அக்டோபர் 2022
வறுமையிலும் நேர்மை
அழகான சிற்றூர் ஒன்றில் விவசாயி, ஒருவர் வாழ்ந்து அவருக்கு இரு மகன்கள், இருவரும் இளம் வயதை எட்டி இருந்தார்கள்.
ஒரு நாள் விவசாயி தனது இரு மகன்களையும் அழைத்தார். தனது வயோதிகத்தை குறித்து தனது மகன்களிடம் கவலை கொண்டார். மகன்கள் இருவரும் தனது தந்தையிடம், தாங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றனர். நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என உறுதியளித்தனர்.
முதியவர் ஒரு நாள் இறந்து போனார். சில பேராசை எண்ணம் கொண்டவர்கள் சகோதரர்கள் இருவரையும் அவர்களின் வலையில் சிக்க வைக்க எண்ணிணார்கள். பிறகு அவர்களிடம் உள்ள சொத்துக்களையும் அபகரிக்க முடிவு செய்தனர்.
முதலில் முத்த சகோதரரிடம் இளையவரைப் பற்றியும் இளைய சகோதரரிடம் மூத்தவரை பற்றியும் பொய்களைக் கூறினார்கள். அதனை இருவரும் உண்மையென நம்பினார்கள்.
அவர்களிடம் திட்டம் போல் இருவரையும் பிரித்தார்கள். அவர்களின் சொத்துக்களை தங்கள் வசமாக்கினார்கள். அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார். பிறகு தான் தாங்கள் ஏமாற்றப் பட்டோம் என்பதை சகோதரர்கள் இருவரும் உணர்ந்தார்கள்.
கேட்பார் சொல் கேட்டு தங்களது சொத்தை இழந்து விட்டதை எண்ணி வருந்தினார்கள். தங்களது தந்தை கொடுத்த இரும்புப் பெட்டியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு தெருவில் நடந்தார்கள்.
எப்படி வாழ்ந்த பிள்ளைகள் இப்படி ஆகிவிட்டார்களே எனச் சிலர் வருத்தப்பட்டார்கள். சிலர் அந்தப் பேராசை மனிதர்களை திட்டித் தீர்த்தார்கள். சிலர் தந்தையின் சொத்தைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத மடையர்கள் என வசை பாடினார்கள்.
थाने எல்லையைக் கடந்தார்கள், எல்லையில் உள்ள கோவிலில் இருவரும் தங்கினார்கள். அன்றிரவு இங்கே உறங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என எண்ணிணார்கள். இரவு உறக்கத்தில் கனவில் தந்தை வந்தார். பெட்டிக்குள் அவர்களுக்கான பூர்விகச் சொத்து விபரத்தை கூறி மறைந்தார்.
இரவில் நடந்ததை இருவரும் மறந்துபோய் இருந்தார்கள்.பிறகு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு தங்களது தந்தை தங்களது பக்கத்து ஊரில் சிறிய அளவு பூர்வீக நிலம் கொஞ்சம் இருப்பதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.
இருவரும் பெட்டியை திறந்தார்கள். அதில் அந்த விவசாய நிலத்திற்கான பத்திரமும், சிறு ஓலை ஒன்றும் இருந்தது. அந்த ஓலையில் ஒரு மந்திரச் சொல்லும் இருந்தது உழைப்பே உயர்வு’ வறுமையிலும் நேர்மை’
இருவரும் தங்களிடம் இருந்த தரகப் பெட்டியை விற்று விவசாயத்திற்கான பொருட்களை வாங்கினர்.
விவசாய நிலத்தினை அவர்கள் சமன் செய்யும் போது அங்கு ஒரு மண்கலயம் ஒன்று வெளிப்பட்டது. அதில் இருந்த அனைத்தும் தங்கக் காசுகள், கிடைத்த புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைக்க அவர்கள் இருவரையும் பாராட்டினார்கள். அரசாங்கம் இருவருக்கும் பெரும் வெகுமதியை அவர்களுக்கு பரிசாகக் கொடுத்தது. அவர்களுடைய வறுமையிலும் அவர்களின் நேர்மையையும் பாராட்டியது. அவர்களின் உண்மை நிலையை கேட்டு அறிந்து அவர்களுக்கு உதவிட அரசாங்கத்தினர் எண்ணிணார்கள்.
அரசாங்கத்தின் முயற்சியில் அந்த பேராசை மனிதர்களிடம் அவர்களின் சொத்துக்களும் உடைமைக்களும் திரும்பப் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த ஏமாற்றுக்காரர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களின் உடைமைகள் அவர்களிடம் திரும்ப வந்ததில் சகோதரர்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அரசாங்கம் கொடுத்த வெகுமதியுடன் அவர்களின் பூர்வீக நிலத்தில் விவசாயத்தை மேற்கொண்டார்கள். வருடந்தோறும் அவர்களின் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. நல்ல வருமானமும் கிடைத்தது. அதனைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். தங்களால் இயன்ற அளவு பிறருக்கும் உதவி செய்து மகிழந்தனர். வறுமையிலும் அவர்களின் நேர்மையும், கடின உழைப்பும் சகோதரர்கள் இருவரையும் வாழ்க்கையில் உயர்த்தியது.
குறிப்பு:
வறுமையிலும் நேர்மையும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் உயரலாம்.
திரு. பா.வேல்கண்ணன்,
துணைத்தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.