ஏப்ரல் 2023
தமிழும் அறிவும்
தமிழ்நாடு மாநில உருவாக்கம்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம், மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில் தான்காம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறு வயதாகிறது. அதே பாடசாலையில் முதலாம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டு இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையனிப்பாள்.
ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி விவாதிக்கும் அறிவான குடும்பம்.
இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், மாறனுக்கும். பொற்கொடிக்கும் ஓய்வுநாள். அறிவுக்கும், தமிழுக்கும் கோடை விடுமுறையாதலால் பகல் உணவு அருந்திவிட்டு ஓய்வாக அமர்த்து தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கோண்டிருந்தனர். வழக்கம் போல அவை ஆக்கம் நிறைந்த, அறிவார்ந்த செய்திகளைத் தராமல், கோளல், கொள்ளைச் செய்திகளையும், திரைக்கலைஞர்களைப் பற்றியும், இல்லாத திரட மாடல் பற்றியும் புனைவுச் செய்திகளைப் பரப்பில் கொண்டிருந்தன.
இன்று தமிழ்நாடு, ஆந்திர மாநிலக் கரையோர மாவட்டங்களில் இலேசான (தூறல், சிறு மழை) மழைக்கு வாய்ப்பு என ஒரு வாக்கியம் வரிச்செய்தியாகக் கீழே ஓடிக் கொண்டிருந்தது.
இராவிட மாடல் புனைவுச் செய்தியைப் புறந்தள்ளி, 8 ஓடிக்கொண்டிருந்த செய்தியை அறிவுச்செல்வி படித்துக் கொண்டிருந்தாள். தமிழ்நாடு, ஆந்திர மாநில மற்றும் மாவட்டங்கள் என்னும் சொல்லாடல்கள் அவளின் எண்ணத்தில் ஊஞ்சலாடின. உடனே தந்தையை நோக்கித் தனது ஐயத்தை எழுப்பினாள். மாறனும் தோலைக்காட் குறைத்துவிட்டு உரையாடத் தொடங்கினான். ஒளியைக்
அறிவு: அப்பா! மாநிலம் என்றால் என்ன? மாவட்டம் என்றால் என்ன?
மாறன்: இந்திய ஒன்றியத்தில், குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்றிணைத்து மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
பொற்கொடி: தமிழர்கள் நாம் பெரும்பான்மையாக வசிக்கும் இடம் தமிழ்நாடு, மலையாளிகள் வசிக்கும் இடம் கேரளா, கன்னடர்கள் வசிக்குமிடம் கர்நாடகம், தெலுங்கர்கள் வசிக்குமிடம் தெலுங்கானா, ஆத்திரம் எனவும், மராட்டியம், பஞ் சாப்பு இராசத்தான், பிகார், ஒலா, வங்கம் என மொழிகளைக் கொண்டு பிரித்து மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ்: அப்படியானால் மாவட்டங்கள்?
அறிவு: தம்பி, பொறுமையாக இருடா!
அப்பாவும் அம்மாவும் விளங்கச் சொல்லுவாங்க.
பொற்கொடி: ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நமது தமிழ்நாடு மாநிலம் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 38
அறிவு மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிந்தார்கள். ஆனால், மாவட்டங்களை எதன் அடிப்படை பில் பிரித்தார்கள்?
மாறன்: தமிழ்நாட்டு மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காகவே பிரிக்கப்பட்டன.
தமிழ்: எப்போது பிரித்தார்கள்?
பொற்கொடி: ஒரே காலகட்டத்தில் பிரிக்கப்படவில்லை. அது நீண்ட வரலாறு. நாடு விடுதலை அடைத்ததில் இருந்து வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவு: அப்படியானால் அந்த வரலாற்றைக் கூறுங்கள்.
தமிழ்: ஆமாம் அம்மா. கூறுங்கள். அறிந்து கொள்கிறோம்.
பொற்கொடி நல்லது கண்ணுகளா, மாவட்டங்களின் வரலாற்றைக் கூறுகிறோம்.
மாறன் 1947 மாதம் இந்திய ஒன்றியம் விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்: சென்னை மாநிலமா? தமிழ்நாடு மாநிலம் என்றுதானே கூதுகிநோய்ப்பா.
பொற்கொடி: (புன்முறுவலுடன்? பொறுங்கள். விளக்கமாகக் கூறுகிறோம் செல்வங்களே!
மாறன்: பரந்துபட்ட சேன்னை மாநிலம், 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்பு வாயிலாக தற்போதைய எல்லைஎன் உருவாக்கப்பட்டன.
பொற்கொடி: தமிழ்நாட்டில், தமிழர் வாழ்ந்த பல்வேறு பகுதிகள் அண்டை மாநிலங்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
தமிழ்: மொழியின் அடிப்படையில் தானே மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
அறிவு: ஆமாமப்பா, அப்படியெனில், ஏன் தமிழர் பகுதிகளை அண்டை மாநிலங்களுடன் இணைத்தார்கள்?
மாறன்: அப்போதைய அரசமைப்பில் தமிழரல்லாதோரே பெரும்பாலும் இருந்தார்கள். தங்கள் மொழிவழி மாநிலம் சிறக்க, தமிழரின் வனமான பகுதிகளை தமதாக ஆக்கிக் கொள்ள ஒன்றிணைந்து திட்டமிட்டுச் சயபட்டார்கள்
அறிவு: தமிழ் அரசியவகளர்கள் என்ன செய்தார்கள்?
பொற்கொடி: அம்போதும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் மாற்றினத்தவரே. மாறன்: அதியரத்தில் இருந்த தமிழர்களும், இனவுணர்வை விடுத்து இந்திய உணர்வில் ஒன்றியிருந்ததால் தமக்கான நிலங்கள் தாரைவார்க்கப்பட்டன.
அறிவு: அப்படியா?
பொற்கொடி: ஆனாலும், இன உணர்வுள்ள ம. பொ. சி. தேசமணி பொன்றவர்க வடக்செல்லைப் போராட்டம், தெற்கெல்லைப் போராட்டம் ஆகியவற்றை முன்னெடுத்தனர்.
தமிழ்: அவர்கள் போராட்டம் வெற்றிபெற்றதா?
மாறன்: இல்லை. பெரும் தொடர் போராட்டங்களின் விளைவாக
ஒரு சில பகுதிகள் மட்டுமே தமக்குக் கிடைத்தன.
பொற்கொடி: தமிழ்நாட்டின் வளமை நிறைந்த பகுதிகள், ஆறுகள் ஓடிய பகுதிகன் எனப் பல்வேறு பகுதிகள் பிய்த்தெடுக்கப்பட்டு அண்டை மாநிலங்களுடன் சேர்க்கப்பட்டன.
மாறன்: அதனால் தான், நமக்கு இன்றனவும் நதிநீர்ச் சிக்கல்கள்
பொற்கொடி: ம்ம்ம்! என்றுதான் இச்சிக்கல்களுக்குத் தீர்வு வரப்போகிறதோ?
அறிவு: சரிம்மா! மாவட்டங்களைப் பற்றிக் கூறுங்கள்.
பொற்கொடி: சென்னை மாநிலமானது. 1969ஆம் ஆண்டிம் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
மாறன்: முருதைய சென்னை மாநிலமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
பொற்கொடி: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராசு, மதுரை, நீலகிரி, ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள்.
தமிழ் மெட்ரா சுத்திப்பாக்கப் போறேன் மெரினாவில் மாத்துவாங்கப் போறேன்.
அறிவு: ஆகா! ஆகா! நல்லா மாடுற தம்பி. ஆமாம், மெட்ராசு மாவட்டம் நான் கேள்விப்பட்டதே இல்லையே அம்மா?
பொற்கொடி: அதுதான் சென்னை மாவட்டம் எனப் பெயர் மாதி வழங்கி வருகிறது.
தமிழ்: ஓகோ, சென்னை மாநிலம், தமிழ்நாடு ஆகவும், மெட்ராசு மாவட்டம் சென்னை மாவட்டமாகவும் மாறிவிட்டதா?
பொற்கொடி: ஆமாம். தமிழ்.
மாறன்: 13 மாவட்டங்கள்
இருந்ததல்லவா, அவற்றில், 1966 சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொற்கொடி: 1974ல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டைமாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாறன்: 1979ல் கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொற்கொடி:
1985 மதுரை மதனும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
மாறன்: 1985ல் மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொற்கொடி: 1986ல் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து
தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாறன்: 1989 வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து இதாக
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. பொற்கொடி: 1991ல் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
மாறன்: 1993ல் தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
பொற்கொடி: 1995ல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உகுவாக்கப்பட்டன.
