செப்டம்பர் 2025
முல்லை நிலத்தின் மாயோன்!
முல்லை நிலத்தை
வடிவாக்கிய வேந்தனவன்!
ஆயர்குல ஆளுமையாம்
ஆகப்பெருந் தலைவனவன்!
காட்டைத் திருத்திய
கார்மேக வண்ணன்!
கால்நடைகளை பழக்கிய
கருமைநிறக் கண்ணன்!
நன்மை தீமைகளை
நாள்தோறும் பகுத்தவன்!
நன்மக்கள் உருவாக
நற்கருத்துக்களை விதைத்தவன்!
காட்டினுள் உயிர்கள்
யாவையும் காத்துநின்றான்!
ஏட்டினில் அவற்றைத்தான்
நாமறியத் தந்தான்!
மங்காத குழலிசை
மீட்டிடும் மாயவன்!
மயங்காத மனங்களையும்
மயக்கிடும் தாயவன்!
ஆதித்தமிழனின் புகழை
நெஞ்சில் ஏற்றுவோம்!
ஆயர்குலத் தலைவனின்
பெருமையைப் போற்றுவோம்!
மூத்த தமிழ்ப் பெருங்குடியின்
மூதாதைக்குப் புகழ்வணக்கம்!
முல்லை நில இறைவனுக்கு
முத்தமிழில் முதல்வணக்கம்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.