அக்டோபர் 2022
“அன்றும் இன்றும் என்றும் ஆரியத்துக்கு நேரெதிர் தமிழியமே!”
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்கள் தொடர்வண்டிப்பாதை அமைக்க முயன்றபோது, வடமேற்கு சிந்துப் பகுதியில், மண்மூடிய மேட்டுப் பகுதியின் கீழ் புதைந்திருந்த ஒரு நகர அமைப்பைக் கண்டறிந்தனர். சங்கிலித்தொடர் போல பல்வேறு நகரக் கட்டுமானங்கள். வடக்கே காசுமீரத்தின் “மண்டா” நகரம் முதல், தெற்கே மகாராட்டிரத்தின் “தைமாபாத்” வரை நீண்டிருக்கையில், அவற்றின் பண்பாட்டுக் கூறுகளின் ஒத்த தன்மையின் அடிப்படையில், “சிந்து சமவெளி நாகரீகம்” என அதற்குப் பெயரிட்டனர். அதற்குக் காரணம், அத்தனை நகரங்களிலும், ஒன்றுபோல அச்சுப்பிசகாத அளவீடுகளில் கிடைத்த, சுட்ட செங்கற்கள். அதுவரை ஆரிய வேதகாலப் பண்பாடே, இந்திய ஒன்றியத்தில் பழமையான வரலாறு எனச் சொல்லப்பட்ட கூற்றைச் சுக்குநூறாக உடைத்துப் போட்டது, அகழ்ந்தாய்ந்து வெளிப்பட்ட அந்தக் கல்.
சுட்ட செங்கல் கட்டிடங்கள், குப்தர்கள் காலம் வரை வேறெங்கும் கிடைக்காததால், இது முற்றிலும் வேறுபட்ட ஒரு நகர நாகரீகம் என்பதை, அக்கல் பலருக்கும் எடுத்துக் காட்டியது. அதன் மொழியும் , சித்திர எழுத்துக்களாகப் படிக்க முடியாதபடி, பழமைவாய்ந்ததாக இருந்தது. எவ்வாறாயினும், ஆரிய வேதகால மேய்ச்சல் தொழில்வழிப்பட்ட கிராம நாகரீகத்தினின்று, முற்றிலும் மாறுபட்டு, உழவையும், பன்னாட்டு வணிகத்தையும் அடிப்படையாகக் கொண்ட மேம்பட்ட, வளம்கொழிக்கும் நேர்த்தியான நகர நாகரீகமாக, சிந்துவெளி இருந்தது என்பதை இன்றுவரை கிடைக்கும் தொல்பொருட்கள் நிறுவிய வண்ணம் உள்ளன. நிற்க!

பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு, ஒன்றியத் தொல்லியல் துறையால் நிறுத்திவைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியைத் தொடர வேண்டி, விடாமுயற்சியுடன் நடத்தப்பட்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக, நான்கு, ஐந்தாம் கட்ட ஆய்வுகளை, தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையே நடத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அப்போது சிவகங்கைச் சீமையின் மணி வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை தான், சுட்ட செங்கல் கட்டுமானங்களும், சிந்து சமவெளியில் காணப்பட்ட சித்திர எழுத்துக்களோடு அப்படியே பொருத்திப் போன பானையோட்டுக் குறியீடுகளும் ( 225, 307, 316 365 ) இன்னும் ஆறாம் கட்ட அகழ்வாய்வு முடிவுகளுக்காகத் தமிழ் கூறும் நல்லுலகம் ஆவலோடு காத்திருக்கிறது, விடையறியா வரலாற்றுப் புதிர்கள் பலவற்றை ஆதாரங்களோடு அவிழ்த்திடும் விழைவோடு!
பல்வேறு தேசிய இனங்கள், இணைந்து வாழும் தேசங்களின் தேசமான இந்திய ஒன்றியம், பழமைவாய்ந்த பல்வேறு தொல்லியல் சிறப்புமிக்க ஆய்விடங்கனைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அரப்பா உள்ளிட்ட இந்துவெளி நகரங்களும், கீழடி முதலான வைகைநதி நகரங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என ஆணையிட்டுக் கூறலாம். காரணம் முன்னது ஆரியத்தின் ஆர்ப்பரிப்பை அடக்கியது: பின்னது, தமிழியத்தின் தொன்மையைத் திரைநீக்கிக் காட்டியது. ஆரியத்துக்கும், தமிழியத்துக்குமான பண்பாட்டுப் போர், சிந்துவெளிக்கும் முந்தையது; சமகாலத்துக்குப் பிந்தியும் தொடரப்போவது. இவற்றுக்கிடையே தொடர்பேயில்லாமல் ஆட்சி அதிகாரம் சிட்டியதால் மட்டுமே, தன்னையும் ஒரு சித்தாந்தமாக நினைத்துக் கொண்ட “திராவிடம்” எனும் கயமைக் கோட்பாடும், அவ்வப்போது குறுக்கும் மறுக்கும் கடந்து போகும் நகைமுரணையும், இனியும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா? என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் முன்பாக, ஆரியம், தமிழியம், திராவிடம் இவற்றின் வரையறையைத் தெரிந்து கொள்வது, பல்வேறு குழப்பங்களைத் தவிர்க்க உதவி, மெய்ப்பொருளை நம் மனக்காட்சிக்குத் தரும்.

தமிழியம், ஆரியம், திராவிடம்: அடிப்படை வரையறை விளக்கம்:
மத்திய ஆசியாவினின்று மேய்ச்சல் நிலங்களைத் தேடி, “சப்தசிந்து” எனும் வடமேற்கு ஒன்றிய நிலப்பரப்புக்குள் முதலில் ஊடுருவி, பின் வட இந்தியா முழுமையையும் உள்ளடக்கிய “ஆரியவர்த்தம்” நெடுகப் பரவி வாழ்ந்த சமசுகிருத வேதங்கள் சொல்லும், பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு கற்பிக்கும், நால்வருண சனாதன மதக்கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் கொள்கையை “ஆரியம்” எனலாம். மாறாக, “தமிழியம்” என்பது “தமிழ்” எனும் தொல்மொழியினைப் பேசுகின்ற இனத்தாரது அக, புற வாழ்வியலை விளக்கும், பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை கூறும் திணை வாழ்வியல் முதல் கடல் தாண்டி வணிகம் செய்தது வரையிலான படிப்படியான பரிணாம வளர்ச்சி பெற்ற செழுமையான சமூகம் பற்றிக் கூறும் தத்துவம். ஏரும் போரும் முதற்தொழிலானாலும் கூட, அப்போரிலும் அறத்தைப் பின்பற்றியதோடு, “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என சமத்துவத்தையும், உயிர்மநேயத்தையும், பன்னெடுங்காலத்துக்கு முன்பே பாட்டாக வடித்த பேரறிவை, தன்னகத்தே கொண்ட சீர்மைமிக்க மரபினத்தின் சித்தாந்தம், தமிழியம்.
“திராவிடம்” என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, எதிரெதிரே நின்று பொருது கொண்டிருக்கும் இவ்விரு தத்துவங்கள் போல, வரலாற்று, பண்பாட்டு, மெய்யியல் அடிப்படை இல்லாத. உள்ளீடற்ற ஒரு அரசியல் பிழைப்புவாதக் கட்டுக்கதை. இதற்கென்ற தனி மொழியோ, இனமோ, நிலப்பரப்போ, ஏன் தெளிவான வரையறை கூட இல்லாததே. திராவிடம் என்பது புரட்டு என்பதை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்கும். திராவிடம் என்ற சொல்லே, “பஞ்ச திராவிடர்” என ஆரியத்தால் குறிக்கப்பெற்ற, தெற்கின் ஐந்து பெருநிலங்களில் வாழ்ந்த ஆரியப்பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என ஆரிய இலக்கியங்கள் சொல்கின்றன.
“ஆரியம்” என்ற சொல் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல, களப்பிரர் காலம் வரை, “திராவிடம்” என்ற சொல், தமிழிலக்கியங்களில் ஓரிடத்தில் கூடப் பயின்றுவரவில்லை. தெற்கில் தோன்றிய உலகமுதுமொழி தமிழோடு, ஆரியர்களின் சமசுகிருதமும் சேர்ந்து, திரிபடைந்து உருவான தென்னக மொழிகளைக் குறிக்கும் பொதுச்சொல்லே “திராவிடம்” என மொழியியல் ஆய்வறிஞர்கள் கூறுவதையே, நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில், மொழியான தமிழ், இன்றுவரை செந்தமிழ் முரசு
கன்னித்தமிழாக உயிர்ப்புடன் இருக்கையில் தமிழ் மொழிக்குடும்பம்” என்பதே “தென்னக மொழிக்குடும்பம்” என்பதற்குச் சரியான மாற்றுச் சொல்லாடலாக இருக்குமே தவிர, திராவிடம் என்பதன்று. மேலும் “திராவிடர்” என்பது ஓர் இனம் என்ற கருத்து, அந்தத் தென்னக மொழிகளைப் பேசும் பெரும்பான்மையான மக்களாலேயே மறுக்கப்படுகிறது. அனைவருக்கும் தத்தம் தனிப்பட்ட மொழியடையாளங்கள் இருக்கும்போது, பொதுவான இந்த திராவிட அடையாளத்தைச் சமகாலத்தில், ஒரு பேசுபொருளாகக் கூடப் பிற தென்னக மாநிலங்கள் ஏற்பதில்லை.
தமிழ்நாட்டில் மட்டும் உலவித்திரியும் இந்தத் திராவிட பூதம், சில சந்தர்ப்பவாதிகளின் அரசியல் தேவைகளுக்காகப் பொய்யால் இட்டுக்கட்டப்பட்ட கயமைத்தனமான கருத்தாக்கம் என்பதை, உள்ளபடியே நம்மால் நிறுவ முடியும். பிற்காலப் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ்நிலத்தைத் தமிழர் அல்லாத பலர் ஆனத் தொடங்கினர். நிலமும், அதை ஆளும் உரிமையும் இவர்கள் வசம் வந்த காலத்தில் தான், ஆரிய சனாதனம் உண்டாக்கிய சாதிய வேற்றுமைகள், வலிந்து இங்கு திணிக்கப்பட்டன. எந்த அளவுக்கு என்றால், மலமள்ள மட்டுமே ஒரு குறிப்பிட்ட சாதியினரை தன் நிலத்தில் தலைமுறை தலைமுறையாக ஒடுக்கி வைத்திருந்து, அவர்களை இங்கும் குடியேற்றிய இழிவரலாறு தான், இந்த தமிழரல்லாதவர்களுடையது.
நால்வருணம் பேசும் ஆரியத்தின் அடிவருடிகளான இவர்கள், தமிழர்தம் உணவு, உடை, பழக்கவழக்கங்கள். பண்பாடு, மொழி, இலக்கியங்கள் என எல்லாவற்றிலும் நீக்கமற தாங்கள் தொழுதேற்றும் ஆரியக் கருத்துக்களை நிறைத்து, தமிழர் தத்தம் உண்மையடையாளங்களே இவைதாம் என நம்பும் வண்ணம் மூளைச்சலவை செய்து வைத்திருந்தனர். கல்வி மறுக்கப்பட்டு, தமிழர்தம் இலக்கியச் செல்வங்கள் மறைக்கப்பட்டு, நிலமற்ற கூலிகளாக, இவர்களை அண்டிப் பிழைக்கும். இவர்கள் விரும்பியபடி மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டவர்களாகத் தமிழினம், தன் வலுக்குன்றி இருந்த காலமது. தமிழர்களின் நிலம், வளம், ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் இவர்களிடம் குவிந்திருந்தது இந்தக் கொடுமையைச் சாத்தியப்படுத்த வல்லதாக இருந்தது ஒரு வரலாற்றுப் பெருந்துயரமே!
பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், இறுக்கமான சாதியப் படிநிலைகள் ஓரனவு தகர்க்கப்பட்டு, கல்வி பொதுமைப்படுத்தப்பட்டு, தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டு, சங்க இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பல முன்னேற்றங்கள் தமிழர் வாழ்வில் நிகழத் தொடங்கினாலும் கூட, அது போதுமானதாக இல்லை. காரணம், இந்திய ஒன்றியம் முழுக்க ஆரியப்பார்ப்பனர்கள், தங்கள் சூழ்ச்சியின் வாயிலாக ஆங்கிலேயர்களிடம் வேத, இதிகாசக் கதைகளைச் சொல்லித் தாங்களே இந்நிலத்தின் “பூர்வகுடிகள்” என்று நம்பவைத்து, பெருவாரியான அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தனர். அவர்களின் விசுவாசம் மிகுந்த கங்காணிகளாக, தமிழரல்லாத திராவிடத் தலைமைகள் இருந்தன. எதிரியாக எப்போதும் இருக்கும் ஆரியமும், துரோகியாக இல்லாத திராவிடமும் சேர்ந்து, தமிழர் நிலத்தில் தமிழரையே அடிமையாக வைத்திருந்தன.
இரு உலகப்போர்களுக்குப் பிறகு, சக்தி சமநிலை மாறிய பன்னாட்டுச் சூழலில், ஆங்கிலேயர்கள், தாம் பீரங்கிகளால் கட்டிய கதம்பமாலையாம் இந்திய ஒன்றியத்தை, ஆரியத்துக்குத் தாரைவார்த்துக் கிளம்பினர். அப்போது தென்னகம் முழுக்க “மதராஸ் மாகாணம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அப்போது தமிழரல்லாத தலைமைகள், தங்களை ஆரியத்தின் எதிர்ப்பாளர்களாகக் காட்டிக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை மீளக் கைப்பற்றும் நோக்கத்தில் இருந்தன. 1956க்குப் பின், மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தத்தம் மொழிவழித் தேசிய இனங்களின் ஆளும் உரிமையைத் தென்னக மாநிலங்கள் தக்கவைத்துக் கொண்டன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், அது நிகழாமல் தடுக்கும் உயரத்தில், செல்வாக்குடன் தமிழரல்லாத தலைமைகள் கோலோச்சின.
இவை, தாமே “தமிழர்களின் பிரதிநிதிகள்” என்றும், ஆரியத்தின் “தீவிர எதிர்ப்பாளர்கள்” என்றும் கதைபேசி, அதிகாரத்தைத் தங்களிடமே வைத்துக் கொண்டு, “திராவிடம்” என்ற பொது அடையாளத்தைத் தமிழர்கள் மேல் திணித்து, தமிழையும், தமிழர்களையும் ஏமாற்றிப் புறந்தள்ளி, இனப்பற்றை மட்டுப்படுத்தி நீர்க்கச்செய்தனர். ஆரியத்துடன் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு, தமிழியத்தை ஒளிக்க, மறைக்க, திரிக்க, அழிக்க, அன்றிலிருந்து இன்றுவரை வேலை செய்து வருவதே. இவர்களின் செயல்திட்டம். 2009 ஈழத்தில், தமிழின அழிப்பில் ஆரியத்துடன் கைகோர்த்து, தமிழரல்லாத தமிழ்நாட்டு அரசியல் தலைமைகள் முதுகில் குத்தியபோது தான், சுடும் உண்மைகளை உணர்ந்த தமிழர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தங்களிடம் இல்லாமல் போன அதிகாரத்தை மீளப்பெறக் கேட்கும்போது, ஆரியத்தின் கைக்கூலிகளே, தமிழியத்தைத் தூக்கிப் பிடிக்கும் “தமிழ்த்தேசியர்கள்” என்ற அவதூறைத் தங்கள் கொத்தடிமைகள் மூலமாகப் பரப்பி வருவதே, திராவிடத்தின் அண்மைக்காலச் சதி வரலாறு. சமகாலத்தில் விழிப்புணர்வடைந்த தமிழர்கள், தங்களின் வேர்களை நோக்கிப் பயணப்படத் தொடங்கியதன் விளைவு, இன்று தமிழியம், ஆரியம், திராவிடம் போன்ற கருத்தாக்கங்கள் கூர்நோக்கப்பட்டு, எப்போதும் மாறாத உண்மைகள் பல ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழியம், ஆரியம் – திராவிடம்: பண்பாட்டுத் தள ஒப்பீடு;
கிடைத்தவற்றில் மிகப்பழமையான தமிழலக்கியமான தொல்காப்பியம், இலக்கணங்களை இலக்கியத்தின் வழி சொல்கின்ற மொழியியலின் அடிப்படைகளான எழுத்து, சொல் உருவாக்கத்தை விளக்கி, மெய்யியலில் அடிப்படைகளான அகப்புற வாழ்வியல் கூறுகளைப் பொருளதிகாரத்தில் விளக்கும் முழுமையான நூல். இது போன்ற ஒரு நூலை, அதன் சமகாலத்தில் எந்த நாகரீகத்தாலும் எழுத அல்ல; கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவு, தரமிக்கது. இத்தனைக்கும் தன் காலத்துக்கு முந்தைய பல நூல்களையும், அதைப்பாடிய புலவர்களையும் மேற்கோள் சாட்டுவதன் மூலம், தனக்கும் முற்பட்ட சிறந்த பல நூல்களின் இருப்பைச் சொல்லாமல் சொல்லும், தரவுச்சுரங்கம், தொல்காப்பியம். அவ்வகையில் தமிழியச் சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகளை உள்ளடக்கிய பண்பாட்டு நூலாகத் தொல்காப்பியத்தை நாம் கருதவோமானால், அதன் வாழ்வியல் மற்றும் மெய்யியல் கூறுகளை உற்றுநோக்க வேண்டும்.
