நவம்பர் 2022
மாவீரர்கள்
கார்த்திகை மாதத்தில் பூத்திடும் கன்னிப் பூக்களே!
உங்களின் காலடி ஓசையும் தான் கன்னி வெடிக்குள்ளே!
எரிகணைக் குண்டுகளை தோள்களில் தூங்கியே!
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்கும் உங்களின் உத்தியே!
தலைவனின் கட்டளைக்கு காத்திருந்த கரும்புலி மறவர்களே!
தமிழீழ மண்ணிற்கு உயிர்க்கொடை ஈந்த மாவீரர்களே!
வெற்றியும் காணாது உங்கள் விழிகளும் உறங்காது!
உயிர்த்தலைவனின் கட்டளையை முடித்தேக் கண்ணுறங்குமே!
முகத்தில் புன்னகைப் பூத்தபடி போர்க்களம் புகுந்தப் போராளிகளே!
யுத்தத்தில் உங்களின் சத்தத்தில் எதிரியும் நித்தமும் மாய்ந்தார்களே!
கனத்தினிலே மங்கையரும் தங்கையரும் அங்கயறாய் வலம் வந்தனரே!
தமிழீழம் பிறந்திட விதையாய் வீழ்ந்து அவரும் மாவீரரானாரே!
பொங்கு தமிழும் களத்திற்குள் ஆர்ப்பரிக்குமே!
கட்டளையும் செந்தமிழில் உங்களுக்கு வந்து சேருமே!
செங்காந்தள் மலரும் பாடுதே நாளும் உங்களின் வீரம்!
செந்தமிழ் மாந்தரும் போற்றுவர் உங்களின் தீரம்!
தமிழே உயிர் மூச்சானது தலைவன் சொல்லே மந்திரப் பேச்சானது!
அதனையே உமக்குள் ஏந்தி எதிரிமுன் புலியெனப் பாய்ந்திரே!
வள்ளிக்காட்டின் வன வேங்கைகளே வாழியவே! வரிப்புலியாய்
உலாவந்த புறநானூற்று மாந்தர்களே வாழியவே!
தமிழீழக் கனவை நெஞ்சுக்குள் கருவாய் சுமந்தீரே!
கயவர்கள் முன்னே கால்தடம் பதித்தக் கரும்புலியானிரே!
ஈழம் ஆண்ட எல்லாளனின் பெயரன் பெயர்த்திகளே வாழியவே!
தமிழ்க்குலம் காத்திடவே பூத்துதிர்ந்த மாவீரர்களே வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
துணைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.