செப்டம்பர் 2022
பெண்ணே விழித்தெழு!
பூமியின் மாதரே புரட்சிப் பூவையரே
புதியதோர் தேசம் படைக்க வாரீரே
பொய்யும் புரட்டும் சூழ்ந்த நாட்டிலே
பொய்யாப் புலவரின் திருக்குறளை விதைத்திடு
கடல் தாண்டும் பறவையைப் போல
தாழ்வு எண்ணங்களை களைய விரைந்திடு
மண்ணில் பிறந்த பாவையர் எல்லாம்
விண்ணில் சரித்திரம் படைத்ததை மறவாதே
இன்னல் தந்த கொடியவர் முன்னே
கொட்டும் முரசென எழுந்திடு பெண்ணே
நாற்புறமும் நயவஞ்சகர் கூட்டமும் சூழுமே
உந்தன் நெருப்பு விழியால் பொசுக்கிடு
முன்னேற்ற வழியில் தடைகள் ஓராயிரமோ
தடுப்பவர் நெஞ்சை தகர்த்திடு நங்கையே
அடிமை கூட்டத்தின் கொட்டாரம் நொறுங்கிடவே
புரட்சிப் புயலென மாறிடு ஆரணங்கே
உரிமையை மீட்சு புலியெனப் பாய்ந்திடு!
தரணியும் உந்தன் வசமாகிடும் மங்கையே!!
திரு. பா.வேல் கண்ணன்,
துணைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.