நவம்பர் 2022
பகையை மிரட்டிய தம்பியே!
நாடுகள் பல, படை திரட்டி வந்தபோதும்,
பகைமிரள எதிர்த்து நின்ற தம்பியே!
எங்கள் தலைவனே!
என்றும் தமிழீழக் கனவோடு…
அறத்தின் வழியில், ஆயுதம்
ஏந்தி நின்றதனால் எதிரியும் கூட
உங்கள் நேர்மை கண்டு வியந்தான்!
பகைவரும்கூட புகழ்ந்தான்!
வேலெடுத்து காத்த முருகனுக்கும்.
துவக்கெடுத்து காத்த தலைவனுக்கும்,
வேறுபாடென்பது பரிணாம வளர்ச்சியே..
தன் இன விடுதலைக்கு தானே,
முப்படை எழுப்பி அதில்
ஆண் பெண் நிகரென,
உணர்த்திய மாவீரனே…
தமிழர் உலகை ஆண்ட
வரலாறு இருந்தாலும்,
எம் தலைவர் உலகை
ஆட வைத்ததும், வரலாறு தானே!
தான் கொண்ட கொள்கையாலும்,
தமிழ் காட்டிய அறத்தினாலும்,
எமக்கெல்லாம் மேலான மேதகுவே!
துவக்கு ஏந்தி துவக்கிய
உன் விடுதலை போராட்டம்,
இன்னும் ஒயவில்லை! தூவலாக
இன்னும் இளையோர் கையில்…
உங்கள் அகவை தினத்தை..
நாங்கள் அகம் மகிழ்ந்து
கொண்டாடுகிறோம்…
திரு. செல்வ.சந்திரபோசு,
செந்தமிழர் பாசறை – குவைத்.