டிசம்பர் 2022
எழுத்தோலை
சுவடியில் எழுதும் முறை
ஆதி காலத்தில் மனிதர்கள் தங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் சைகைகளின் மூலம் வெளிப்படுத்தினர். அதன் பின்னர் தங்களுக்கொத் தனித்த மொழிகளை உருவாக்கி உரையாடலின் மூலம் தொடர்புகளையும் தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொண்டனர். இப்போதும் கூடச் செவி வழியாக வந்த கதைகள், கவிதைகள், பழமொழிகள், வரவாறுகள், சிலேடைகள், வாழ்வியல், மருத்துவம், வானியல் முறைகள் எள நிறைப் உள்ளன.
இவையெல்லாம் அந்தக் காலத்தில் ஆவணப்படுத்து வதற்குரிய தகுந்த முறைகள் இல்லாமையால் ஏற்பட்டது. பிள்ளர் ஆவணப்படுத்துவதற்காக பழந்தமிழர்களால் பளை ஓவைகளை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ஏடு எனும் ஓலைச்சுவடி ஆகும்.
தமிழன் தன கருத்துச் சுவட்டைப் பதித்த பொருளை முதலில் ‘சுவடி’ என்றே அழைத்திருக்க வேண்டும்.
சுவடி என்பது இணை, கற்றை, கட்டு, பொத்தகம் என்னும் பெயர்களையும் பெறுகிறது. பொருத்தி அழகு படுத்தலைச் சுவடித்தல்’ என்பர். சுவடிசோடி, சோடனை ரு அழகுபடுத்துதல் ஆகும்.
எழுதப்பெற்ற ஒலைகளின் சுவடிப்பே ஓலைச்சுவடி’ ஆனது எனவும் கொள்ளலாம்.

கல்லில் வெட்டுவது போன்ற கருவிகளைக் கொண்டு செதுக்கப்பெறும் கலவெட்டுப் படிவங்களிலிருந்து வேறுபடுத்திக காட்டக்கூடியதே சுவடியாகும். மிகப் பழங்காலத்தில் அல்லது இடைக் காலத்தில் எழுதப்பெற்ற எழுத்துப் படிவங்களைக் குறிப்பதற்கே சுவடி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்று ஆங்கிலப் பேரகராதி கூறுகிறது.
‘சுவடி’ என்ற சொல்லானது நூல் என்ற பொருளிலும் வழங்கி வருகிறது. நூல் என்ற பெயர் பொருட்சிறப்போடு உவமைக்குப் பெயராகவும், காரணக் குறியாகவும் பெருவழக்கில் இருந்து வருகிறது என்பது வெளிப்படை. இவற்றைப் போல்வே ‘சுவடி’ என்னும் சொல் நூலைக்குறித்து நிற்கும் காரணப் பெயராகி வழக்காற்றிலும் இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது.
இணையாக நறுக்கி பதப்படுத்தப்பட்டுச் சேர்த்துக் கட்டி எழுக ஆயத்தமாக உள்ள ஓலைகளை வெள்ளோலைச் சுவடி என்பர். எழுதுவதற்கு முன் இவ்வாறு முதலில் வெள்ளோலைச் சுவடிக்கட்டை உருவாக்கிக் கொள்வர். இவ்வாறான வெள்ளோவைச் சுவடிக் கட்டுகளை அக்காலத்தில் சுவடிக்கடைகளில் விற்பனை செய்துள்ளனர். (இன்றைய வெள்ளைத் தாள் வரித்தாள் குறிப்பேடுகள் போன்று) வெள்ளோலைச் சுவடிக் கட்டுகளை உருவாக்குவதையே சிலர் தொழிலாகவும் கொண்டிருந்தனர், ஓலைக்கடை வைத்திருந்த புலவா ஒருவரை ஓலைக்கடையத்தனார் என்றே அழைத்துள்ளனர்.
வெள்ளோலையில் எழுதுவதை ஒலைதீட்டுதல் என்பர்.
பொதுநிலையில் எளிதாகவும் விரைவாகவும் எழுதக்கூடிய எழுது கருவிகளால் வெள்ளோலைகளில் செய்திகளை எழுத்தாணி கொண்டு பதிவு செய்து, எழுத்துக்களின் சுவடு (அடையாளம்) பதியுமாறு எழுதப்பெற்ற ஏடுஓலைகளின் தொகுப்பே சுவடி எனப் பெயர் பெறுகிறது.
எழுதப்படுதலின் எழுத்து என்பது போல எழுத்துச்சுவடு உடையதால் சுவடி எனக் காராப் பெயர் பெறுகிறது.
பதிதலால் உண்டாகும் பதிவைச் சுவடு என்று,
“பூவா ரடிச்சுவடுஎன் தலைமேல் பொறித்தலுமே” (திருவா.241)
வெஞ்சினத்து அரியின் திண்காற சுவட்டோடு விஞ்சை
வேந்தர், பஞ்சியங் கமலம் பூத்த பசுஞ்சுவடு உடைத்து
மள்னோ” (பாலகாண்டம், 934) போன்ற இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
பழங்காலத்தில் தற்காலத்தில் உள்ளதுபோன்று கல்விக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்படவில்லை. மாணவர்கள் ஆசிரியரைத் தேடிச சென்று கல்வி கற்கும் முறை இருந்தது.
அக்காலத்தில் காகிதமும் எழுதுகோலும் வழக்கிற்கு வரவில்லை. ஒலைகளில் எழுத்தாணியால் எழுதித் தொகுத்த சுவடிகளே நூல்களாக இருந்தன. அப்போதைய மாணவர்களுக்கு மணல் கரும்பலகையாகவும், பனைஒலை புத்தகமாகவும், விரலும் எழுத்தாணியும் எழுதுகோலாகவும் இருந்தன.
ஆசிரியர் முதலில் மாணவரின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்து தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது தானியங்களில் எழுத்தை எழுதிக்காட்டுவார். பிளனர் மணலில் எழுத்தின் வரிவடிவை எழுதிக்காட்டுவார். பிறகு அவர் சொல்லிய தமிழ் எழுத்துக்களைப் பிழையின்றிச் சரியாக உச்சரிக்கவேண்டும். தமிழின் ஒவி வடிவை நன்றாகச் சொல்லத் தெரிந்த பின்புதான ஆசிரியர் எழுத்தின் வரிவடிவை ஒலையில் வரைந்து காட்டுவார். வரிவடிவை மாணவர் நன்றாக எழுத அறிந்து கொண்டதன் பின் ஒவை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் முற்படுவார்கள்.
பனை ஓலைகளில் திறம்பட எழுதுவதென்பது சிறந்த பயிற்சியின் மூலமே சாத்தியமாகும். அதாவது, இளமை முதலே ஓலையை இடக்கையில் பிடித்து, வலக்கையால் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் பழகுவா. எழுத்தாணியைப் பிடித்து எழுதும்போது ஓலையைத் தான் நகர்த்துவா. எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே வரையும், தற்போது தட்டச்சு முறையிலும் தான்மீது அச்செழுத்துப் படிந்து, தானதான் நகர்த்து போகிறது.
அச்செழுத்து மையத்தில் மட்டும் அழுந்துகிறது. வேறு இடங்களுக்கு அது அசைவதில்லை என்ற நுட்பம் இச்சந்தர்ப்பத்தில் அறிந்து ஒப்புநோக்கத் தக்கதாகும். ஏடு எழுதப்பழகிக் கொண்டோர் தமது இடக்கைப் பெருவிரல் நகத்தை வளர்த்து, அதில் பிறைவடிவில் துளையிட்டு, அப்பள்ளப் பகுதியில் எழுத்தாணியை வைத்து, ஓலையில் வரிவரியாக எழுத்தின் மீது மற்றோர் எழுத்துப் படாமலும் ஒரு வரியின் மீது மற்றோர் வரி இணையாமலும் போதிய இடம்விட்டு எழுதுவர்.
ஒருபக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக இருபது, முப்பது வரிவரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணியையும் பயன்படுத்துவதுண்டு. தமிழ்நாட்டில் முன்பெல்லாம் முதியோர்களும், அறிஞர்களும், படைப்பாளிகளும் கையில் ஓலையும், அரையில் எழுத்தாணியும் வைத்திருந்தனர். வீடுகள் தோறும ஓலைச்சுவடிகள் இருக்கும்.
வெள்ளோலையைக் கண்ணால் பார்த்துவிட்டு அவற்றில் எழுதாமல் சென்றவனை அக்காலத்தில் இகழ்ந்திருக்கின்றனர். இதனை தமிழ் பெரும பாட்டி ஒளவையார்,
‘வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றாமற் றோற்றோமற் றெற்று” எனப் பாடியுள்ளார்.
இன்று பல்வேறு எழுதுகோல்களும், குறிப்பேடுகளும், தாள்களும் எளிதாக கிடைத்தாலும், கிஞ்சித்தும் நாணமின்றித் தாய்த் தமிழ் மொழியை எழுத அறியாத, எழுத விரும்பாத தலைமுறையாக மாறிவிட்டோம் என்பதுதான் துயரம்.
எழுத்தோலை நீளும்…
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.