ஆரிய சனாதனம், தனது எல்லாவித தேவைகளுக்கும், வேதநூல்களையே சார்ந்திருக்கிறது. தொல்காப்பியம் போல அல்லாமல், மதத்தைப் பெரும்பாலும் முன்னிறுத்தி, சடங்குகள் வழிபாடுகளைப் பற்றி விளக்கும்போது, ஆங்காங்கே சில செய்திகளையும் நான்கு வேதங்கள் சொல்கின்றன. இவற்றையொட்டி எழுதப்பட்ட பல நூல்கள், வேதங்களில் இருந்து தருவிக்கப்பட்டதாகப் பல மெய்யியல் மற்றும் வாழ்வியல் கூறுகளைப் பகிர்கின்றன. ஒப்பீட்டளவில் தமிழியம், அறிவியல் முறைப்படி உலகம் தோன்றுதலை அணுகும்போது, வேதம் வழக்கமான இறைவனின் படைப்புக் கோட்பாட்டை முன்வைக்கிறது. தொல்காப்பியம், திணைவழி வாழ்வியலை முன்னிட்ட நிலத்தோற்றங்கள், காலநிலை அடிப்படையிலான விழாக்கள், வழிபாடுகளைச் சொல்லும்போது, வேதம் புரியாத செந்தமிழ் முரசு
மொழியில், சிக்கலான பலியிடுதல் மற்றும் யாகங்களை, ஒரு சாரார் மட்டுமே நடத்தக்கூடியதாக, அரசன் முதல் ஏழை எளியோர் வரை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துகிறது.
தமிழியத்தின் இயற்கை, நீத்தார், இன குல முன்னோர்கள், உயிர்ப்பின் தொடக்கமான பெண் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டு இறைபியலுக்கு நேரெதிராக, பெருந்தெய்வங்கள் மற்றும் பெரும்பான்மை ஆண் கடவுளரை துதிக்கிறது, ஆரியம். மெய்யியல் மீட்சிக்கும், இறைச்சிந்தனைக்கும் கூட இடைத்தரகர்களாக வேதியர்கள் மற்றும் குருக்களை அணுகும் ஆரியப்போக்குக்கு மாற்றாக, வாழ்வின் பொருளை நேரடியாகத் தானே உய்த்துணர, அறம் சார்ந்து, பொருளீட்டி, இல்வாழ்க்கையில் இன்பந்துய்த்துத் தனக்கும் பிறர்க்கும் பயன்பட்டு, இசைபட வாழ்தலே, துறவுக்கும் மேவான மெய்யியல் எனத் தமிழியம் சொல்கிறது. பிறரையும், சமூகத்தையும் அறிந்து கொள்ள, முதலில் தன்னை அறிதலை, சுதந்திரமான புத்தாக்கச் சுயசிந்தனையை வளர்க்கத் தமிழியம் சொல்லும்போது, கூட இருக்கும் மனிதர்களை விடவும், மதத்தைப் பிடித்துத் தொங்கும், ஏற்கனவே எழுதப்பட்ட வேதங்களைக் கற்றறியவும், மோட்ச உலகின் கடவுளர்களையும் குளிர்விக்கும் சடங்குகளையும் பழகிக் கொள்ளவும் மட்டுமே ஆரியம் பணிக்கிறது.
மாற்றத்தை எப்போதும் உள்வாங்கி, தன்னைப்போலே பிறரை எண்ணச்சொல்லும் சமத்துவமும், வேற்றாரை வரவேற்று விருந்தோம்பும் செழித்த வணிகம் மற்றும் உற்பத்திச் சமூகமாக தமிழினம் இருக்கும்போது, ஆரியம் மாற்றாரை அழித்து, அவர்தம் வளங்களைக் கவர்ந்து கொள்ளும், உழவறியாத நாடோடி மேய்ச்சல் சமூகமாக இருந்திருக்கிறது. பிறப்பால் வேறுபாடு கற்பித்து, சேர்ந்து உண்ண, அருகருகே வாழ, தொழில் செய்ய, பொருளீட்ட சொத்துக்கள் வாங்க, கலந்து மணம் புரியத் தடைவிதித்து, இவ்வளவு ஏன்? கடல் தாண்டக் கூட அச்சப்பட்ட சமூகமாக ஆரியம் இருந்தபோது, விளைபொருட்கள், கைவினைக் கலை வடிவங்கள், விலைமதிப்பற்ற உயர் உலோகங்களால் ஆன அணிகலன்கள் ஆகியவற்றை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பியும், கொணர்ந்தும், பன்னாடுகளுடன் இணக்கமான உறவுகளுடன் இருந்தது, தமிழினம்.
எவ்வாறாயினும், காலத்துக்கேற்றபடி, இலகுவான நெகிழ்தன்மையுடன், அனைவரையும் அனுசரித்து ஆதரிக்கும் பெருந்தன்மையுடன் கூடிய முற்போக்கினைத் தமிழியம் முன்மொழிகையில், சட்டதிட்டங்களை உயிரைக் கொடுத்தேனும் காக்கச் சொல்லி, இறுக்கமான சமத்துவமற்ற சமூகத்தை நிலைநிறுத்த, “என்றும் மாறாதது” எனும் பொருள் கொண்ட ஆரிய சனாதனம் கட்டளையிடுகிறது. இவற்றை எந்நாளும் எதிர்த்து, சங்க இலக்கியங்கள் தொடங்கி, பக்தி இலக்கியங்கள் தொடர்ந்து, இன்றுவரை களமாடி வருவது தமிழியம் மட்டுமே! இன்றும் ஆரியத்தை பண்பாட்டுத் தளத்தில் எதிர்க்கும் தத்துவார்த்த வலிமையும், துணிவும், நெஞ்சுரமும், நின்று விளையாடும் தெளிவும், தமிழியத்துக்கு மட்டுமே உண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் கற்றும், பெற்றும் கொண்ட ஆழமான கருத்தியல் வனமே, அதற்கு முக்கிய காரணம்.
