டிசம்பர் 2022
தமிழும் அறிவும்
தமிழர் திருநாள்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி, அவர்களுக்கு ஒருமகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. ஒன்பது வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்ப பாடசாலையில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகள் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் முதலாம் வகுப்பு மாணவன். பாடசாலையில் சேர்ந்து ஆறு மாதங்களே ஆகிறது. துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும் வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
கிழமைதோறும் பாடசாலையில் அறிவன் காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன் உடல் நலனும், மனநலனும் பேணும் ஓகப்பயிற்சி வழங்குவார்கள். இன்று அறிவன் கிழமையாதலால் இருவரும் பாடசாலைக்கு அரைமணி நேரம் முன்னதாகவே புறப்பட்டனர்.
செல்லும் வழியில் உள்ள வீடுகளையும், ஆங்காங்கே வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களையும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
அருகமை நகரத்தில் உள்ள திரையரங்கில் ஓடும் படத்திற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தான. ஆங்காங்கே
ஆளும், ஆண்ட கட்சிகளின் ஆரவாரமான, புரட்டு மொழிகளுடன் கூடிய பெரிய பெரிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இவற்றையெல்லாம் மேம்போக்காகக் சடந்த தமிழ்ச்செல்வன், சாலையின் எதிர்புறச் சுவற்றில் தனித்துத் தெரிந்த ஒரு சிறிய சுவரொட்டியைக் கண்டதும் சட்டென நின்றான்.
தம்பியின் கைகளைப் பிடித்து சென்ற அறிவுச்செல்லி, தம்பி சட்டென்று நின்றதும் அவளும் நின்றாள். தம்பியைத் திரும்பிப் பார்த்தாள். அவன் சுவற்றை நோக்கிக் கொண்டிருந்ததை கண்ட அவளும், அவன் கண்கள் செல்லும் திசையைப் பார்த்தான்.
அங்கிருந்த சுவரொட்டியை கண்டதும் அவள் கண்கள் விரிந்தன. அதில் உள்ள படங்களை கண்டதும் உள்ளத்தில் இனம்புரியாத உவகை பொங்கியது.
சிறிய அளவிலான சுவரொட்டியானதாலும், நாற்பதடி சாலையைத் தாண்டி நடைபாதையில் நின்றதாலும், படங்கள் தெரிகிற அளவுக்கு இருந்தாலும், அதில் உள்ள எழுத்துக்கள் முழுவதும் தெளிவாகத் தெரியவில்லை.
சுவரொட்டியில் என்ன எழுதியுள்ளது என அறியும் ஆவல் உந்த, அவள் சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஏதும் வருகின்றனவா என நோக்கியவள், வலது பக்கம் தூரத்தில் ஒரே ஒரு குருளி மட்டும் வருவதை கண்டாள். உடனே தம்பியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு சாலையை கடந்து எதிர்புறம் வந்தாள்.
சுவற்றின் அருகில் சென்று சுவரொட்டியை இருவரும் உற்று நோக்கினர். இப்போது அதில் உள்ள படங்கள் மேலும் பெரிதாக தெளிவாகத் தெரிந்தன. எழுத்துக்களும் தெளிவாகத் தெரிந்தன.
சிரிய சுவரொட்டியெனினும் அதில் இரண்டு பக்கங்களிலும் படங்கள் இருந்தன. சுவரொட்டியின் வலதுபக்கம் மார்பளவுப் படமாக, இராணுவ உடையில் கம்பீரமான தோற்றத்துடன் இளம்புன்னகையுடன் தேசியத்தலைவர். இருவரும் பற்றிப்பிடித்திருந்த கைகளை விலக்கி, இருகரம் கூப்பி, தலைகுனிந்து தலைவருக்கு வணக்கம் செலுத்தினர்.
சுவரொட்டியின் இடதுபக்கம் வலது உள்ளங்கையை விரல்களுடன் மடக்கி, குருதி நாளங்களும், நரம்புகளும் புடைக்க கையை உயர்த்தியபடி, பச்சை நிறச் சட்டையுடனும், பாங்காய் உடுத்திய வேட்டியுடனும், கூரான பார்வையுடனும் முழு உகுவமாக செந்தமிழன் சீமான்.
தமிழ்ச்செல்வன் வலது கையை நீட்டி, வியப்புடன், “அக்கா, அக்கா அதோ பெரியப்பா’ சுட்டிக் காட்டினான். “ஆமாம் தம்பி பெரியப்பா” என மகிழ்வுடன் வெற்றிச்செல்வியும் தானது இரண்டு கைகளையும் தம்பியின் இரு தோன்களின் மீது ஆதரவாக வைத்தாள், பின் இருவகும் தமது கைகளை மடக்கி உயர்த்தி, “தாய்த்தமிழ் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
தாம் தமிழர், நாம் தமிழர்” என மூன்றுமுறை கூறி வணக்கம் செலுத்தினர்.
சுவரொட்டி இன்னும் சரியாகக் காயவில்லை. தமது அன்றாட பணிகளை முடித்த பின்பு, நள்ளிரவுக்குப் பின் இளத்தின் விடுதலையை நெஞ்சில் சுமந்த தன்னலமற்ற உறவுகளால் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். மேடு பள்ளமான சுவற்றில் சுவரொட்டியின் ஈரமும் சேர்ந்துக் கொள்ள, காலைச் சூரியனின் கதிர்கள் சுவரொட்டியின் மீது பட்டு, அலையலையாக கண்ணாடி போல் மினுங்கியது.
அறிவழகி சுவரொட்டியில் அச்சாகி இருந்த எழுத்துக்களை, எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தாள்.
மேலே இரண்டு ஓரங்களிலும், சிறிய எழுத்தாக “வீழ்ந்து விடா வீரம்” “மண்டியிடா மானம்” என அச்சிடப்பட்டு இருந்தது. நடுவில் சிறிதாக ஐயன் வள்ளுவர், ஐயா. நம்மாழ்வார் படங்கள் இருந்தது. அதனை ஓட்டி மாவிலைத் தோரணமும், நெற்கதிர்களும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அடுத்து நடுவில் சூரியனும், சற்று கீழே அழகான வண்ணக் கோலத்தின் மீது கரும்புகள், சோடிக்கப்பட்ட பொங்கல் பானை, படையல் ஆகியவை இருந்தன. வலது புறம் சிறிய அளவில் ஏர் பூட்டிய மாடுகள் படமும், இடது புறம் காளையை ஒருவர் அடக்கும் படமும் இருந்தது.
சற்று ஓரத்தில், பச்சை நிறத்தில், கோட்டோவியமாக இரண்டு கரும்புகளை மார்புடன் அணைத்துக்கொண்டு, முண்டாசுடன், கைகளை கட்டியபடி விவசாயியின் மார்பளவுப் படம் ஒரு வட்டத்திற்குள் இருந்தது.
அவ்விவசாயியின் முகத்தோற்றம், அழிந்து கொண்டிருக்கும் வேளாண்மையை எண்ணிய கலக்கமா? காப்பாற்ற யாருமற்ற ஏக்கமா? பயிர்க்கடனை எண்ணிய வருத்தமா? பயிர்த்தொழிலை தொடரத் தயக்கமா? அல்லது உயிர் கொடுக்க உறுதுணையாக எழுந்து வகும் “நாம் தமிழர்” இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை கொண்ட இளமுறுவலா? என பல முகபாவங்களைக் கொண்டதாக இருந்தது. புதிரான மோனலிசா ஓவியத்தைப் போன்ற நவீன பதிப்பாகத் தோன்றியது.
அடுத்து மிகப் பெரிய எழுத்துக்களாக, “தை 1 தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” “பனையூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு” என்றும், அதனடியில் சற்று சிறிதாக “நாம் தமிழா சட்சி” என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
முழுவதையும் படித்த அறிவுச்செல்வியின் மனதுக்குள் பெரும் மகிழ்வாக இருந்தது. ஆனாலும் சற்று நெருடலாக இருந்தது. ஐயமும் எழுந்தது.
தமிழ்ச்செல்வனுக்கு படிக்கவரவில்லையெனினும் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன், சாலையில் சென்ற ஒரு சில வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு சென்றதைத் திரும்பிப் பார்த்துப் பின் அக்காவின் கையைப் பற்றினான். தம்பியைத் திரும்பிப் பார்த்துப் பாடசாலைக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்த அறிவு, தம்பியின் கையைப் பற்றிக்கொண்டுப் பாடசாலையை நோக்கி விரைந்தாள்.
மாலையில் இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும் தமிழ் தனது புத்தகப் பையைக் கதவருகில போட்டுவிட்டு, அம்மா என அழைத்துக் கொண்டுச் சமையலறையை நோக்கி ஓடினான்.
அறிவு தனது புத்தகப்பையைக் கூடத்தில் உள்ள தன்னுடைய மரப்பெட்டி மீது ஒழுங்காக வைத்தாள். கதவருகில் இருந்த தம்பியின் புத்தகப் பையையும் எடுத்து அவனது பெட்டியின் மேல் வைத்தாள். ஒரு நாற்காலியை எடுத்துச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த நாள்காட்டியின் அருகில் போட்டு, நாற்காலி மீதேறி நாள்காட்டியை அட்டையுடன் எடுத்தாள்.
2023 ஆம் ஆண்டுக்கான புத்தம் புதிய நாள்காட்டி. அட்டையின் மணமும், பசையின் மணமும் இன்னும் இருந்தது.
“வீட்டிற்கு வந்ததும் நாற்காலியில் ஏறி என்ன செய்கிறாயடி?”என வினவிக் கொண்டே அம்மா கூடத்திற்குள் வந்தாள்.
அறிவு அம்மாவை நோச்சி, “இரும்மா! இதைப் பார்த்துவிட்டு வருகிறேன்!” என பதிலுரைத்தாள்.
அம்மா அவளைக் கூர்ந்து கவனிக்க, நான்காட்டியின் பக்கங்களை ஒவ்வொன்றாகத் திருப்பினாள். தை ஒன்று, சனவரி 15 பக்கத்தில் பொங்கல் பானை, கரும்பு படத்தைக் கண்டதும் அதில் உள்ள எழுத்துக்களைப் படிக்கலானான். “தைப்பொங்கல்” அரசு விடுமுறை என சற்று தடித்த எழுத்துக்களில் இருந்தது. வேறு குறிப்பிடத்தக்கவாறு வேறெதுவும் எழுதப்படவில்லை. மீண்டும் குழப்பத்துடன் சித்திரை மாதத்தை நோக்கிப் பக்கங்களைத் திருப்பினாள். சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறை என அச்சிடப்பட்டிருந்தது. பெருங்குழப்பத்துடன், நாள்காட்டியை திரும்ப மாட்டியவள், சரி அப்பா வந்ததும் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு கீழிறங்கினாள்.
கழிவறை சென்று கைகால்கள், முகத்தையும் கழுவி துடைத்துக்கொண்டு, தனது மரப்பெட்டி அருகே அமர்ந்து வீட்டுப் பாடங்களை எழுதத் தொடங்கினாள்.
சற்று தாமதமாகவே வீட்டிற்கு வந்த மாறன் குளித்துவிட்டுவர, அனைவரும் உணவருந்தினர்.
பின் ஓய்வாக நால்வரும் அமர்ந்து பள்ளியில் நடந்தவற்றை கேடகத்தொடங்கினர்.
தமிழ் தனது வகுப்பில் நடந்தவற்றை உடல்மொழியுடன் விவரித்தான்.
அறிவு தந்தையிடம், “அப்பா… தமிழ் புத்தாண்டு என்றைக்கப்பா?” எனக் கேட்டாள்.
மாறன் மகளிடம் தமிழ்ப்புத்தாண்டு தை ஒன்று என கூற அதன் பின் உரையாடல் இவ்வாறு தொடர்ந்தது.
“ஆனால் நாள்காட்டியில் சித்திரை ஒன்று என்று போட்டிருக்கிறதே..!
ஒன்று போடவில்லையே ஏன்?..” தமிழ்ப்புத்தாண்டு எனப்
“தமிழ்ப்புத்தாண்டு தை ஒன்று தான் செல்வம்.. சித்திரையன்று என்ன ஆண்டு போட்டிருக்கிறார்கள்!..”
“சுபகிருது ஸ்ரீ தமிழ்ப்புத்தாலாடு வாழ்த்துகளண்ணு போட்டிருக்கப்பா….!”
“சுபகிருது ஸ்ரீ என்பதே தமிழ்ச் சொல் இல்லையே …” “சுபகிருதுன்னா என்னப்பா பொருள்…?”
“சுப்சிருதுன்னா அது வட மொழிச்சொல் தங்கம்…!”
“அப்ப போன வருஷத்துக்கு என்னா பேருப்பா..?”
“அதுவா தங்கம்… பிலவ என்று பேருடா…!”
“அதாவது தமிழ்ச்சொல்லாப்பா..
“இல்லடா கன்னுக்குட்டி… அதுவும் தமிழ்ச்சொல் இல்ல..! அதுமட்டுமில்ல… அறுபது வருஷத்தோட பேரு எதுவுமே தமிழ்ச்சொல் இல்லடா செல்லம்!”
“ஒரு பேரு கூட தமிழ்ல இல்லன்னா அப்புறம் எப்படிப்பா அது தமிழ்ப் புத்தாண்டு?”
“நல்ல கேள்விடா… இப்படித்தான் கேள்வி கேட்கணும்… கேளவி கேட்டாத்தான் சிந்திப்போம்… உண்மை எது? பொய் எதுன்னு யோசிப்போம்… வெறுமனே நம்பிக்கை இது. அது என குழப்பிக்கொள்ளக் கூடாது செல்லம்!”
“இக்கே ரொம்ப நாளைக்கு முன்னாடி உள்ளே நுழைஞ்ச சிலர் தங்களோட வசதிக்காக யாரும் சீக்கிரம் கேள்வி கேட்கக் கூடாதுன்னு சாமி விஷயம்… கடவுள் நம்பிக்கைன்னு அதையும் இதையும் உள்ள நுழைச்சு நாம் கும்புட்டு இருந்த சாமிக்குள்ள அவங்க சாமியை சேத்து, கதையை எழுதி கடைசியில் எது உண்மைன்னே தெரியாத மாதிரி கலந்து குழப்பிட்டாங்க…தாம் தான் நமது வரலாறுகளை படித்து அறிந்து தெளிந்துகொள்ள வேணுமடா கண்ணு!”
“அப்போ நாம கொண்டாடுவோமப்பா..?” எப்போ புத்தாண்டு
“தாம் மட்டுமல்ல, தமிழர்கள் அவலவரும் தை ஒன்றையே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமடா …!”
“நல்லதப்பா… எனக்கு புத்தாடை எடுத்துத் தருவீர்களா?” தமிழ் குறுக்கிட்டு, “அப்பா! எனக்கும்…!” என்றான்.
“ஆமாடா கண்ணு! நானை நாம் அனைவரும் புத்தாடை வாங்கச் செல்வோம். சரி புத்தாண்டைப் பற்றி இத்தனை ஐயங்கள் உனக்கு எப்படி ஏற்பட்டது?”
“அதுவாப்பா…!…..” என்று காலையில் சுவரொட்டியில் பார்த்ததைக் கூறினாள்.
தமிழும், “ஆமாப்பா…! தேசியத் தலைவரையும்,
பெரியப்பாவையும் நானும் பார்த்தேன்!” எனக் கூவினான்.
“அப்படியா! மிக்க மகிழ்ச்சி. புலிக்கொடியேற்ற நிகழ்வில் நாமும் உறுதியாக கலந்து கொள்வோமடா செல்லம்!”
அறிவு, ஐயம் தீங்கி, தெளிவுடனும், புத்தாண்டை பற்றி மகிழ்வுடனும் உறங்கச் சென்றாள். அனைவரும் உறங்கச் சென்றனர். தை ஒன்று தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அவரிந்தனர்.
மாறன் முதல் நாள் வாங்கி வைத்திருந்த மஞ்சனகொத்து, தோப்பிலிருந்து கொண்டுவந்த, மாவிலைக் கொத்துக்கனையும் சோத்துக் சணல் கயிற்றில் கட்டி வீட்டுக் கதவின்
நிலைப்படியில் உள்ள ஆணிகளில் தோரணமாக கட்டினான்.
பொற்கொடி வீட்டு முற்றத்தில் சாணத்தால மெழுகி கோலமிட்டாள். மாறன் மூன்று கரும்புகளை இணைத்து கூம்பாக வைத்து பூக்களையும் மாவிலைகளையும் சேர்த்து கட்டினாள். பொங்கல் வைப்பதற்காக செய்யப்பட்ட கற்களால் அடுப்பைக் கூட்டினான்.
பொற்கொடி பொங்கல் வைக்க தொடங்கினா. அடுத்தடுத்த வீடுகளிலும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.
பொங்கல் பொங்கிவர நால்வரும் பொங்கலோ பொங்கல என முழங்க, அடுத்தடுத்த வீடுகளிலும் பொங்கலோ பொங்கல் எனும் முழக்கம் கேட்டது. ஊரெங்கும் ஆரவாரமும், மகிழ்ச்சியும் பொங்கியது.
பொங்கல் வைத்து இறக்கிக் கரும்புகளுக்கு இடையே வைத்து, வாழையிலையில் பொங்கல் படையலிட்டு, ஒளிவீசி உலகத்தின் உயிர்காக்கும் சதிரவனை வணங்கி, தமது குல தெய்வங்களையும், முப்பாட்டன் முருகனையும் வணங்கி, ஐயன் வள்ளுவனையும், ஐயா நம்மாழ்வாரையும் போற்றி இயற்கையையும், பயிர்த்தொழிலின் தோழர்கள் மாடுகளையும் நினைவு கூர்ந்தனர்.
மணி ஒன்பதை கடந்துவிட்டதால், பதினொரு மணிக்கு கொடியேற்ற நிகழ்வுக்குச் செல்ல வேண்டுமே என எண்ணி, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பொங்கல், கரும்பு, பழங்களை வழங்கிப் பின் நால்வரும் பொங்கலை உண்டனர்.
அதிகாலையில் எழுந்து தொடர்ந்து வேலையாக இருந்ததாலும், இனிப்பான பொங்கலை உண்டதாலும் சற்று அயற்சியாக உணர்ந்தனர். சிறிது நேரம் ஒய்வெடுத்து, முகம், கைகால்களைக் கழுவி வந்ததும் புத்துணர்வு தொற்றிக் கொண்டது. பொற்கொடி மகளுக்கும் மகனுக்கும் மீலாடும்
தலைவாரி, தானும் புறப்பட ஆயத்தமானாள்.
மாறன், பொற்கொடி அறிவுச்செல்வி, தமிழ்ச்செல்வன் நால்வரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். பக்கத்து வீடுகளில் இருந்தவர்களிடம் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கொடியேற்ற நிகழ்வுக்குத் தங்களுடன் வருமாறு அழைத்தனர். சிலர் கொடியேற்ற நிகழ்வுக்கு ஆயத்தமாகவே இருந்தனர். சிலர் மாறனின் அழைப்பை ஏற்று உடனே புறப்பட்டனர். சிறார்களும், பெண்களும் ஆண்களுமாக ஐம்பதுக்கும் அதிகமானோர் புலிப்படையாக, புவிக்கொடியேற்ற புறப்பட்டனர்!
இனி இந்நிலத்தில் பட்டொளி வீசி புவிக்கொடி பறக்கும்!!
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாறை – அமீரகம்.