சனவரி 2023
பண்டைய தமிழர் பண்பாடும் சூழலும்!
நாம் தமிழர் கட்சி இன்று வந்ததே!
இதை உணராத சில தமிழ்க்கூட்டம் வேறு வழியிலே….!!
தடம் மாறி செல்லும் சில கூட்டத்தை
விலையில்லா கருத்தாலே ஒன்று சேர்ப்போம்…!!
குமரிக் கண்டம்
என்று ஒரு நாடிருந்ததே!
அந் நாட்டில் பரளி என்றொரு ஆறிருந்ததே…!!
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே!
அக்கம் பக்கம் பல மரங்கள் இருந்ததே…!!
அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் ஒரு ஆள் உயர நெற்கதிர் இருந்ததே….!!
கதிர் கொத்திடக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே….!!
அதிகாலையில் எம்மை எழுப்பிடவிட
சேவல் காகம் குருவி இருந்ததே….!!
அந் நாட்டில் எங்கும் நிழல் இருந்ததே
மண்வழியில் மரம் இருந்ததே….!!
மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே …!!
மக்கள் பிரச்சனை பேசி தீர்க்க ஒரு உள்ளூர் நீதிமன்றம் இருந்ததே…!!
மாதம் மும்மாரி பருவமழை பெய்திருந்ததே
நரகத் தீ சூடில்லையே
தீவட்டிக் கந்து வட்டி
மீட்டர் வட்டி கொள்ளை இல்லையே….!!
உழைக்கும் மக்கள் மிகுந்திருந்ததே..தின்றது எதுவும்
நஞ்சில்லையே உணவே மருந்து என்றிருந்ததே….!!
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால்
மறுவீட்டில் பசியில்லையே….!!
ஒருவர் கண் கலங்கி நின்றால் ஓடி வந்து உதவும்
நல்ல உள்ளமிருந்ததே….!!
நாடெங்கும் சாதி மத மோதல்கள் இல்லையே
ஒரு மதத்தை அழிக்க நினைத்ததில்லையே….!!
நடைவெளி இடைவெளி நூறிருந்ததே
நாலுமணிப் பூவிருந்ததே
நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே…..!!
அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி மக்கள் மனதில் அன்பிருந்ததே….!!
உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்
என்றதொரு சண்டை இல்லையே….. !!
அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ
அந் நாடு இறந்து போனதோ…..!!
அந்நாடு வெறும் ஒரு கனவானதோ
அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ….!!
அந்நாட்டை தேடினால் கிடைக்காது ….
அந்நாட்டைபோல உருவாக்க முடியும்
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்போம்….
திரு. சி.தோ.முருகன்,
செந்தமிழர் பாசறை – குவைத்.