திராவிடத்துக்கு. இந்தச் சிக்கல்கள் எதுவுமே கிடையாது. அண்மையில் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டும் தோன்றியது என்பதோடு, ஆரியத்தின் பெரும்பான்மையான கூறுகளை, இல்லத்துள்ளும், உள்ளத்துள்ளும் கடைபிடிக்கும் கள்ள எண்ணத்தோடு, பெயரளவிலான கடவுள் மறுப்பு, மானுடவியல் அடிப்படையற்ற தட்டையான பெண்ணியம். சொற்களில் மட்டும் பொங்கி வழிந்து, நாளாந்த வாழ்வில் பல்லிளிக்கிற சமூக நீதி, அறம் மருந்துக்கும் இல்லாத பொருள் சார்ந்த வாழ்வு, பொருளாதாரத்துக்கு மட்டுமேயான கல்வி, வருமானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வேலைகள், சுரண்டலின் அடிப்படையிலான நேர்மையற்ற தொழில்கள், பணத்தை மட்டும் பிறப்பிவிருந்து இறப்பு வரை கட்டியழும் விழுமியங்கள் ஆகியனவே, திராவிடத்தின் வாழ்வியல் மற்றும் மெய்யியல் கூறுகள். அதை மீறிச் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
தமிழியம், ஆரியம் – திராவிடம்: மொழி, கலை, இலக்கியத்தள ஒப்பீடு:
தாய்த்தமிழின் சொற்கள், பெரும்பாலும் காரணப் பெயர்களேயன்றி, இடுகுறிப் பெயர்கள் அல்ல. தமிழைத் தொழும் தமிழியம், தொல்காப்பிய காலத்தே “எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே” என்று கூறியதோடு, ஒலிகளின் அடிப்படையில் சொற்பிறப்பியல், கிளவியாக்கம் உட்பட மொழியின் மூல விதிகளைச் சொல், எழுத்து, பொருள் அதிகாரங்கள் ஊடாகத் தெளிவாக விளக்குவதால், வேர்ச்சொல் ஆராய்ச்சிகள் வழி, உலக மொழிகளுக்கு மூலமாகவும், சமசுகிருதம் உள்ளிட்ட ஒன்றிய மொழிகளுக்குத் தாயாகவும், தொல்தமிழ் இருப்பதை, மொழி ஞாயிறு பாவாணர் தொடங்கி, அண்மையில் ம.சோ.விக்டர் ஐயா வரையில் பலர், ஐயந்திரிபற விளக்கியுள்ளனர். ஆனால், பெரும்பான்மையான தமிழ்ச்சொற்களை மூலமாகவும், மேலைத்தேய ஐரோப்பிய மொழிச் சொற்களை மீதமாகவும் கலந்து உருவான சமசுகிருதத்தின் மொழியியல் அடிப்படை, இது போன்ற ஆய்வுகள் மற்றும் கருதுகோள்களுக்கு உடன்படாத, கலந்து இண்டிய களி போன்றது. எழுத்துருக்களும், தமிழை விட சமசுகிருதத்துக்கு, மிகப் பின்னாலேயே உருவானது, இதைத் தெளிவாக விளக்கும் ஒரு கூறு.
மொழியைக் கற்றலும், கற்பித்தலும், தமிழியத்தில் பாலின சமத்துவத்துடன் கூடிய, சமூகத்தின் அனைத்து தட்டுகளில் வாழ்வோர்க்கும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்று. எனவே தான், சங்க இலக்கியங்களில் அரசர்கள், வேளிர்கள் ஆகியோரில் இருந்து சாமானியர்கள் வரை, பலரும் புலமையுடன் பல பாடல்களை இயற்றியுள்ளனர். அது மட்டுமா? “எழுதப்பட்ட நாகரீகத்தின் தொட்டிஸ்” எனப்படும் கிரேக்க இலக்கியங்களில் கூட அரசிகள் சிவரைத் தவிர, பெண்கள் பாடல்கள் புனைந்ததில்லை. ஆனால் தமிழ்ச்சங்கங்களில் தொகுக்கப்பட்டவற்றில் மட்டும், நாற்பதுக்கும் மேற்பட்ட அரசகுலப் பெண்கள், குயவர் மகள், வேட்டுவப்பெண் என பல்வேறு பின்புலங்கள் கொண்ட பெண்பால் புலவர்கள், பேரரசர்களையே சாடும்படியும், உள்ளத்தின் விருப்பங்களை வெளிப்படையாக உரைக்கும் வண்ணமும், சமூகம் மேன்மை பெற்று விளங்கியதாய் இருந்தது.
மேலும் எழுத்தின் அருமை புரிந்ததால்தான் என்னவோ? 27,000 அடிகளுக்கும் அதிகமாக, 4000 பாடல்களுக்கும் மேலான அனுபவத்தெறிப்புகளாக, செறிவான செவ்விலக்கியங்கள், சங்க காலத்திலேயே தமிழியத்துக்கு வாய்த்திருக்கின்றன. இவை “புனையப்பட்ட புரட்டுக்கள்” என்போரது நெற்றிப் பொட்டில் நேராக அடிப்பது போல, தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் தடங்களில் எல்லாம் சமயவறைப் பானைகளில் இருந்து, பொன்கட்டிகள் வரை எழுத்துக்கள், குறிப்பாகப் பெண்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருத்தல், கல்வி எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் கிடைக்குமாறு செய்த, அறிவார்ந்த இனமாகத் தமிழினம் இருந்தது என்பதை உணர்த்தும். ஒன்றியத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களிலும் 60%க்கும் மேற்பட்டவை, தமிழ்க் கல்வெட்டுக்களே. பேரரசர் அசோகரின் வடமொழிக் கல்வெட்டு, அவரின் புத்த தம்மப் பரப்புரையை, நாடு முழுவதும் பாறைகளில் செதுக்கிட ஆணையிட்ட அதே காலத்தில் உருவாக்கப்பட்ட செந்தமிழ் முரசு
தமிழ்நாட்டின் மிகப்பழமையான புள்ளிமான் கோம்பைக் கல்வெட்டு, ஒரு சிற்றூரில் களவாடப்பட்ட ஆதிரைக் கூட்டங்களை மீட்கும்போது, இறந்த வீரனொருவனின் தீரத்தைச் சொல்லும் நடுகல்லாக இருப்பதே ஆரியத்துக்கும், தமிழியத்துக்குமான அடிப்படை வேறுபாடு.
தமிழியத்தின் இலக்கியங்களும் பெரும்பாலும் மதச்சார்பற்று, அறக்கருத்துக்களை வலியுறுத்துவதும், மனிதத்தையும் மீறி உயிர்மநேயத்தை உரைக்கும் வண்ணம் அமைந்திருக்கும் என்பதற்கு காமத்துப்பாலிலும் கூட களவியலையும், கற்பியலையும் சொல்லும் திருக்குறளே, சிறந்த எடுத்துக்காட்டு. ஆரியத்தின் இலக்கியங்கள், மனிதனின் உள்ளேயிருக்கும் வன்மத்தைத் தூண்டி, மதத்தின் மாண்பைக் காக்க, சாதீயப் படிநிலைகள்வழி, மனித வாழ்வின் இயல்புகளைச் சிதைத்து, சுரண்டலை நியாயப்படுத்தும் விதமாகவே இயற்றப்பட்டுள்ளன. எவ்விதமான படைப்பானாலும், உள்ளீடாக தலைமுறைகள் வழி கடத்தப்பட வேண்டியதாக “அடிமைத்தனம்” எனும் மதிப்பீட்டைக் கூறும் நூல்களே, ஆரியத்தில் அதிகப்படியானவை என்பதை விளக்க “மனுதர்மம்” எனும் நடைமுறை விதிகளைக் கூறும் சட்ட நூல் ஒன்றே போதுமானது.
பெண்களை ஆரியம் நடத்திய, நடத்தும் விதம், இரக்கமற்ற குரூரம் வாய்ந்தது. உலகிலேயே தாய், தன் பிள்னைகளுக்குக் கற்றுத்தர முடியாத ஒரே மொழி, சமசுகிருதமாக இருந்தது என்பது வேடிக்கையானதொரு விந்தை. அரசியே ஆனாலும் சமசுகிருதத்தில் அல்லாது பிராகிருதத்தில் தான் பேச வேண்டும்; வேதங்களைக் கேட்கும் தகுதி கிடையாது: கல்வி பெறுதல், சொத்துக்களை நிர்வகித்தல், துணையைத் தானே தேர்ந்தெடுத்தல் ஆகிய உரிமைகள் மறுக்கப்படுதல், குழந்தை மணம், கணவனின் இறப்புக்குப் பின்னாக உடன்கட்டையேறுதல் அல்லது ஓடுக்குமுறையின் உச்சமாகக் கைம்மை என்பன போன்றவை பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி, வருணங்களுக்கு அப்பாற்பட்டோருக்கு இணையான கொடுமைகளை அனுபவிக்க ஆரியம் கட்டாயப்படுத்திற்று. இதனைப் பல இலக்கியங்கள் வழி நிலைநிறுத்தச் செய்து, இயல்பான சமூக வழக்கமாக்கியது, ஆரியம்.
ஆரியமே தமிழியத்திலிருந்து சொற்களைக் கடன்வாங்கியது என்றால், திராவிடம் முழுக்க முழுக்க தமிழியத்திலிருந்து, தன் மொழியியல் மூலங்களைப் பெறுகிறது. அவற்றின் கலை இலக்கியங்களும் பெரும்பான்மையாகத் தமிழியத்தினைச் சார்ந்தது. பக்தியிலக்கிய காலகட்டத்தின், தமிழ் தவிர்த்த தென்னக மொழி இலக்கியங்கள் யாவும், ஆரியத்தின் கூறுகளைக் கலந்துகட்டிக் குறிப்பாகக் கதாநாயகத்தன்மை, பெண்ணடிமைத்தனம், சமூக ஏற்றத்தாழ்வுகளை வெளிக்காட்டும் தன்மையவை.
தமிழ்நிலத்தில், தற்போது “திராவிடக் களஞ்சியம்” என்ற முன்னெடுப்பின் மூலம் தொகுக்கப்பட இருக்கும், இருபதாம் நூற்றாண்டு கால திராவிடப் புகழ்பாடும் நூல்களும், இலக்கியங்களும், “கால்டுவெல்” போன்ற அரைகுறை ஆய்வாளர்களின், அடிப்படை ஆதாரமற்ற கசடுகள் மற்றும் தமிழுணர்ச்சியை மட்டுப்படுத்தும் அற்பப் பொழுதுபோக்கு சார்ந்த குப்பைகள் மட்டுமே. சென்ற நூற்றாண்டின் அற்புதமான கலையறிவியல் குழந்தையான திரைக்கலையிலும், இந்தக் குறைகள் மிகுந்த, தெளிவான வரையறையில்லாத தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வகையிலான அரைவேக்காட்டுத் திராவிடப் புரட்டுக் கருத்துக்கள், பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பம், தனிமனித வழிபாடு, பெண்களை இழிவு செய்யும் ஆபாசங்களோடு திட்டமிட்டுப் பரப்பப்பட்டன.
தமிழியம், ஆரியம் திராவிடம் சமூகத்தள ஒப்பீடு:
மனிதன் ஒரு சமூக விலங்கு. தன் தேவைகளுக்கேற்ப, உணர்ச்சிகளுக்கேற்ப கட்டற்று இயங்கும் விலங்குகளிடமிருந்து, நம்மைப் பிரித்துக் காட்டுவது, “மனிதநேயம்” எனும் ஒற்றைக் கூறு தான். ஆனால் அது கிஞ்சித்தும் இல்லாத, உலகில் வேறெங்கும் காண முடியாத. ஈவிரக்கமற்ற கொடூரமாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், இன்று வரை நம்மை வஞ்சித்துக் கொண்டிருப்பது, ஆரியத்தின் வருணாசிரமமும், அது கட்டமைத்த சாதீயப் படிநிலைகளும் தான். பிறப்பின் அடிப்படையில், சமூகத்தில் சிலர் தொடர்ந்து தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்க, வருணங்களுக்கு உள்ளேயும், இடையேயும் பிரிவினையைத் தூண்டிவிட்டு, ஒவ்வொரு வருணத்துக்குள்ளும் பல்வேறு அடுக்குகளில் சாதிகளை உருவாக்கி, பின்வரும் பல நூறு சந்ததிகள், ஒரே விதமான தொழிலைச் செய்யவும், ஒதுக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கும் பணிக்கப்படும், சமூகப் பொருளாதாரச் சுரண்டலாக, தான் உட்பட தன் ஒட்டுமொத்தத் தலைமுறையையும், மீட்டுக் கொள்ள முடியாத அடிமைவிலங்கிற்கு ஒப்புக்கொடுக்கும் உளவியல் நோயாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் விளைவுகளுக்கு உள்ளாக்கி ஒடுக்கும் விதிகளை, மதத்தின் பெயரால் உருவாக்கி, புராண இதிகாசங்களின் (ஏகலைவனின் கட்டைவிரல் அறுப்பு, சம்புகனின் படுகொலை எனப்பல) மூலம் மனதில் பதியவைத்தது. ஆரியம், இன்றுவரை அதை நிரந்தரச் செயலாக்கத் திட்டமாகவே மாற்றி, சாதியப் பிரிவினைகளைத் தூண்டி, மதக்கலவரங்கள் செய்து, அதிகாரத்தில் தொடர்ந்து தம்மை இருத்திக் கொண்டுள்ளது. ஆரியம்.
தமிழியத்தில், தொழில்முறையால் குடிவழிச் சமூகங்கள் இருந்தாலும் கூட, அவை இனக்குழுக்களின் பொருளாதார அச்சாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. பெண்ணடிமைத்தனம், தீண்டாமை, சாதிய வேற்றுமை, மணம் முடிக்கத் தடைகள் எல்லாம், தமிழுக்கு ஆரியத்தின் ஏற்றுமதி தான். குலத்தின்பால் அல்லாது, குணத்தின் பாலே ஒருவர் கொள்ளப்படுவதும், தள்ளப்படுவதுமாகத் தமிழ்ச்சமூகத்தில் இருந்தது. வாழ்வதும் தாழ்வதும், முற்பிறவிக் கருமம் என ஆரியம் உரைத்தபோது, தெய்வத்தாலே ஆகாதென்றாலும் கூட உன் முயற்சிக்கேற்ற வெற்றி, இயல்பாகவே இடைக்குமென்று, தமிழ்மறை போதிக்கிறது. தொழில்முறைகளில் இனக்குழுக்களுக்கிடையே இருந்த நெகிழ்வுத்தன்மை, ஆரியத்தின் ஊடுருவலுக்குப் பின் தான் காணாமலாகிறது என்பதற்கு, பல்வேறு சான்றுகளை நாம் கூறலாம். அன்று முதல் இன்று வரை, சாதிய வேறுபாடுகளைக் களைய உள்ளபடியே முயன்றது. தமிழியமே! சங்கம் தொட்டு, பக்தியிலக்கிய காலம், வள்ளலார், வைகுண்டர் காலம் வரை சாதியத்தை உறுதியாக எதிர்த்தது. தமிழ்ச்சான்றோரே!
ஆரியத்தை எதிர்ப்பதாகக் கூறி, பார்ப்பனர்கள் உள்நுழைவைத் தடுக்கும்பொருட்டே, “திராவிடம்” எனும் பொது அடையாளம் என சமூகநீதியைச் சலிக்கச் சலிக்கப் பேசிய திராவிடர்கள், தமிழ்நிலத்தில் சாதிய ஒழிப்புக்குச் செய்த போராட்டங்கள் என்னென்ன? மதத்துக்காக சாதியைப் பயன்படுத்திய ஆரியத்தின்வழி, அதிகாரத்துக்காக சாதியை நிறுவனமயப்படுத்தியது, திராவிடம், ஐம்பது ஆண்டுகால ஆட்சியில் சாதியை ஒழித்ததா? இல்லை ஒளித்ததா திராவிடம்? பெண்களுக்கு பேசிய சமவுரிமை சமூகநீதிப்படி கொடுக்கப்பட்டுவிட்டதா? குறைந்தபட்சம் வாரிசல்லாத பெண்கள், பயமின்றி திராவிடக் கட்சிகளுக்குள் அல்ல; கட்சிக்கூட்டத்துக்குள் பயணிக்கத்தான் முடியுமா?
ஆரியத்தின் அடியொற்றி, பிறப்பால் வரும் முன்னுரிமை என்பதன் நவீன வடிவமாகக் குடும்ப அரசியல், ஜனநாயகமற்ற தன்மை, உழைப்புத் திருட்டு, வரலாற்றுப் புரட்டு, சொத்துக் குவிக்கும் தனியுடைமை, இனக்குழுக்களின் புறப்பகையைக் கூர்மைப்படுத்தல், ஓர்மையைக் குலைத்தல், கலவரங்களை வாக்காக்குதல், வக்கிரங்களை ஊக்குவித்தல் ( கீழவெண்மணி, தாமிரபரணி,கொடியங்குளம் தொடங்கி அண்மையில் மோரூர் நிகழ்வுகள் வரை), தமிழ்க்குடிகளை சாதியச்சிறு வட்டத்தில் சுருக்குதல், அவர்களை அடியாட்களாக மட்டுமே வைத்திருந்து, மோதவிட்டுக் களித்தல், கூட்டணி சேர்த்தோ, கோமாளியாக்கியோ வீரியத்தைக் குறைத்தல், சாதி, மத, சாராயம், பண போதையை வலிந்து ஊட்டுதல், ஆணவப்படுகொலைகள் (கண்ணகி முருகேசன், தர்மபுரி இளவரசன், உடுமலை சங்கர்) ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தல் (ஊருக்குள் நிலம், காடு, வீடு போன்ற சொத்துக்கள் வாங்குவதை எதிர்த்தல், தொழில், பிற குடி மணவுறவுக்கு தடைகள் ஏற்படுத்துதல், அரசுப்பணி, தேர்தல்கள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றாலும் மட்டுப்படுத்தல்), இடவொதுக்கீட்டின் அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சி, இவையே திராவிடத்தின் சமூகநீதி காத்த துரோக வரலாறு.
இவையனைத்துக்கும் நேரெதிராக, தமிழியத்தைப் பற்றுக்கோடாகக் கொண்ட தமிழ்த்தேசியம் தான். சாதி.சமயங்கடந்த தமிழின ஒற்றுமை, குடிமைச்சமூக சம வாழ்வு, பாலின சமத்துவத்துடன் கூடிய இளவிடுதலை, பெண்களுக்கு அரசியல் அதிகாரமளித்து முன்னேற்றம் காணச் செய்தல், அடக்குமுறைகளற்ற சமூக விடுதலை, எளியோரை அதிகம் பாதிக்கும் இயற்கை வளச்சுரண்டல் அல்லாத பொருளாதார விடுதலை, குடிவழிக் கணக்கெடுப்பின் மூலம் சீரமைக்கப்பட்ட இடவொதுக்கீட்டுக் கொள்கை, மொழிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்க்குடிகளல்லாத பிற குடிகள் ஆதாயம் பெறுவதைத் தடுத்தல், ஆதித்தமிழர் விடுதலை, பழங்குடியின் உரிமைப் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்டோரின் வாழ்வாதார மீட்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை முன்னிட்டு, வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, கொள்கைப் பிடிப்போடு, ஆரியத்துடன் கூட்டு சேர்ந்த திராவிடத்தை எதிர்த்து, தன்னந்தனி வேங்கையாகக் களம் காண்கிறது. எனில் சமூகத் தளத்தில் சமநீதி மறுத்த ஆரியத்துக்கு மாற்று. தமிழியமன்றி வேறென்ன?
தமிழியம், ஆரியம் திராவிடம்: அரசியல் தள ஒப்பீடு:
எழுபத்தைந்து கால சுதந்திரம் பெற்ற இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப்பொறுப்பில், பல பத்தாண்டுகள் இருந்த காங்கிரசானாலும், தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவானாலும் கட்சிப் பெயர் மாறுபடுமேயன்றி, கொள்கை என்பது எப்போதும் ஒன்று தான். மதசார்பற்றது என சொல்லிக் கொள்ளும் காங்கிரசு கட்சி, “நாம் இந்தியர்கள்” என்று மறைமுகமாகப் பெரும்பான்மைவாதம் பேசுகையில், “நாம் இந்துக்கள்” என பாஜக நேரடியாக மதவாதம் பேசுகிறது. 1980 களின் இறுதியில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எழுச்சியை, இந்துத்துவத்துக்கான வாக்கு வங்கியாக மாற்றிட, பல்வேறு மாநிலங்களின் பார்ப்பனரல்லாத உயர்சாதி இந்துக்களை, மாநிலக் கட்சிகள் மூலம் ஒருங்கிணைத்து, மகாபாரதம், இராமாயணத் தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டி, இரத யாத்திரை நடத்தி, கலவரங்களைத் தூண்டி, அதன் உச்சமாகப் பாபர் மசூதியை இடித்து, இந்திய தத்துவார்த்த அரசியல் தளத்தில், திரைமறைவில் இயங்கிக் கொண்டிருந்த ஆரியப் பார்ப்பனிய சனாதனக் கோட்பாட்டை, வெளிப்படையான தேர்தல் அரசியலில் பாஜக வழி களமிறக்கியது. ஆர்.எஸ்.எஸ். பல கட்டங்களாக அது கையாண்ட சாம, தான, பேத, தண்ட, தகிடுதத்த உத்திகளின் வெற்றியே, இன்று அக்கருத்தியலை அசுர பலத்துடன், அதிகாரக் கட்டிலில் அமர்த்தியிருக்கிறது. இதன் பொருள்,”ஆரிய வருணாசிரமம்” என்பதே வடக்கில் ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் உதிரத்தில் ஊறிப்போன தத்துவமேயன்றி. “மதச்சார்பின்மை” என்பதெல்லாம். பொதுவுடைமைக் கட்சிகள் உட்பட ஒன்றிய அரசியல் கட்சிகளுக்கு மேற்பூச்சு, அவ்வளவே! அவ்வப்போது குடும்ப அரசியல் எதிர்ப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் என பூச்சுக்கலவைகளின் வண்ணங்கள் மாறுமே தவிர, உள்ளே இளிக்கும் பித்தனை, சனாதன சாக்கடை மட்டுமே!
ஆரியம், அரசியல் தளத்தில் முன்வைப்பதெல்லாமே இந்துத்துவம், இந்தி – சமசுகிருதம் மற்றும் இந்திய தேசியம் எனும் மூன்று அச்சுக்கோடுகள் தாம். இவற்றின் செயலாக்கச் சூத்திரங்களே, பார்ப்பன பனியா கூட்டு, மேலாக இந்தி, உள்ளார்ந்து சமசுகிருதத் திணிப்பு, பன்மைவாதத்தை அழிக்கும் ஒருமைவாதம், காலனிய எச்சத்தின் மேலாதிக்க எண்ணங்கள், மத்தியில் தொடர்ந்து குவிக்கப்படும் அதிகாரம், மாநிலங்களின் உரிமைப் பறிப்பு, தேசிய இனங்களை அடிமைப்படுத்துதல், இடவொதுக்கீட்டை நீர்க்கச் செய்தல், அதற்கு எதிரான மனநிலையை மக்களிடையே உருவாக்கி வளர்த்தல், உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளித்துவ வளர்ப்பு, அரசுத் துறைகள் மற்றும் சொத்துக்களைத் தனியார்மயமாக்குதல், தாராளமய, உலகமய ஆதரவு, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஒடுக்குமுறை, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரை அச்சுறுத்துதல், வாடகைத்தாய் சந்தைப் பொருளாதாரம், இயற்கைவளச் சுரண்டல், சுற்றுச்சூழல் சீர்கேட்டை அனுமதித்தல், ஊழல் மலிந்த அமைப்பைத் தக்கவைத்தல், ஆன்பவர்களின் கைப்பாவையாக அரசு அலுவலங்கள், பணமயமாக்கப்பட்ட, நேர்மையற்ற சடங்காகத் தேர்தல்கள், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத, மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றும் பாராளுமன்றங்கள் மற்றும் ஈட்டமன்றங்கள், மக்கள் நலம் நாடாத அதிகார வர்க்கம், சிக்கலான, சமத்துவமற்ற வெளிப்படைத்தன்மையில்லாத நீதித்துறை, இவை அனைத்தையும் தட்டிக்கேட்டு, மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கடமையை மறந்து, பொழுதபோக்கைப் பிரதானப்படுத்தும் நடுநிலையற்ற, பக்கசார்பான ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்தும்.
மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றையேனும், அரசியல் இலாபக் கணக்குகளுக்காக வலிந்து திணிக்கப்பட்ட திராவிடம், உள்ளபடியே எதிர்த்திருக்கிறதா? பிற தென்னக மாநிலங்கள் விரும்பாத திராவிட நாட்டைப் பிரித்துக் கொடுக்கக் கேட்டு, பின்னர் அரசமைக்கும் உரிமை பறிபோய்விடுமோ என அஞ்சி அதை விடுத்து, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனச் சுணங்கி, காலப்போக்கில் மாநில மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கக் கூட மறந்து, தனிப்பட்ட நலன்களுக்காகவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் தவிப்பிலும், முதலாளிகளின் ஆசைகளை மனங்கோணாபல் நிறைவேற்றும் உள்ளூர் அடியாளைப் போலவே, ஒன்றிய அரசின் விருப்பங்களுக்கேற்றபடியே ஆட்சி நடத்தும் கங்காணிகளாக மாறிப் போய்விட்டன, திராவிட அரசுகள்.
மட்டுமா? ஆரியத்தின் கைக்கூலியாகி, அதன் அக்கிரமங்களுக்குத் துணைபோவதோடு, அதீத பொழுதுபோக்கு, திரைக்கவர்ச்சி, சாதி, மதம், சாராயம், பணம், வகைதொகையற்ற நுகர்வு, இலவசங்கள், முறையற்ற ஒப்பந்தங்கள் வழி ஊழல், தரமற்ற கல்வி, மருத்துவத்தின் மூலம் சீரழிக்கப்பட்ட, அரசியல்படுத்தபடாத, அறிவுத்தேடலற்ற சமூகத்தை உருவாக்கி, அதன் மறதி, வறுமை, அறியாமை, பேதைமையை முதலீடாக்கி, முற்றதிகாரத்துடன் அச்சு, காட்சி ஊடகங்களைக் கைப்பற்றி, ஆட்டுமந்தைகளாக மக்களை ஆண்டுப் பழகிச் சுகம் கண்டுவிட்ட திராவிடம், ஒருநாளும் மக்களுக்காக நின்றதும் இல்லை; இனி நிற்கப்போவதும் இல்லை.
இந்திய ஒன்றிய நிலப்பரப்பு முழுவதையும், ஏறக்குறைய உள்ளடக்கிய மௌரியப் பேரரசுக் காலத்தினினின்று, டெல்லி கில்ஜி வம்ச சுல்தான்கள் காலம் வரையிலும், தமிழ் நிலம் அடிபணியாத தேசமாகத்தான் இருந்தது. பின்வந்த விசயநகரத்தார், மராத்தியர், ஆங்கிலேயர், திராவிடர் என அந்நியர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்ற காலத்தில் மங்கிய தமிழியம், ஈழசோகத்தின் பின் சாம்பலினின்று எழும் பீனிக்ஸ் தீப்பறவையாகத் திமிறியெழுந்து, தன் அத்தனை துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணமான, இழந்துவிட்ட தனது நிலத்தைத் தானே ஆளும், தன்னாட்டு உரிமையைத் திரும்பப் பெற்றிட, அரசியல் தளத்தில் புலிப்பாய்ச்சல் நிகழ்த்தி வருகிறது. கணக்கிலடங்காத சூழ்ச்சிகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியில், பொருளாதாரச் சிக்கல்களுக்கும், ஊடக மறைப்புக்கும் முகங்கொடுத்து, தமிழின உணர்வால் உந்தப்பட்ட இளைஞர் ة தன்னார்வப் பங்களிப்பில் வளரும் தமிழியம் பேசும் தமிழ்த்தேசியம், தன் தன் கொள்கைகளையே ஆயுதமாயும், கேடயமாயும் ஆக்கி, அரசியல் போர் செய்துவருகிறது.
ஆரியத்தின் எதிர்ப்பையும், திராவிடத்தின் சதியையும் மீறி தமிழ்த்தேசியம், தமிழினம் முழுமையான விடுதலை பெற வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நேர்மையான நிர்வாகம், ஊழல் மற்றும் இலவசங்கள் ஒழிப்பு. அனைவருக்கும் சமமான, தரமான, இலவச கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர், நிலமும் வளமும் சார்ந்த தொழில்களை முன்னிறுத்தும் தற்சார்புப் பசுமை உற்பத்தித் தாய்ப் பொருளாதாரம், இயற்கை வேளாண்மை, மாசுபாடுகளைத் தவிர்த்த சுற்றுக்சூழல் பாதுகாப்பு, கலை, இலக்கியப் பண்பாட்டுத் துறைகளில் தமிழை நிலைநிறுத்தல், தமிழ் மொழி மற்றும் மெய்யியல் மீட்சி, மறைக்கப்பட்ட தமிழின வரலாற்றை நினைவூட்டி ஆவணப்படுத்தல், தமிழின ஓர்மை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை முன்னிறுத்துகிறது. மேலும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட, இந்த ஒன்றிய அமைப்பின் குறைபாடுகளைச் சரிசெய்ய, அரசியலமைப்பில் அவசிய மாற்றங்கள் செய்து, ஒன்றியத்தின் பன்மைக்குணம், மதச்சார்பின்மை, தேசிய இனங்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு, மாநில சுயாட்சி மற்றும் வாழ்வாதார முன்னேற்றம், நேர்மையான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உளச்சுத்தியோடு செயல்படுத்தி, மக்கள் நல அரசினை அமைக்க, சக சகோதர மாநிலங்களின் ஒத்துழைப்பைக் கோருகிறது.
ஆரியத்துக்கு எப்போதும் நேரெதிர் தமிழியமே அன்றி ஒருநாளும் திராவிடமன்று!
ஒட்டுமொத்தமாக சமகாலத்தில் ஆரியமும், ஆரியனும் செய்வது என்ன? அவன் கடவுளுக்கு இடைத்தரகன்; நீ உழும் நிலத்துக்குச் சொந்தக்காரன்; வேறு வேலை செய்தாலும் உனக்கு எஜமானன்; படிக்கப்போனால் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் ஆசிரியன்; உன் பொழுதுபோக்கைத் தீர்மானிக்கும் ஊடகக்காரன்; தொழில் தொடங்க முயன்றால், கடன் தராத வங்கிக்காரன்; பிரச்சனையென்றால் உன்னிடமே பணம் வாங்கிக் கொண்டு, உன்னைத் தோற்கடிக்கும் வழக்கறிஞன்: காசுக்கு விலை போகும் நீதியரசன்; அடிமையாகவே வாழ நினைத்தாலும், உன்னைக் கொல்லும் சட்டங்களை இயற்றும் அரசியல்வாதி; சுரண்டும் சட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரி. அவன் உன்னை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கிறான்.
பிராமணனல்லாத ஆதிக்க சாதிக்காரன் அனைவரும், பிராமணனைப்போலே ஆகவிரும்புவதும், தனக்குக்கீழே, தான் மிதிப்பதற்கு வாகாக ஒருவன் இருக்க வேண்டுமென நினைப்பதும், வாய்ப்புக் கிடைத்தால் அவனை அடிப்பதும், அவனுக்கு கிடைக்கவிடாமல் செய்வதும், ஆயிரமாண்டுகளாய்த் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட, தாழ்வு மனப்பான்மையின் விளைச்சல். அவர்கள் பெரியவர்கள்: அடியேன் அவர்களின் விசுவாசியெனப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள, அறியாமையில் உழலும் அற்பர்களைத் தொடர்ந்து உருவாக்கித் தன்னலத்துக்காகக் களப்பலியிட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
தனித்த அடையாளத்துடன் எவன் வந்தாலும் இவர்களுக்குப் பிரச்சனை, அவனைக் காயடிப்பதற்குத் தான். இவர்கள் ஆகக்கடும் முயற்சி செய்கிறார்கள். நீ தமிழன் என்று சொன்னால், இல்லை நீ இந்து என்பார்கள். வருணாசிரமக் கட்டமைப்பில், நீ இந்த சாதியென்பார்கள். உன் தெய்வங்களைத் திருடி பூணூலிட்டு, வெள்ளை நிறமடித்து, உனக்கே திருப்பித் தருவார்கள். உன் வழிபாட்டைப் பழிப்பார்கள். பொல்லாத சடங்குகனைத் திணித்து, இல்லாத உன் சட்டைப்பையைத் தடவுவார்கள். உள் முன்னோர்களையே கெட்டவர்களாக்கி, அவர்களைச் சூழ்ச்சியால் கொன்ற துரோக வரலாற்றை, உன்னை வைத்தே கொண்டாட வைப்பார்கள். உன் வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமித்து, உனக்குப் புரியாத மொழியில் உன்னையே பாட வைப்பார்கள். உன் தாத்தன் கட்டிய கோவிலில், உன்னை நுழைய விடமாட்டார்கள். மீறி உள்நுழைந்தால், உன்னை வைத்தே கழுவ விடுவார்கள். அவர்கள் உண்ண, உன்னை உழ வைப்பார்கள். உண்ட பின், மலம் கழித்து உன்னையே அள்ள வைப்பார்கள். ஒரே நாடு; ஒரே வரி, ஒரே சந்தை: ஒரே கல்வி; ஒரே மதம்; என்றாலும் ஒரே சாதி என்று மட்டும் கொல்லமாட்டார்கள். ஏதோ கொஞ்ச நஞ்சம் கிடைந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை, அந்தப்பக்கம் பிடுங்கிக் கொண்டே, இந்தப்பக்கம் இராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, நாமெல்லாம் இந்துக்கள் என உன்னை ஏமாற்றுவார்கள்.
இவற்றையெல்லாம் கண்டும் காணாததுபோல, திராவிடம் உதட்டளவில் ஆரிய எதிர்ப்பைப் பேசிக் கொண்டு, அவர்களுடனே தேர்தல் அரசியலில் கூட்டணி வைத்து, செழிப்பான குறைகளின் அமைச்சர் பதவிகளைப் பேரம் பேசி வாங்கிக் கொண்டு, விலையாக மாநில உரிமைகளை மனச்சான்றின்றி விட்டுத்தரும். ஆனால் தமிழ்நாட்டுக்குள் வந்து மட்டும், அழுத்தம் தந்தோம்; ஆனால் நம்மை வஞ் சித்துவிட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும். குறைந்தபட்ச இல்லாத பதவியென்று மாய்மாலம் போட்டுக்கொண்டே. தமிழர் உயிருக்கே ஊறு வந்தாலும்கூட, பதவியைத் துச்சமாக எண்ணித் தூக்கியெறியாமல், இறுதிவரை வாயால் வடை சுட்டு, அதில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டா என்றே கள்ளக்கணக்குப் போடும். திட்டங்களைக் கொண்டுவரும் ஒன்றிய அதிகாரம் நாசகாரத் அரசிடமும், அதை இயக்கும் முதலாளிகளிடமும், கையூட்டுப் பெற்றுக் கொண்டு, மக்களைத் துன்புறுத்தும். தட்டிக் கேட்டால் வழக்குகளை வைத்து மிரட்டி, ஆள்தூக்கிச் சட்டங்களைக் காட்டி அச்சுறுத்தும். மீறியும் போராடினால் அப்பாவி மக்களென்றும் பாராமல், குற்றவாளிகளைப் போல குறிபார்த்துச் சுட்டுத் தள்ளும். கேட்டால் “தொலைக்காட்சி பார்த்துத் தான் எனக்கே தெரியும்” என்று அறிவார்ந்த அருமொழி சொல்லி ஆத்திரமூட்டும். எப்படியாயினும், தன் மூன்றாம் தலைமுறை இளவரசனும் அதிகாரத்தைச் சுவைக்க, ஆரிய மூளைகனையே, ஊழலில் கொழுத்த பணத்தைக் கொட்டி, வாடகைக்கு எடுத்து வேலை வாங்கும். மாண்புமிக்க சட்டமன்றங்களை, முகத்துதி பாடித் தொழும் மடச்சாம்பிராணிகளின் கூடாரமாக்கிச் சிரிக்கும். அவ்வப்போது தமிழ், தமிழரென்று சப்பைக்கட்டுத் திட்டங்கள் கொண்டுவந்து, செயலாக்கத்தில் ஏமாற்றித் தன் சூட்சுமத்தைக் காட்டி எக்காளமிடும்.
“இந்தி ஒழிக!” என்று சொல்லிக்கொண்டே, தனது பினாமிகள் நடத்தும் தனியார்ப் பள்ளிகளில் கொள்ளைக் கட்டணத்துக்கு இந்தியைக் கற்பிக்கும். அரசுப்பள்ளியிலும் கூடத் தமிழை விடுத்து, ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தும். ஆங்கில மோகத்தில் தமிழை எல்லாவற்றிலும் புறந்தள்ளி, தமிழை எழுதப்படிக்கத் தெரியாத இரு தலைமுறைகளை உருவாக்கி, தன் சாதனையென மார்தட்டிக் கொள்ளும். அரசுப்பணிகளில் தமிழனைத் தவிர, அனைவரையும் உட்கார வைத்து அழகுபார்க்கும். நிலம், தொழில் முதலீடு என அனைத்தையும் தமிழரல்லாதவர்களிடம் குவித்து, வடக்கன் வந்து இங்கு முதலாளியாகவோ, தொழிலாளியாகவோ குவிந்து, தமிழர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொண்டாலும், வாய்மூடி வாளாவிருக்கும்.
இப்படி எல்லா வகையிலும் தமிழ்நாட்டையும், அதன் மக்களையும் சுரண்டிப்பிழைக்கும் சக்திகளோடு, சந்தர்ப்பவாத சகவாசம் பேணி, பிழைப்புவாத அரசியல் தந்திரம் செய்து, ஆண்டான் அடிமை மனநிலையோடு, அன்றாடங்காய்ச்சியாய்த் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை அணுகி, காசைக் கொடுத்து, வாக்குகளைப் பொறுக்கிக்கொண்டு, தன் உண்மை அடையாளத்தை மறைத்து, “தமிழர்” என்ற போர்வையில் அடுத்தவரின் உரிமைப் பொருளை கொள்ளையிடும் அற்பத்தனத்தைத் தொழிலாகக் கொண்ட, கொள்கைகள் ஏதுமற்ற இந்தக் கூட்டம் தான், ஆரியத்துக்கு எதிரானது என்பது குப்புறக் கவிழ்த்த குதிர் போலப் பயனேதும் இல்லாத பசப்பு வார்த்தைகளே!
இராமாயணம், மகாபாரதம் போன்ற ஆரியக் காப்பியங்கள், அரசகுல ஆண்கள் பெண்ணுக்காயும், மண்ணுக்காயும் செய்த போரை, நியாயப்படுத்தும் வன்முறைக் காவியங்கள். ஆனால் பைந்தமிழின் முதல் காப்பியமாம் சிலப்பதிகாரம், ஒரு குடிமக்கள் காவியம். அதன் மையப்புள்ளி ஆணல்லன்; அரசனல்லன்: ஒரு பெண். அதுவும் வணிகன் மகள், சோழ நாட்டுப் புகாரில் பிறந்து வளர்ந்து, குணக்குறையுள்ள கோவலன் எனும் கணவனால் துன்புற்றுப் பின், பிழைப்புக்காக பாண்டிய நாட்டு மதுரையை அடைந்து, நீதி தவறிய மன்னனால் மணாளனை இழந்துவிட்ட பின், தானும் செத்தொழிந்து போகலாமென்று எண்ணாமல், அரசனே ஆனாலும் வளைந்த அவன் செங்கோலைக் கேள்வி கேட்டு, சேரநாட்டில் மங்கலதேவியாக நிலைபெற்ற கண்ணகியின் காற்சிலம்பைச் சுற்றி நகரும் சிலப்பதிகாரம், எப்படிப்பட்ட ஒரு முற்போக்கு இலக்கியம்?! மூவேந்தர்கள் முப்பெரும் சங்கம் வைத்து வளர்த்த, குமரிக்கண்டத்தின் பால் உதித்தச் செந்தமிழின் சிறப்பும், சீர்மையுமே, இப்படிப்பட்ட எண்ணவோட்டத்தைத் தமிழியத்துக்குத் தந்திருக்க வேண்டும்.
இக்கட்டுரையின் முதற்பத்தியில் குறிப்பிட்டதைப் போல, சிந்துவெளியிலும் சரி, கீழடியிலும் சரி, சுட்ட செங்கலே, நுட்பமான பேராற்றல் மிக்க நம் நாகரீகத்துக்கு அடையாளமாக இருந்து, அடுத்தவர்களைக் கலங்கடித்திருக்கிறது. அதே போல, கடைசிப் பத்தியில் குறிப்பிட்ட சிலப்பதிகாரம் போன்ற செவ்விலக்கியங்களே, வரலாறு நெடுக, எழுத்தை எப்போதும் பற்றிவைக்கும் பேரறிவு கொண்ட உலகச் சமூகமாக, நம்மை இப்புலியில் நிலைநிறுத்தியுள்ளது என்பது சத்தியமான உண்மை. ஆனால் இவ்விரண்டையும் பதவிவெறிக்காக, பணத்துக்காக இணைத்து “செங்கலதிகாரம்” என்றெல்லாம். சட்டமன்றத்திலேயே புளுகித்தள்ளும் புழுக்களுக்கு வேண்டுமானால் “திராவிடம்” என்பது சாத்தியப்பட்ட பொய்யாக இருக்கலாம். தமிழர்களுக்கு அது என்றுமே, முன்னேற்றத்தைத் தடைசெய்யும், பயன்படாத பிணச்சுமை மட்டுமே!!! எனவே அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுவோம், அன்றும், இன்றும், என்றும் பொல்லாத ஆரியத்தை நெஞ்சுக்கு நேராக நின்று எதிர்த்தது. எதிர்த்துக் கொண்டிருப்பது, எதிர்க்கப்போவது பேராண்மைமிகு தமிழியமே! தமிழியமே!! தமிழியமே!!!
திருமதி . விமலினி செந்தில்குமார்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.