மாறன்: 1996ல் மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேளி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொற்கொடி: சரியாகச் சொன்னாய் மகளே! தமிழ் நீயும் படித்து அறிந்துகொள்.
தமிழ் ச அம்மா நானும் படிக்கிறேன்.
அறிவு:
அப்பா! மாவட்டங்களின் சொல்லுங்களப்பா? வரிசைப்படி
பொற்கொடி: 1997ல் சேலம் மாவட்டத்தைப் பிரித்து. இதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாறன்: 19976 முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.
பொற்கொடி: 2004ல் தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாறன்: 2007ல் பேரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொற்கொடி: 2009 கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் இரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாறன்: 1. அரியலூர் 2 செங்கல்பட்டு 3. சென்னை 4. கோவை 5. கடலூர் 6.தர்மபுரி 7. திண்டுக்கல் & ஈரோடு 9. கள்ளக்குறிச் 10. காஞ்சிபுரம் 11. கன்னியாகுமரி 12. கரூர் 13. கிருஷ்ணகிரி 14. மதுரை 15. நாகப்பட்டினம் 16. நாமக்கல் 17. நீலகிரி 18. பெரம்பலூர் 19. துக்கோட்டை 20. ராமநாதபுரம் 21. ராணிப்பேட்டை 22. சேலம் 23. சிவகங்கை 24. தென்காசி 25. தஞ்சாவூர் 26. தேனி 27. தூத்துக்குடி 2x திருச்சி 29. திருநெல்வேலி 30, திருப்பத்தூர் 31. திருப்பூர் 32. திருவள்ளூர் 33 திருவண்ணாமலை 34. திருவாரூர்
35. வேலூர் 36. விழுப்புரம். 37. விருதுநகர் 38. மயிலாடுதுறை. அறிவு: ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தலைநகரங்கள்
உண்டல்லவா? அந்த நகரங்கள் எவை? மாறன்: ஆமாடா செல்லம், பெரும்பாலும் மாவட்டங்களின்
மாறன்: 2019 விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, இதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தலைநகரின் பொரிலேயே ஒவ்வொரு மாவட்டங்களும் அமைத்துள்ளன.
பொற்கொடி: 2019ல் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாறன்: 2019ல் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொற்கொடி: ஆனால் இரண்டு மாவட்டங்களின் தலைநகரங்கள் மட்டும் மாவட்டங்களின் பெயரை கொண்டிருக்கவில்லை.
தமிழ்: அப்படியா! அந்த இருமாவட்டங்கள் என்னென்ன? அவற்றின் தலைநகரங்கள் எவை?
மாறன்: நீலகிரி மாவட்டம், தலைநகரம் உதகமண்டலம்.
கன்னியாகுமரி மாவட்டம், தலைநகரம் நாகர்கோவில்,
பொற்கொடி: 2019ல் வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் இராணிப்பேட்டை மாவட்டமும் உருவாக்கப்பட்டன.
மாறன்: இறுதியாக 2020ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தமிழ்: அப்பப்பா இவ்வளவு வரலாறு இருக்கிறதா? இதை எப்படி நாம் மனதில் இருத்திக் கொள்வது?
அறிவு: பெரியப்பா செந்தமிழன் சீமான் அவர்கள் கூறியது போல நமது வரலாற்றை நாம் அறித்து கொள்ள வேண்டுமல்லவா!
சிறிது சிறிதாகப் படித்து நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அறிவு: இதுவரை பிரிக்கப்படாத மாவட்டங்கள் உள்ளதா?
பொற்கொடி: ஆமாடா கண்ணு. இதுவரை பிரிக்கப்படாத மாவட்டங்களும் நீலகிரியும், கன்னியாகுமரியும் மட்டும் தான்.
தமிழ்: ஆச்சரியமாக இருக்கிறதே, நல்லது. நினைவில் வைத்துக் கொள்கிறேன்.
அறிவு: சிறப்பு: மாவட்டங்களின் வரலாறுகளைச் சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தீர்கள்.
தமிழ், அறிவு: நன்றி அம்மா, நன்றி அப்பா. மாறன், பொற்கொடி மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.