மே 2022
மறக்கவும் மாட்டோம்! மன்னிக்கவும் மாட்டோம்!!
அன்று உறக்கம் வராமல் தவித்த பொழுதுகள், இன்றும் மனதை விட்டு அகலளில்னை முகநூல் மற்றும் இணையத் தொடர்புகள் சாதாரண மக்களுக்குக் கிடைக்கப்பெறாத அந்த நேரம், நாள் தங்கியிருந்த வளைகுடா நாட்டில் ஒரே ஒரு தமிழ் நாளிதழ் மட்டும் ஒருநாள் கழித்தே கிடைக்கும்.
ஈழம் பற்றிய தகவல்களை அறிவதற்காக மட்டுமே, அந்தப் பத்திரிக்கையை வாங்கிப் படித்தோம்.
ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பது குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது. வாய்விட்டுக் கதறியழத் தேவை இருந்தது.
ஆனாலும் போர்வைக்குள் அழப் பழகிக்கொண்ட காலம் அது. அதன்பின் பல காணொளிகள் குறுந்தட்டு வடிவில் கிடைத்தது.
ஆனாலும் பல நாட்கள் கழித்து சேனல் 4 வெளியிட்ட காணொளிகளில் தான் அத்துணை அவலங்களும் அனைவருக்கும் புரிந்தன.
எம்பினம் என்றேனும் எழும், முவேந்தர் நிலைநாட்டிய கொடி மீண்டும் உயரப் பறக்கும் என்ற ஒற்றை நம்பிக்கை தான், அடுத்த நகர்வுகளை நோக்கி தகர்த்துகிறது.
வீழ்ந்தவர்கள் வெறும் சருகுகள் அல்லர்; விதைகள்! என்றேனும் முளைத்து வளர்ந்து விண்னைா முட்டும்!
துரோகத்தின் வடுக்களைத் தவறாது கடத்துவோம் தகைசால் தமிழின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும்!
கூண்டிலேற்றுவோம்! எங்களவனைக் கொன்ற உங்களையும் சிங்களவனோடு சேர்த்தே! ஓரினத்தை அழிக்க உலகின் ஒட்டுமொத்த இனமும் கூடினீர்கள்…! இதிலிருந்தே தெரித்துவிட்டது. எங்களின் வலிமை எத்தகையது என்று…!
ஒருநாள் திருப்பி அடிப்போம் அதுவரை நீ களித்திரு!
ஆணவத்தோடே நகைத்திடு! ஆனால் அனைத்தையும்
கணக்கு வைத்துக்கொள்!
வட்டியோடே திருப்பித் தருவோம்!
அதுவரை… காத்திரு பகையே! காத்திரு!
கருவறுப்போம் வெகுவிரைவில்!
மே 18 உமக்கு தமிழினப் படுகொலை நான்!
மே 18 எமக்கோ தமிழினம் எழுச்சி பெறும் நாள்!
மறக்கவும்மாட்டோம்!
மன்னிக்கவும்மாட்டோம்!!
திரு. பினோபின் ராஜ்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.