சூன் 2025
பசுமை காப்போம்!
எழிற்பொலியுஞ் சோலையிலே யெங்கும் பூவாம்!
எண்டிசையுந் தும்பியின மெவ்வி மேயும்!
பொழில்மிசையே மதுவிசையை யூதிப்பாடும்!
பொருத்தமானத் தாளத்திற் பூச்சி யாடும்!
விழிநிறைந்த வண்ணமிகு விந்தைக் கோலம்!
வியப்பூட்டி மகிழ்வேற்றும் வேனிற் காலம்!
பழிநிறைக்குங் கொடுஞ்செயலாம் பசுமைச் சேதம்!
பண்ணாமற் பயனுறவே பயில்வோம் நாமே!
பாடல்: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அரையடி வாய்ப்பாடு: காய் – காய் – மா – தேமா
திரு. பட்டுக்கோட்டை சத்யன் (எ) சங்கத்தமிழ் வேள்,
செந்தமிழர் பாசறை – குவைத்.