spot_img

முள்ளிவாய்க்கால் முடிவல்ல!

மே 2022

முள்ளிவாய்க்கால் முடிவல்ல!

நந்திக் கடல் சேர்ந்த தீரத்திலே
நீந்தி உரம் பெற்ற வீரத்திலே

ஓங்கி உயர்ந்த காடுகளாய்
பசுமை பொங்கும் பூம்பொழிலாய்

கொஞ்சிக் குலாவும் புள்ளினங்கள்
வஞ்சிக் குழலொத்த அருவியுடை

பனை மரக் காட்டினுள்ளே
பய மறியா நெஞ்சுடனே

கூடித் திரிந்ததொரு பெரும் குழாம்
ஆடிப் பாடி சிறந்ததொரு இனம்

கூட்டைக் கலைத்திடவே திட்டம்
கொண்டு வந்தான் ஒரு சட்டம்

இரண்டாம்தரக் குடிகள் தமிழர் நீங்கள்
தன்மானத்துடன் வாழ வேண்டாம் போங்கள்

பொங்கி எழுந்தது அறப்போராட்டம்
பொல்லாங்கு செய்தது காடையர் சுட்டம்

அடக்குமுறை தலைதூக்சியது
ஒடுக்குமுறை நிலைகொண்டது

கொல்லா நோன்புடை புத்தனைக் கொண்டவன்
வல்லூறு போலவே வன்கொலை செய்தான்

தமிழ்ச்சி முலைக் கறி சிடைக்கும் என்றாள்
தமிழனின் தொடைக் கறியும் தொங்க விற்றான்

அடக்குமுறையால் எழுந்தது போராட்டம்
அடங்க மறுத்தவரைக் கொன்றது பேயாட்டம்

கொதித்து எழுந்தான் பதிளமச் சிறுவன்
கொள்கையை வகுத்தான் தமிழன் நிமிர

இனிமேல் இணைந்து இருப்பதும் வேண்டாம்
இழி நிலை கொண்டு வாழவும் வேண்டாம்

முள்ளை முள்ளால் எடுப்பது போல
தொல்லை தந்தவரைச் சுட்டுப் பொசுக்சினான்

வல்வெட்டியிலிருந்து வந்தான் தம்பி
வந்து சேர்ந்தனர் தமிழர்கள் நம்பி

புதிய புலிகள் நாமென்று வந்தவர்
விடுதலைப் புலிகளாய் வீறுகொண்டெழுந்தனர்

படை பல கொண்டு தேடின நரிகள்
உதை தந்து ஒட விரட்டினர் புவிகள்

தம்பிபின் தலைமையில் தமிழர்கள் வந்தனர்
நம்பிய மக்களை நல்வழிப் படுத்தினார்

ஈழத்தை எங்கள் தேசமெனக் கொண்டு
தேசியத் தலைவராய் தம்பியைக் கொண்டனர்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக் கொருமுறை
பாயிரம் ஆயிரம் பாட்டுடைத் தலைவன்

முந்து தமிழ் இனம் ஏற்றம் கொள்ள
வந்து உதித்தான் முருகலுக்கிளையோன்

தடைகளையெல்லாம் படிகளாய்க் கொண்டான்
படை பல கட்டி பகை மிரள வென்றாள்

மானம் பெரிதன மங்கையர் வந்தனர்
வானம் போற்றும் கரும்புலியாய் வரித்தனர்

உயிரினும் மேலது விடுதலை என்றே
வயிரம் வாய்ந்த வீரர்கள் இணைந்தனர்

தாய் மண் மீது கொண்ட வேட்கையினால்
மெய் வலி கடந்து மறந்த புலிகளானார்

சமூக ஒழுக்கத்தைக் கட்டமைத்து
சட்ட திட்டங்கள் வடிவமைத்து

தற்சார்பு நிலை முன்னெடுத்து
தாயாய் நின்றனர் தமிழருக்கு

வஞ்சக எண்ணம் நெஞ்சில் கொண்டு
இந்தியம் வந்தது அமைதிப்படையாய்

காந்தியை தந்தையாய் கொண்ட தேசம்
பூபதித் தாயையும் திலீபனையும்

அவட்சியம் செய்தது அறத்தைக் கொன்றது
அசிம்சைக் கொள்கையைக் காற்றில் விட்டு

சிங்களத்துடளே சிநேகம் கொண்டு
பங்கம் செய்தது தமிழருக்கெதிரே

வன்புணர் கொலை கொள்ளை
எண்திசை செய்தது சதிராட்டம்

எழுச்சி கொண்டு எதிர்த்தனர் புலிகள்
வீழ்ச்சியுற்று உடன் விரைந்தது வெளியே

கருப்பு சூலை செஞ்சோலை எனப்
படுகொலைகள் தொடர்ந்த நிலையில்

கரும்புலி கடற்புலி என விரிந்து
படர் இரும்புரம் ஏற்றிய வான் புவி வளர

முல்லைத் தீவினில் சமரினில் இறங்கி
எல்லையற்ற ஆனையிறவையும் மீட்டு

ஓயாத அலைகளாயப் புலிகளின் வீரம்
ஓங்சி உயர்ந்தது எதிரிகள் நடுங்க

சிறகை விரித்துப் பறந்த வான் படை
சிதறடித்தது சிங்களன் கனவை

அதிர்ந்தது கட்டு நாயகத் தளமே
புரிந்தது தமிழர் அறிவியல் வளமே

தரணி முழுவதும் சிதறிய தமிழினம்
ஓரணி கொண்டே திரண்ட தருணம்

உலகம் உணர்ந்தது தமிழரின் பெருமை
கலகம் செய்ப தூளிந்தனர் சிவரே

வெள்ளைக் கொடியுடன் வினையும் ஏந்தி
வெள்ளையர் வந்தனர் இருகரம் நீட்டி

பேச்சு வார்த்தை என்றே புலிகளின்
மூச்சுக் காற்றை நிறுத்த நினைத்தளர்

பகை நாடுகளாய் வரித்துக் கொண்ட
பாக்சித்தாலும் இந்தியாவும்

அமெரிக்காவும் உருசியாவும்
சப்பான நாடும் சைனாவும்

பரந்த பாரினில் நாடுகள் பலவும்
இணைந்து நின்றன தமிழர்க்கு எதிரே

கருநாகமென இர5ண்டகம் கொண்ட
கருணாக்களும் காட்டிக் கொடுக்க

கார் மேகங்கள் நிறைந்த நாட்டில்
போர் மேகங்கள் சூழத் துவங்கின

பல்லாயிரமாண்டு மூத்த தமிழினம்
கையளவு நிலத்தைப் பற்றியது பொறுக்கலையோ

ஆழிப் பேரலைகளில் அழியா தமிழினம்
சூழ் வினையலே சுருங்கிப் போனதே

தென்கீழை சீமையெங்கும் பறந்த புலிக்கொடி
வன்னிக் காட்டுக்குள் வளைக்கப்பட்டதே

வஞ்சகப் படைகளை எதிர்த்து
செஞ்சமர் புரிந்தனர் புலிகள்

பன்னாட்டுப் போர் விதிகளை மீறி
பல நாட்டு படைகள் செய்தன சதி

திரும்பிய இடமெல்லாம் விழுந்து வெடித்தது
தடை செய்யப்பட்ட இரசாயனக் குண்டுகள்

விச வாயுக் குண்டுகள் ஏவப்பட்டதே
இளம் மூச்சுக் காற்றுக்கும் ஏங்கி நின்றதே

இன வெறிக்குத் துணை நின்ற தீயெனும் தருக்கள்
மனித குலம் கண்டிராத பவுத்தச் சிங்கள் அரக்கன்

பதறும் உறவுகளைப் பறவை போல்
அணைத்துக் கொண்டு உறங்கா விழிகளுடன்

பரந்த விண்ணோக்கிப் பார்த்து நின்று
ஒட்டுக் குடிசைகளில் ஒடுங்கிக் கிடந்தவரை

பறந்து வந்தப் பாதரசக் குண்டுகள் கொன்றதே
பதுங்கு குழிகளுக்குள் பச்சிளம் பிள்ளைகளுடன்

