வேண்டுமிங்கே நல்லாட்சி!
வாக்குகளை போட்டாச்சு!
வந்திடுமே நல்லாட்சி!
காத்திருந்த காலங்களும்
கனவாகப் போயாச்சு!
மனிதகுலம் தழைத்திடவே
வந்திடுமா புதுஆட்சி?
இன்னுமேன் திருந்தவில்லை
தாயகத்தில் அரசாட்சி?
இனியேனும் மலராதோ
மக்களிடம் மகிழ்ச்சி!?
ஏழ்மை நீங்கிடவே
எதிர்காலம் சிறக்காதோ?
பசுமையாக மாறாதோ?
பஞ்சமும் தீராதோ?
ஏழைகளின் கனவாக
கல்வியும் மாறியதே!
மாற்றம்தான் வந்திடுமோ
மாணவர்கள் கற்றிடவே!
பெண்ணியம் காத்திடவே
பேராட்சி அமைந்திடுமா!
வனமிங்கே அழியுது!
மலையெல்லாம் மறையுது!
மழையும்தாம் பெய்யாது
நம்பூமி வறள்கிறதே!
மனசுதான் வரலையோ!
மதியும்தான் மாறலையோ!
நதியும் வத்திடுது!
வயிறும் காய்ந்திடுது!
விளைநிலம் காத்திடவே!
விவசாயம் பெருகிடவே!
உணவளிக்கும் விவசாயி
உயிருடன் வாழ்ந்திடவே!
தாயகத்தில் கண்டுகொள்ள
தலைவனும் யாருமுண்டோ?
கேட்டவரு யாருப்பா?
இலவசமும் ஏனப்பா?
விலைவாசி குறைந்திடவே
உள்ளமும் ஏங்குதப்பா!
மெய்யது புரியுமெனில்
உனதாட்சி சீராட்சி!
தன்னலம் பாராமல்
தாய்நாட்டைக் காப்பீரோ?
வீதிக்கொரு மருத்துவமனை!
விலைக்கேற்ப மருத்துவம்!
வாக்களித்த மக்களும்
வாயடைச்சு நிக்கிறது!
சாக்குகளைச் சொல்லட்டும்!
சமுதாயம் கேட்கட்டும்!
இனியேனும் மலரட்டும்
தமிழகத்தில் நல்லாட்சி!
அதற்காக உழைத்திடனும்
நாம் தமிழர் கட்சி!
திரு. மு.ஷாஜஹான்,
அபுதாபி மண்டல செயலாளர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.