spot_img

அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட ஆபத்தான சட்டங்கள் – சந்தி சிரிக்கும் சங்கித்தன திராவிடமாடல்

ஏப்ரல் 2023

அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட ஆபத்தான சட்டங்கள் – சந்தி சிரிக்கும் சங்கித்தன திராவிட மாடல்

தமிழ்நாடுல சட்டப்பேரவைக் கூட்டத்தோடர் கடந்த மாச்ச் 20 அன்று தொடங்கியது. நிடுநிலை அறிக்கை அதன்பிறகு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, கூட்டத்தொடரில் 17 சட்ட முன்வரைவுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. உயர்கல்வி, வருவாய், சட்டம், நகராட்சி நிர்வாகம், கால்நடை, மீன்வளம், வணிக வரிகள் மற்றும் பதிவு, நிதி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த சட்ட முன்வரைவுகளைத் தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று ஒரே நாளில் 17 சட்ட முன்வரைவுகன் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.

பொதுவாக சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றங்களில், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை நிர்வகிக்க இயற்றப்படும் சட்டங்களில், அச்சட்டத்துக்குத் தொடர்புடைய அனைத்து தரப்பினரது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் முதலில் அரசால் கவனத்தில் கொள்ளப்படும். துறைசார் நிபுணர்கள் மற்றும் அதிகாகிகளின் வழிகாட்டுதலில், சட்டத்திருத்தங்களின் கூறுகள் மீதான கருத்துக்கேட்பு, வாதப் பிரதிவாதங்களனைத்தையும் அடிப்படையாக வைத்து தான் சட்டமுன்வரைவுகள் ஆயத்தம் செய்யப்பட்டு சட்டமன்றத்தில் வைக்கப்படும். அதன் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு, இது குறித்த மற்ற உறுப்பினர்களின் ஐயங்கள், கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்ட பின்பே, வாக்கெடுப்பு முறையில் ஒரு முன்வரைவு சட்டமாகும். அப்படியும் சிக்கல்கள் தொடர்ந்தால், அந்த முன்வரைவு பல ஈட்சி சட்டமன்ற உறுப்பினாகளையும், துறைசார் வல்லுநர்களையும் கொண்ட நிலைக்குழுக்கள் அல்லது தற்காவியக்குழு மூலம் சீர்தூக்கி பார்க்கப்பட்டபின் நிறைவேற்றப்படும்.

மேற்சொல்லப்பட் விழுமியங்களுக்குக் கிஞ்சித்தும் மதிப்பளிக்காமல் பெரும்பான்மை உள்ளதே என்பதற்காக மக்கள் விரோதச் சட்டங்களை, தான் தோன்றித்தனமாக இயற்றி வலுக்கட்டாயமாகச் செயல்படுத்தி வருகிறது பாசி+ பாஜக அரசு இதன் வினைவாகத்தான், இவ்வாறான 360 இயற்றியதும் அத்துறை சார்ந்தோரது கடும் எதிர்ப்பையும், கண்டஅங்கனையும் பாஜக எதிர்கொள்கிறது. வேளாண்சட்டங்கள் போன்ற சில விதிவிலக்குகளில் சட்டங்கள் திரும்பப் பெற்றுக் கோண்டதும் நிகழ்ந்திருக்கிறது.

இருந்தாலும் 9 ஆண்டு பாஜக ஆட்சியில், 2015ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஒரு சட்டம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதே. கடைசி எனும் செய்தியிலிருந்து சட்டமியற்றும் மன்றங்களில் பாஜகவின் ஏதேச்சாதிகாரத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள இயலும். ஆனால் இதே பாஜக உள்ளே புகுத்துவிடும்! அதைத் தடுக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்று இரண்டாண்டுகளுக்கு முன் சொன்ன திமுக பாஜக ஆளும் மாநிலங்கனை விடவும் விரைந்து பாஜக பரிந்துரைக்கும் சட்டங்களை இயற்றிவருவதிலிருந்து, உள்ளே புகுந்த திமுக தான் பாஜக என அவ்வப்போது நிறுவப்படுகிறது.

துவையவேந்தர்களை ஆனாருக்குப் பதிலாக அரசே நியமனம் செய்ய வழிவகுக்கும் இரண்டு சட்ட முன்வரைவுகளைத் தவிர மற்ற அனைத்தும் பாஜகவின் செயல்திட்டங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரமளித்து, தமிழக வளங்களைப் பெருமுதலாளிகள் சுரண்டித் தின்ன வாய்ப்பளிக்கும் சட்டங்கள் தாம். சட்ட ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டண உயர்வு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை மாற்றியமைக்க வகை செய்தல், தமிழ்நாடு நில நிர்நிலை ஒருங்கிணைப்பு, தமிழ்நாடு நிதி ஒதுக்க சட்ட முடிவு, சென்னை மாநகரக் காவல் திருத்த சட்டம் போன்ற பல முன்வடிவுகள் இவற்றில் அடங்கும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்த முயல்வதிலிருந்தே, திமுகவின் திராவிட மாடல் என்பது பாஜகவின் தமிழ்நாட்டு மாடல்தான் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத் திருத்த முன்வரைவைக் குறிந்து நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்று சட்டமிருக்கும்போதே தனியார் நிறுவனங்கள் அப்பாவித தொழிலாளர்களை 10 முதல் 12 மணி நேரத்துக்கும் மேலாகவே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்ட முன்வரைவு நிலம், நீர்நிலைகள், நிரோடைகள், ஏரி குளங்களை சிறப்பு திட்டங்கள் எனும் பெயரில் தனியார் பெரு நிறுவணங்களுக்குச் சட்டப்பூர்வமாகத் தாரைவார்க்கும் திட்டம்’ எனக் குற்றம்சாட்டி பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அந்திய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும், பேருமுதலாளிகள் தொழில் தொடங்க ஏதுவாக இருக்குமென்றும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக பாஜக அரசு மாநில அரசுகளை இது போன்ற சட்டங்களை இயற்ற பரிந்துரை செய்துவரும் நிலையில், அதனடியொற்றி நிலத்தின் மீதான உள்வாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை நீர்ந்துப் போகச் செய்யும் இவ்விதச் சட்டம் யாரை மகிழ்ச்சிப்படுத்திட என எண்ண வேண்டியுள்ளது. ஏற்கனவே ஒன்றியத்திலேயே அதிகப்படியான நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக கபளீகரம் செய்யப்பட்டுவரும் தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளை இன்னும் வேகமாக வகைதொகையின்றிச் சூறையாட இந்தச் சட்டம் வழிவகுக்கும். எனில் அது மீட்டெடுக்க முடியாத அளவு தமிழகத்தின் நிலம் மற்றும் நீர்வளத்தைச் சீர்குலைத்துவிடும் என்பதே நமக்கிருக்கும் பெருங்கமெலை.

ஒன்றிய அளவில் தொழிலாவர்களின் உரிமைகளைப் பறிக்கும் ‘தொழிலாளர் சட்டத் தொகுப்பை’ நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றிய மோடி அரசு. தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் தாமதித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, கடந்த மாதம் மாநில அளவில் மோடியின் “தொழிலாளர் சட்டத்தொகுப்பின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, புதிய திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதனை அப்படியே பின்பற்றி, அதே போன்றதொரு சட்டத்திருத்தத்தை திமுக அரசும் நிறைவேற்றி, மோடி அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே தொழிலாளர் விரோதச் சட்டத்தொகுப்பினை

வேலை வாங்கிச் சுரண்டி வருகின்றன. இந்நிலையில் 12 மணி நேரம் வேலை என்பது சில நூற்றாண்டுகளாக உலகம் முழுவதிலும் நடந்த தொழிற்சங்கங்களின் இடைவிடாத போராட்டங்களின் மூலம் பெற்ற எட்டு மணி நேர வேலை ன்னும் உரிமையைத் துடைத்துத் தூர எறிவது போலாகிவிடும். மேலும் ஆண்களை விடவும், இச்சட்டம் பெண்களுக்கு மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எவ்வாநாயினும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகத்தின் இயங்கியலையே பாதிக்கும் இத்தகு மனிதகுலத்துக்கு எதிரான சட்டந்தை திமுக கொண்டுவருவது கொடுங்கோன்மையன்றி வேறில்லை.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும். எந்த விளக்கமும் கொடுக்காமல், விவாதம் நடத்தாமல், சட்ட முன்வரைவை இன்னொரு முறை மறுசீராய்வு செய்ய வாய்ப்பளிக்காமல், பெரும்பான்மை இருக்கும் ஆணவத்தில், சிலபல வினாடிகளில் குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களை இன்னலுக்குள்ளாக்கும் இந்தக் கொடும் சட்டங்கள் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டாண்டுகளிலேயே சுத்தி சிரிக்கும் இந்த சங்கித்தனமான திராவிட மாடல், மீதமிருக்கும் மூன்றாண்டுகளில் இனி என்னவெல்லாம் செய்யுமோ என்பதே ஏமாந்து போன சாமானியக் குடிமக்களின் புலம்பலாக இருக்கிறது.

திருமதி விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles