும்..!!

நாளை நமதென்று வென்று காட்டுவோம்..!!
நாளை நமதென்று வென்று காட்டுவோம்..!!

நாம் தமிழரென ஒன்று கூடுவோம்!
நாம் தமிழரென ஒன்று கூடுவோம்!

திரு. சி.தோ.முருகன்,
செந்தமிழர் பாசறை – குவைத்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles