செப்டம்பர் 2022
நாம இப்ப முதலாளி!
நான் விரும்பும் மச்சானே
நம்பிக்கையே வச்சேனே!
உசுருக்குள் உள்ள வச்சு
உள்ளத்தை தந்தேனே!
நவீன காலம் வந்துருச்சு
நஞ்சை புஞ்சை எதுக்கு மச்சான்
நாடு போற போக்குலதான் நாமும் போவோமே!
நகரத்துக்கு குடிபோயி நலமா இருப்போமே!
கோமாளி கூத்து ஒன்று
கோட்டைக்குள்ளே நடக்குது!
ஏமாளி மக்கள் இப்போ
ஒட்டுப்போட்டு தவிக்குது!
உலகநாடு எல்லாம்
நம்ம ஊருக்குள்ள புகுந்துருச்சு!
ஊரணியும் கம்பாயும்
காணாமப் போயிருச்சு!
நான் விரும்பும் நல்லவளே
நவீன காலம் நல்லதுதான்!
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நிம்மதியா நாம உண்ண
நஞ்சை புஞ்சையை காத்து வச்சா
நாளைக்கு நல்லதடி!
நட்டு வெச்ச மரம் எல்லாம்
அதையே சொல்லுதடி!
நவீனத்தின் பெயராலே நாடகம் நடக்குதடி!
நகரம் நரகமாகும்.
நாலு காசு இல்லாட்டியும்
நம்ம மண்ணு சொர்க்கமடி!
நல்லபடி வாழ்ந்திடவே
நம்ம ஊரு போதுமடி!
நஞ்சை புஞ்சை எல்லாம்
நம்மல காக்குமடி!
நவீனகால அடியைகளை
நகர வாழ்கை அழைக்குதடி!
நாம இப்ப முதலாளி
நமக்கு இது போதுமடி !!
திரு. இனியவன்,
செந்தமிழ்ப் பாசறை – ஓமன்.