பள்ளிச் சிறார்களும் பதறி துடித்த போது
எங்கும் நெருப்பு படபடவென் வெடியோசை

பொங்கும் பாசுபரசு வடிவாக வந்தானே எமனே
நெஞ்சில் துணிவோடு வஞ்சகரை வஞ்சம் தீர்க்க

மிஞ்சிய ஆயுதங்களை வாரியணைத்துக் கொண்டு
பற்றியெரியும் நெருப்புக்கு, பறந்து வரும்

குண்டுகளுக்கு அஞ்சும் மக்களுக்கு
அரணாக நெஞ்சு நிமிர்த்தி நின்றாரே

ஈழத் தேயத்தை நெஞ்சில் சுமந்த ஈகை மறவர்கள்
வீரத்துடன் இறுதிவரை போராடி மாவீரர்கள் ஆயினரே

சமாதானக் கொடி பிடித்துச் சரணடைய வந்தனரே
சதிகாரர்களே அவர்க்குச் சாவை பரிசாக தந்தனரே

எங்கும் பிலாக்குவியல், மரனா ஒலம்
அங்கம் நடுங்குதே இன்று காண்கையிலும்

நம்மினம் அழிகையிலே நெஞ்சம் பதறுகையிலே
நம்பி இருந்தோமே வஞ்சக கூட்டம் தன்னை

இன்றும் இருக்கின்றார் இனத்தை மறந்து
ஏளனம் செய்கின்றார் மனிதம் துறந்து

ஈழப் போரின் இறுதி நாட்களை
எழுத்தில் வடிக்கவும் இதயம் இல்லை

எம்மினத்தின் வலி எங்கள் வலி
எம்மினத்தின் குருதி எமது குருதி

ஈழத்தில் சிந்திய இரத்தத் துளிகள்
இலத்தின் இதயத்தில் ஊன்றிய விதைகள்

மறந்து போக முடியாது
ஈழமின்றி எமக்கு விடியாது

எழுதி வைத்து தீர்ப்போம் பழி
ஈழ தேசத்தை அடைவோம் உறுதி

வீழ்ந்தான் தமிழன் என்று உலகம் நினைக்க
வந்தான் ஒருவன் புலிக் கொடி பறக்க

தேசியத் தலைவராக அண்ணையைக் கொண்டாள் –
தமிழ்த்தேசிய அரசியலை பொதுவெளியில் சிறக்கத் தந்தான்

நாம் தமிழர் என ஓங்கி உரைத்தான்
ஞாலத் தமிழரை ஓரணி சேர்த்தான்

ஆற்றல் மிக்க இளைஞரை ஈர்த்தான்
மாற்றம் ஒன்றே நிலையானது என்றாள்

தேசியத் தலைவர் வகுத்த பாதை
செந்தமிழன் வழி நடத்தும் பாதை

ஒற்றுமையாய் இளமாவதே நன்று ஓங்கிடுவோம்
நாம் தமிழராய நின்று எட்டுத்திக்கும் பறக்கட்டும்

புலிக்கொடி ஏழிசையுமினி
பாடட்டும் முறைப்படி

விதைப்பது நமது கடன்
முளைப்பது இனத்தின் கடன்

அகப்பகையால் வீழ்ந்தோம்
அன்று ஆர்ப்பரித்து எழுந்தோம்

இன்று இனமாக எழுவோம்
நின்று ஈழத்தை எடுப்போம்

வென்று உறங்குகிற மாவீரா மன்றில் கண்டு
ஊறுகுடா மாவீரம் நெஞ்சில் கவன்று

ஈழம் என்றும் எங்கள் இனத்தின் தேசம்
அடைந்தே தீருவோம் அது எங்கள் சுவாசம்

எந்த யுகத்தில் போர்களில்லை
அட எந்த யுகத்தில் தோல்வியில்லை

அந்த யுகத்தை எருவாக்கு நீ
அடுத்த யுகத்தை உருவாக்கு

வீழ்ந்தே கிடப்பது வீரமல்ல!
முள்ளி வாய்க்கால் முடிவல்ல!!!

திரு. இராமகிருஷ்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles