spot_img

எழுத்தோலை – ஓலைச்சுவடி அளவுகள் & வகைகள்

ஏப்ரல் 2023

எழுத்தோலை – ஓலைச்சுவடி அளவுகள் & வகைகள்

எழுத்தோலை அளவுகள்:

தொல்காப்பியத்தில், எழுதப்படும் ஓலைச்சுவடிகளின் அளவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொருவருக்கும் ஓலைச்சுவடியில் பாட்டெழுதும் போதும், செய்தி எழுதும் போதும் குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன. இதன்படி நான்மறையாளர்க்கு 24 வீரற்றானமும், அரசருக்கு 20 வீரற்றானமும்,வணிகருக்கு 16 விரற்றாளமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்க வேண்டும் என்று கீழ்க்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்

இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்து

விரல்வேளாளர்க் கீராறாய் வெள்ளோலை

வேயனையதோளாய் அறிந் தொகுத்து”

இந்தக் கருத்து மற்றொரு பாடலிலும்,

ஓலைய திலக்கணம் உரைக்குங்

 காலைநாலாறு விரலாம் நான்மறை

யோர்க்கேபாருடை யோர்க்கும் பதிற்றிரண்

டாகும்வணிகர்க் கீரெண் விரலாகும்

மேசாணென மொழிய சூத்திரக் களவே.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தோலைகளின் வகைகள்:

எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ‘ஓலைச்சுவடி” என்று அழைக்கப்பட்டு நசவடைவில் ஓலை’ என்றும், சுவடி’ என்றும் இரண்டு பெயர்களைப் பெற்று விளங்குகிறது. தமிழில் ‘தோடு’, ‘மடல்’, ‘ஓலை’. ‘ஏடு’, ‘இதழ்’ இவையனைத்தும் சுவடிகளையே குறிக்கின்றன. இவற்றில் மடல், ஒலை என்ற பெயர்கள் கடித வடிவிலும் எழுதப்பட்டவை.

பெயர்கள் வேறு வேறாக இருப்பினும் இப்பெயர்கள் குறிப்பிடும் பொருள் ஒன்றேயாகும். பழங்காலம் முதல் கல்வியாளர்கள் ‘ஓலை’ என்ற சொல்லையே பயன்படுத்தி உள்ளனர். எழுத்தோலைகளின் அமைப்பிற்கேற்பவும். ஓலையில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளுக்குத் தக்கவும், வேறு காரணங்களுக்கேற்பவும் அவை வகைப்படுத்தப்பட்டன.

ஓலைகளின் பெயர்கள் பல வகைகளாக இருந்தன என்பதை, ஓலைகள் பட்டோலை, பொன்னோலை, மந்திரஓலை, வெள்ளோலை, படியோலை என்று இலக்கியங்களிலும், அறையோலை, கையோலை, சபையோலை, இறையோலை, கீழ்ஒலை, தூது ஓலை, ஓலைப் பிடிபாடு என்று கல்வெட்டுகளிலும், ஆளோலை, அடவோலை, இசைவோலை, ஆணையோலை, கடன் ஓலை என ஆவணங்களிலும் பலவகைகளாகச் சொல்லப்பட்டுள்ளன என அறிய முடிகிறது.

வெள்ளோலை:

எழுதப்படாத ஓலை, முத்திரையிடப்படாத வலை.

குடவோலை:

இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதி ஒரு பானையில் போட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். இடைக்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில், முதலாம் பராந்தக சோழனின் (கி.பி.907955) 12 ஆம் ஆட்சி ஆண்டிலும் (கி.பி 917), 14 ஆம் ஆட்சி ஆண்டிலும், பொறிக்கப்பட்டுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகள் மூலம் குடவோலை முறை வழக்கிலிருந்ததை அறியலாம். உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கிராமம் வைகுத்தப் பெருமாள் கோவிலில் உள்ளது.

முத்திரை ஓலை:

அரசர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள் முதலானோர் ஓலை எழுதி முத்திரையிட்டு வழங்கும் ஓலை.

நீட்டோலை:

திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை. நீட்டோலை என அழைக்கப்பட்டது.

அடியோலை/’ மூல ஓலை:

அடியோலை/ மூல ஓலை என்பது ஆசிரியர் தம் கைப்பட எழுதியதைக் குறிக்கும். இந்த ஓலைகள் அடியோலை/ மூல ஓலை என அழைக்கப்பட்டன.

அச்சோலை/ படியோலை:

ஓலைச் செய்தியை அச்செட்டாக உள்ளபடியே படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. பழுநடைந்த, தாள்பட்ட மூல ஓலைகள், ஏற்கனவே படியெடுத்துப் பயன்படுத்திய பழுதடைத்த ஓலைகள் ஆகியனவற்றை தன் வசம் வைத்துக்கொள்ளவும். மற்றவர்களுக்கு அளிக்கவும் வேண்டிப் புதிய ஓலையில் எழுதப்பட்ட ஒலைகள் அச்சோலை/ படியோலை எனப்பட்டன.

சுருள் ஓலை:

கடிதம் எழுதிச் கருட்டி முத்திரையிடப்பட்ட ஓலை. ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணித்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன. இவை சுருள் ஓலைகள் எனப்பட்டன. இதை “கருள்பெறு மடியை நீக்கி” எனப் பெரியபுராணத்திலுள்ள பாடல் மூலம் அறிய முடிகிறது.

குற்றமற்ற ஓலை:

முளியும் பிளப்பும் இல்லாத ஓலை குற்றமற்ற ஓலை எனப்பட்டது.

செய்தி ஓலைகள்:

எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டும் அவை தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.

நாளோலை:

தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை நாளோலை எனப்பட்டது.

திருமந்திர ஓலை / ஆணையோலை:

அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை திருமந்திர ஓலை எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணை தாங்கிய எனப் பொருள்படும் “கோனோலை”, “சோழகோன் ஓலை” “கட்டனைத் திருமுகம்” போன்ற சொற்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன.

மணவினை ஓலை:

திருமாச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை மணவினை ஒலை எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தப்பட்டது.

சாவோலை:

இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓவை “சாவோலை” எனப்பட்டது.

தூது ஓலை:

வேற்றுநாட்டு அரசர்களுக்கு, சிற்றரசர்களுக்குத் தூதாக அனுப்பப்பட்ட ஓலைகள் தூது ஓலை எனப்பட்டன. காதலன், காதலியர் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்டதும் தூது ஒலை எனப்பட்டது.

ஆளோலை:

ஆளோலை என்பது பண்டைய தமிழகத்தில் இருந்த ஓர் அடிமை முறையாகும். அடிமையாவோர் அடிமையாளருக்கு எழுதிக் கொடுக்கும் ஓலைக்கு ஆனோலை என்று பெயர். இது நானும், என் வழித் தோன்றல்களும் உங்களுக்கும் உங்கள் சந்ததியாருக்கும் அடிமை என்று ஒருவர் ஓலையில் எழுதித் தருதல் ஆகும். ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும். தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக கொடுக்கும் பழக்கமுண்டு.

அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம். தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும். அடிமை விற்பனை ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது.

இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் திட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. 1855ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் அரசமைப்பில் அடிமை முறை இருந்தது. ஆளோலை மூலம், இறைவன், சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட நிகழ்வை, சுத்தரின் வரலாற்றில் இருந்தூம் அறியலாம்.

அடைவோலை:

அடைவோலை சொத்தை சுடுகாட்டி எழுதிக் கொடுக்கும் அடமானக்கடன் பத்திரம்

அறுதி முறி அறையோலை:

தீர்ந்துபோன, ஒப்பந்தக் காலம் முடித்து உரிமையற்றுப் போன ஒப்பந்தச் சீட்டு ஓலை

இசைவுத் தீட்டு/இசைவோலை:

உடன்படிக்கை சான்று.

உபயத் தீட்டு:

கோயிலில் வழிபாடு செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதற்கமைந்த உடன்பாட்டு ஓலை.

கடன் ஒலை:

கடன் சீட்டு, கடன் முறி, கடன் பத்திரம், வாங்கும் கடனுக்கு ஆதாரமாக எழுதிக் கொடுக்கும் ஆவணம்.

சீதன ஓலை:

மணமக்களுக்கான சீதனம் எழுதிக் கொடுக்கும் ஓலை.

பிடிபாடுத் தீட்டு/ஓலைப் பிடிபாடு:

ஆதாரமாக எழுதித் தரும் உறுதி ஓலை.

பற்றுமுறி ஓலை:

தொகையைப் பெற்றுக் கொண்டவர் பற்றுச் சீட்டாக எழுதி வழங்கும் ஓலைத் துணுக்கு.

பொன்னோலை:

பொன்னோலை என்பது தங்கத்தினால் செய்யப்பட்ட ஓலையாகும். பனை ஓலை எவ்வாறுள்ளதோ அதேபோன்று தங்கத் தகட்டை நீட்டி அதில் பனை ஓலையில் எழுதுவது போன்றே எழுதியுள்ளனர். இவ்வோலையிலும் எழுத்தாணிகளால்

பொன்னோலையில் எழுதி அனுப்பப்பெற்ற மூன்று அரிய தமிழ் மடல்கள் ஹாலந்து நாட்டு சோபன்ஹேகன் அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்தப் பொன்னோலைகள் குறித்த தரவுகளை, வெளிநாடுகளில் உள்ள ஓலைச்சுவடிகள் பற்றிய தொகுப்பில் பின்னர் விரிவாக பார்ப்போம்.

எழுத்தோலை நீளும்…

திரு. .இராமகிருசுணன்,

செந்தமிழர் பாசறைஅமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles