spot_img

தமிழும் அறிவும் – திராவிடப் போதையில் இனத்தை அழியக்கொடுத்த தமிழர்கள்

மே 2024

தமிழும் அறிவும்

திராவிடப் போதையில் இனத்தை அழியக்கொடுத்த தமிழர்கள்

பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒருமகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி.  பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில்  ஐந்தாம் வகுப்புத் தேர்வு எழுதி இருக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.

    மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில்  இரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி இருக்கிறான்.  துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.

   அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத்  தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.

   ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.

பள்ளி விடுமுறையாதலால் அறிவும் தமிழும் வீட்டில் இருந்தாலும், ஓடியாடித் திரிந்த பள்ளி நாள்களைப் போன்று இயல்பாக இல்லாமல், வெயிலின் தாக்கத்தால் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தனர். கூட்டுக்குள் அடைபட்ட பறவை போல் தவித்தனர். மர நிலைப்பேழையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரலாற்றுப் புதகங்களை எடுத்துப் படித்தனர்.

மாலையில் சற்று வெப்பம் தணிந்ததும் அம்மாவுடன் கடைவீதிக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களுடன், நீர்ச்சத்து கொண்ட பழங்களையும் வாங்கி வந்தனர். வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரிப் புத்துணர்வு பூண்டனர். மாறனும் பணிமுடித்து வீடு சேர்ந்திருந்தான். வெயிலின் தாக்கத்தால் சோர்ந்திருந்தான். 

பொற்கொடி ஒரு தட்டில் கழுவி, தோல் சீவி, நறுக்கிய வத்தகப்(தர்பூசணி) பழத்துண்டுகளை கொண்டு வந்தாள். அவை இளஞ்சிவப்பு வண்ணத்தில் முளரிப்பூ(இரோசா) இதழ்களைக் குவித்து வைத்தது போல் கண்களைப் பறித்தன. பழத்துண்டுகளைத் தின்னத் தொடங்கினர். வெப்பமடைந்த உடலுக்கு குளிர்ச்சியையும் நாவிற்கு தீஞ்சுவையையும் அது தந்தது.

அறிவு தான் இன்று படித்த நூலில் இங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியா, பாக்கித்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் விடுதலை பெற்றதைப்பற்றிப் படித்திருந்தான். பிப்ரவரி நான்காம் தேதி 1948ல் இலங்கை விடுதலை பெற்றது எனவும் படித்திருந்தான். ஆனாலும், அவனுள் எழுந்த ஐயத்தைத் தந்தையிடம் கேட்டான்.

அறிவு:- அப்பா! இந்தியா, இலங்கை என எல்லா நாடுகளும் விடுதலை பெற்றபோது ஈழத்திற்கு மட்டும் ஏன் விடுதலைக் கிடைக்கவில்லை?

மாறன்:- இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த தெற்காசிய நாடுகளில் விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்ற போது ஆங்கிலேயர்கள் சூசகமாக தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் நாடுகளுக்கு விடுதலை கொடுத்தார்கள். ஒரு குறிப்பிட்ட தனித்த இனம் குறிப்பாகத் தமிழினம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் வீறு கொண்டு எழுந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டு ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஈழமும் ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்துக்குள் தமிழ்நாடும் சூழ்ச்சியாகச் சேர்க்கப்பட்டன. இது ஒரு வரலாற்றுப் பிழையாகவே தமிழருக்கு அமைந்தது.

அறிவு:- ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களும் விடுதலைக்காகப் போராடினார்கள் தானே… இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்கள் துணை நிற்கின்றார்கள் தானே… பின் ஏன் இந்த சிக்கல் எழுந்தது?

பொற்கொடி:- இலங்கை தனி நாடாக சுதந்திரம் பெற்ற பின்பு, அங்கு பெரும்பான்மையாக இருந்த சிங்களவர்கள் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக மாற்றப்பட்டனர். அதற்குக் காரணமாக ஆரிய வழித்தோன்றல்களான புத்த மத பிக்குகள் திட்டமிட்டு பிரிவினையை விதைத்தார்கள்.

மாறன்:- தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரச அதிகாரம், பிரதிநிதித்துவம் போன்றவை மறுக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் நெருக்கடிக்கு உள்ளானார்கள்.

அறிவு:- கல்வியிலுமா?

பொற்கொடி:- ஆம். பொதுவாக நமது நாட்டில் 35 மதிப்பெண் பெற்றால் தேர்வாகிவிடலாம்.

தமிழ்:- அங்கு என்ன 50 மதிப்பெண் பெற்றால் தான் தேர்வாக முடியுமா?

மாறன்:- அப்படி இல்லை. விடுதலை பெற்றதன் பின்னான ஆண்டுகளில் ஆதிக்க மனப்பான்மை ஓங்கியது என்று கூறினோமல்லவா! பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் திட்டம் போட்டுச் சட்டம் வகுத்தார்கள். பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற தமிழ் மாணவர்கள் 60% மதிப்பெண்ணும், சிங்கள மாணவர்கள் 25% மதிப்பெண்ணும் பெறவேண்டும் என்பதே அந்தச் சட்டம்!

தமிழ்:- இதென்ன சட்டம்?

அறிவு:- திராவிட மாடல் போன்று சிங்கள மாடலாக இருக்கும்!

பொற்கொடி:- கல்வி இப்படியென்றால், காவல், இராணுவம், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டது.

மாறன்:- நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

பொற்கொடி:- தமிழ்த்தேசியக் கட்சிகள் இக்கொடுமைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களைத் தொடங்கினர்.

மாறன்:- தந்தை செல்வா அவர்கள் தலைமையில் அறப்போராட்டங்களும், பேச்சுவார்த்தைகளும் நடந்தன.

பொற்கொடி:- ஆரிய வழித்தோன்றலான புத்த பிக்குகளின் கைப்பாவைகளாக சிங்கள ஆட்சியாளர்கள் மாறிப்போனார்கள்.

மாறன்:- அவர்களின் தூண்டுதலால் சிங்களர்கள், இன்றைய RSS சங்கிகளைப் போன்ற அவதாரம் எடுத்தனர்.

பொற்கொடி:- சிங்களக் காடையர்கள் தமிழர்களைத் தாக்கவும், கொலை செய்யவும், பெண்களை வன்புணர்வு செய்யவும் தலைப்பட்டனர்.

மாறன்:- இரு தரப்பினருக்கும் மோதல் தொடர்ந்தது. ஆனால், அரச அதிகாரமும், காவல் துறையும் சிங்களரின் பக்கமே நின்றதால் தமிழருக்கான நீதி கிடைக்கவில்லை.

பொற்கொடி:- ஐம்பதுகளின் தொடக்கத்தில் இவற்றால் தூண்டப்பட்ட தமிழர்களுக்கு எதிரான நிலை மற்றும் வன்முறை இன்றளவும் தொடர்கிறது.

அறிவு:- அன்பையும் சமாதானத்தையும் பின்பற்ற வேண்டிய புத்தபிக்குகளா இத்தகைய கொடூரங்களைத் தூண்டிவிட்டவர்கள்?

மாறன்:- புத்தன் போதித்ததற்கும் இவர்களின் செயல்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அர்த்தமும் இல்லை.

தமிழ்:- புத்தம் சரணம் கச்சாமி!

பிக்குகள் ஆயினர் கள்ளச்சாமி!

அறிவு:- உண்மைதான் தம்பி! கவிதையாகவே சொல்லிவிட்டாய்.

தமிழ்:- பின்னர் நடந்தது என்னப்பா?

மாறன்:- கொலை, கொள்ளை, பாலியல் கொடூரங்கள் எனத் தொடர்ந்தது.

பொற்கொடி:- உச்சமாக கறிக் கடைகளில் இங்கு தமிழச்சிகளின் மார்புக் கறி கிடைக்கும் என்று எழுதி, நமது பெண்களின் அங்கங்களைக் கடையில் தொங்கவிட்டனர்.

அறிவு:- ஐயையோ! இவ்வளவு கொடூரமாகவா இருப்பார்கள்?

மாறன்:- இதைவிடக் கொடூரம் சாலை போடப் பயன்படும் கொதிக்கும் தாரில் இளம் சிறார்களை முக்கி கொலை செய்தனர்.

தமிழ்:- அப்பா எனக்கு பயமாக இருக்கிறதப்பா!

பொற்கொடி:- பயப்படாதே தமிழ்!

மாறன்:- இந்தக் கோரங்களைச் சகித்துக் கொண்டு வாழ்வதா எனத் தமிழ் இளைஞர்கள் ஆங்காங்கே எதிர்த்துப் போராடி வந்தார்கள்.

பொற்கொடி:- எதிர்த்த தமிழர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள் அல்லது அடித்தும் சுட்டும் கொல்லப்பட்டார்கள்.

மாறன்:- அடக்குமுறையும் வன்முறைகளும் தொடர்ந்து பெருகியதால் மானத்துடன், உரிமையுடன் வாழவே வழியில்லை என்ற நிலை எழுபதுகளின் தொடக்கத்தில் ஏற்பட்டது.

பொற்கொடி:- அறப்போராட்டம், சமாதானப் பேச்சுவார்த்தை எல்லாவற்றையும் சிங்கள பேரினவாதம் காலில் போட்டு மிதித்தது.

அறிவு:- அரசு, நிர்வாகம், காவல், இராணுவம் இனவெறி காடையர்களுக்கு மத்தியில் இவ்வளவு அடக்குமுறைகளை தாண்டி எளிய மக்களால் என்ன தான் செய்ய முடியும் என்று அடங்கி வாழ்ந்தார்கள்.

தமிழ்:- தமிழர்கள் ஏன், திருப்பி அடிக்கவில்லை?

பொற்கொடி:- இந்தக் கொடுமைகளை எல்லாம் கண்ணுற்ற ஒரு பதின்ம வயது சிறுவன் “நாம ஏன் திருப்பி அடிக்கல்லை?” என்று தன் தந்தையிடம் கேட்டான்.

தமிழ், அறிவு:- ஆமாமா! அது நம் தேசியத் தலைவர் ஆயிற்றே!!

மாறன்:- ஆம். நம் தேசியத் தலைவர் தான் அது.

பொற்கொடி:- தமது பதினான்காம் வயதிலேயே திருப்பியடிக்கத் தொடங்கினார்.

தமிழ்:- தனியாகவா?

மாறன்:- இல்லை. திருப்பி அடிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டு இயங்கிய சிலருடன் இணைந்து கொண்டார்.

பொற்கொடி:- ஒரு துருப்பிடித்த துப்பாக்கியால் மேயர் துரையப்பாவைச் சுட்டதில் தொடங்கி சிங்கள இராணுவத்தின் மீது படிப்படியாக எதிர்த்தாக்குதல்களைத் தொடுத்தனர்.

மாறன்:- வீட்டைவிட்டு வெளியேறி 1972ல் புதிய தமிழ்ப்புலிகள் என்ற இயக்கப் பெயருடன் காடுகளில் மறைந்து வாழ்ந்தனர்.

பொற்கொடி:- கிடைத்ததை உண்டு மரங்களையும் புதர்களையும் தங்கள் இருப்பிடமாகக் கொண்டனர்.

மாறன்:- சிறு பலத்தைக் கொண்டு பெரும் படையைத் தாக்கும் கொரில்லா போர்முறையில் பயிற்சியெடுத்து அதில் தங்கள் திறனை வளர்த்துக் கொண்டனர்.

பொற்கொடி:- 1976ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டு, தமிழர்களைப் பாதுகாப்பதோடு தமிழீழ சோசலிசக் குடியரசு என தமிழர்களுக்கான ஒரு நாட்டை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினர்.

அறிவு:- அடிமைப்பட்ட இனத்தின் விடுதலையே இனி தனி நாடுதான் என்று உறுதியாக இருந்தாரல்லவா!

தமிழ்:- அந்த நாடுதான் தமிழீழமா?

மாறன்:- ஆம். ஓயாத போராட்டங்கள், பொருளாதாரத் தடை, உணவு எரிபொருள் தட்டுப்பாடு என பெரும் இக்கட்டான சூழலிலும் தமிழீழத்தை உலகின் மிகச்சிறந்த நாடாக கட்டமைக்க உறுதிபூண்டார்.

பொற்கொடி:- மது, போதை, கொலை, கொள்ளையற்ற, பெண்களைப் போற்றும் அறம் சார்ந்த அறிவார்ந்த ஒரு சமூகமாக ஈழத்தைக் கட்டமைத்தார்.

மாறன்:- ஈழத்தில் தமிழர்கள் மிகப்பெரிய எழுச்சியோடு ஆற்றலை வளர்த்துக் கொண்டு மானத்துடனும் வீரத்துடனும் வல்லாதிக்க நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.

பொற்கொடி:- அறிவார்ந்த சமூகமாக வீரம் செறிந்த பண்பாட்டு மிக்க படைப்பாற்றல் மிக்கவர்களாக உயர்ந்தார்கள்.

மாறன்:- உயிரைத் துச்சமென மதித்து மானமே பெரிதென ஈழத்தில் வளர்ந்தார்கள்.

பொற்கொடி:- தமிழர்கள் ஈழமண் மீது பற்று கொண்டு தாய் நிலம் தாய் மொழி மீது பற்று கொண்ட ஒரு சமுதாயமாக உருப்பெற்றனர்.

தமிழ்:- சிறப்பு! சிறப்பு!!

அறிவு:- ஈழத்தில் இவ்வாறு சிறப்பான எழுச்சி கொண்ட தமிழினம் இங்கு தமிழகத்தில் எப்படி வளர்த்தெடுக்கப் பட்டார்கள்?

பொற்கொடி:- 1967 மார்ச் 3ல் திமுக தமிழகத்தில் பதவி ஏற்றது. அதுவரை முதல்வராக இருந்த பக்தவச்சலம், தமிழகத்தில் விஷக்கிருமி பரவி விட்டது. தமிழக மக்களைக் கடவுள் காப்பாற்றட்டும். நான் சங்கீதம் கேட்கப் போகிறேன் என்றார். அன்று முதல் விஷக்கிருமிகள் பரவி இன்று விச அரக்கனாக உருவெடுத்து நிற்கிறது.

அறிவு:- திமுக விசக்கிருமி என்று அன்றே கணித்திருக்கிறார்கள் ஐயா.காமராசர் உள்ளிட்ட தலைவர்கள்.

தமிழ்:- ஆனால், தமிழக மக்கள் திராவிடத்தின் பசப்பு வாதங்களில் மயங்கிவிட்டார்கள். ம்ம்ம்!

மாறன்:- நானே தமிழர்களின் தலைவன் என்று தமிழைக் கொண்டு, தமிழர்களை ஏமாற்றி தமிழினம் அழியக் காரணமாக இருந்தவர் கருணாநிதி.

பொற்கொடி:- தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல், வரலாறு, கோவில்கள், வளம், நிலம், ஆறுகள், குளங்கள், மலைகள் என அனைத்தையும் அழித்தது திமுக.

அறிவு:- இன்றளவும் அழித்துக் கொண்டிருக்கிறதே?

மாறன்:- இங்கோ தமிழகத்தில் மக்களை ஊழல் லஞ்சம் பெண்ணிய இழிவு, தீண்டாமை, கொலை, கொள்ளை, மது, போதை, திரை போதையில் மூழ்கடித்தது திமுக அதிமுக போன்ற திராவிட அரசுகள்.

பொற்கொடி:- வளக்கொள்ளை ஏரி குளங்கள் கொள்ளை மணல் கொள்ளை என குற்றச் சமூகமாக தமிழர்களை மாற்றி அமைத்தது திராவிட திமுக.

அறிவு:- அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஈழத்தில் ஒரு நாட்டைக் கட்டமைத்து அறிவார்ந்த, அறம் சார்ந்த சமூகமாக உருப்பெற்றனர்.

தமிழ்:- தமிழ்நாடு ஏன் அப்படி இல்லை?

பொற்கொடி:- பல்லாயிரம் ஆண்டுகளாக அறிவிலும், கல்வியிலும், இலக்கிய, இலக்கணத்திலும், கலைகளிலும், போர்களிலும், வேளாண்மையிலும், நீர் மேலாண்மையிலும் சிறந்து விளங்கியவர்கள், திரைகடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள்.

மாறன்:- இன்று இலவசங்களுக்குக் கையேந்துபவர்களாகவும், நூறு இருநூறுக்கும், மதுவுக்கும் தனது உரிமைகளை விற்பவர்களாகவும், மலை அழிந்தால் நமக்கென்ன, ஆறு அழிந்தால் நமக்கென்ன, விளைநிலங்கள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன, பண்பாட்டு விழுமியங்கள், கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் அழிந்தால் நமக்கென்ன என்று தன்னலவாதிகளாகவும், ஆழ்ந்த புரிதலற்றவர்களாகவும் மாற்றப்பட்டனர்.

பொற்கொடி:- தாய்மொழிப் பற்றற்ற, இனப்பற்றற்ற, தாய் மண் பற்றற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

தமிழ்:- இதுவும் திராவிட மாடல் தானா?

மாறன்:- ஆம். கடந்த அரை நூற்றாண்டுகளாக திராவிட மாயையால் தமிழர்கள் இந்த இழிநிலையை எட்டி இருக்கிறார்கள்.

பொற்கொடி:- தமிழகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உதவி இருந்தால் தமிழீழம் என்றோ அமைந்திருக்கும். ம்ம்ம்!

அறிவு:- தமிழீழ தேசத்திற்கு தமிழர்கள் ஏன் உதவவில்லை அம்மா?

பொற்கொடி:- ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களும் ஆரியர்களுக்குமான பகை தொடர்ந்து வந்திருக்கிறது.

மாறன்:- மொழி, பண்பாடு, இலக்கணம், இலக்கியம், வரலாறு, கல்வி, கலை, நிலம், வளம் என சிறந்து விளங்கிய தமிழினத்தை ஆரியம் எப்போதும் நேர் கொண்டதில்லை.

பொற்கொடி:- அவர்கள் கட்டமைத்த இதிகாசங்களில் கூட சூழ்ச்சிகளாலும், மறைந்திருந்துமே தமிழர்களை எதிர்கொண்டு அழித்திருக்கிறார்கள்.

மாறன்:- பிற்காலச் சோழர்களுக்கு பின்னான விசயநகர படையெடுப்பால் நாயக்கர்கள் தங்களின் ஆதிக்கத்தில் ஆரியர்களுடன் இணைந்துக் கொண்டு தமிழினத்திற்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறார்கள்.

பொற்கொடி:- ஆங்கிலேயர் நுழைவிற்குப் பின் தமிழர்களின் மொழி, அறிவியல், வீரம், கலைகள், இலக்கணம், இலக்கியங்கள் என மீண்டும் வெளிப்படத் தொடங்கின.

மாறன்:- தனித்தமிழ் இயக்கம், இந்தி ஆதிக்க எதிர்ப்பு, இந்திய விடுதலை என்ற பெயரில் தமிழின விடுதலை என தமிழினம் எழுந்து வந்த வேளை!

பொற்கொடி:- இந்திய ஆரியமும், திராவிடமும் எதிர்ப்பையும் இணக்கத்தையும் காட்டித் தமிழர்களை வஞ்சித்தன.

பொற்கொடி:- ஈழத்திலும் இந்திய ஆரியமும், சிங்கள ஆரியமும், திராவிடமும் கைகோர்த்து தமிழின எழுச்சியை அடக்கி ஒடுக்கின.

மாறன்:- தன்னை மீறி ஒருவன் தமிழினத்திற்குத் தலைவன் ஆவதா என்ற துரோக மனப்பான்மையால் ஒரு இனத்தை அழிக்கத் துணை நின்றது திமுகவும் கருணாநிதியும்.

பொற்கொடி:- தலைவரின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் கேட்டறிந்து ஈழப் போராட்டத்திற்கு ஓரளவு ஆதரவை அளித்தார் எம்.சி.ஆர். அதனால் தலைவர் அவருடன் நெருக்கமாக இருந்தார்.

மாறன்:- இதனால் ஆத்திரமுற்ற கருணாநிதி இறுதிவரை ஈழத்திற்கும் தலைவருக்கும் எதிராகவே நின்றார். எதிரியாகவே செயல்பட்டார்.

பொற்கொடி:- இந்நிகழ்வுக்கு முன்பாகவுமே ஈழத்திற்கு எதிராக செயல்பட்டவர் தான் கருணாநிதி.

அறிவு:- தமிழினத் தலைவர் என்று தன்னை கூறிக்கொண்டாலும், உள்ளுக்குள் தமிழினத்திற்கு எதிரியாகவே வாழ்ந்திருக்கிறார் கருணாநிதி.

தமிழ்:- திமுக, கருணாநிதியின் தமிழீழ துரோகங்கள் எப்போது தொடங்கியது?

மாறன்:- விடுதலைப்போராளி திரு. குட்டிமணி அவர்களை தமிழக காவல்துறை கைது செய்து காவலில் வைத்திருந்த போது, அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டு சிங்கள காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னைக்கு வந்து வற்புறுத்தினர். குட்டி மணியை சிங்கள காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார்.

பொற்கொடி:- சிங்கள அரசு குட்டிமணி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் குட்டிமணியை காப்பாற்ற இது குறித்த விவாதம் 1982ல் சட்டசபையில் வந்த போது, கருணாநிதியின் குறிப்புகளை எடுத்து சட்டசபையில் பகிர்ந்தார் எம்.ஜி.ஆர்.

மாறன்:- சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்ட போராளி யோக சந்திரன் என்ற குட்டிமணி 1982 ஆம் ஆண்டு சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 1983 ஆம் ஆண்டு  ஜூலை கலவரத்தின் பொழுது வெலிக்கடை சிறையில் சிங்கள் அரசின் தூண்டுதலின் பேரில் சிறையில் இருந்த சிங்களக் காடையர்களால் வன்முறை தூண்டப்பட்டு குட்டிமணி மற்றும் உடனிருந்த ஜெகன் ஆகியோர் கண்கள் பிடுங்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இதிலிருந்து தொடங்குகிறது ஈழத்திற்கு திமுகவின், கருணாநிதியின் துரோக வரலாறு.

தமிழ்:- அடுத்து என்ன நடந்தது அப்பா?

மாறன்:- 1984 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த எம் ஜி ஆர் அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தில் ஈழ விடுதலைப் போராளிகள் அமைப்புகள் அனைத்தும் இக்கருத்தினை செயல்படுத்துவதற்காக போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பை விடுத்தார்.

பொற்கொடி:- குறிப்பிட்ட நாளில் தன்னை சந்திக்குமாறு அனைத்து போராளி இயக்க தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பினார்.

அறிவு:- சிறப்பான முயற்சி!

மாறன்:- ஆனால், எம்ஜிஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி செயல்பட்டார் .

பொற்கொடி:- எம்ஜிஆரின் அழைப்பு விடுக்கப்பட்ட மறுநாளே கருணாநிதி மற்றொரு அழைப்பு அனைத்து போராளி குழுக்களுக்கும் அனுப்பினார். எம்ஜிஆர் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக சில இயக்கங்கள் கருணாநிதியை சந்தித்தனர்.

மாறன்:- விடுதலைப்புலிகள் கருணாநிதியுடனான இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

பொற்கொடி:- ஈழ அமைப்புகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை முன்னதாக பத்திரிக்கையில் வெளியிட்டு தனக்கு விளம்பரம் தேடிக் கொண்டார் கருணாநிதி. தான்தான் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர் போல ஒரு நாடகத்தை நடத்தினார்.

தமிழ்:- துரோகமே உருவாக்கம் கொண்டவர்!

மாறன்:- இதனால் கோபமடைந்த எம் ஜி ஆர் அந்த அமைப்புகளை தவிர மற்றவரை சந்தித்தார். அதில் விடுதலைப்புலிகள் கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் சார்பில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், இளங்குமரன், கர்ணன், சங்கர் நித்தியானந்தன் அவர்கள் எம்ஜிஆரைச் சந்தித்தனர்.

பொற்கொடி:- எம்ஜிஆரும் விடுதலைப் புலிகளின் கோட்பாடு செயற்பாடு ஆகியவற்றைக் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கேள்விகள் கேட்டு கலந்துரையாடினார். இறுதியில் எம்.ஜி.ஆருக்குப் புலிகளின் மீது இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். இதுவும் கருணாநிதிக்கு புலிகள் மீது வெறுப்பை தூண்டியது.

மாறன்:- 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்திய பிரதமர் ராசிவ் இலங்கை குடியரசுத் தலைவர் செயவர்தனா ஆகியோர் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட உடன்பாடு அடிப்படையிலேயே தவறானதாகும்.

பொற்கொடி:- ஈழப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் செய்து கொள்ள வேண்டிய உடன்பாட்டில் இந்தியா நடுவராக விளங்கி இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவே ஒரு தரப்பாக மாறி இலங்கை அரசுடன் உடன்பாடு செய்தது என்பது ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

மாறன்:- இந்திய இலங்கை உடன்பாட்டினை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமிர்தலிங்கம் வரவேற்று அறிக்கை வெளியிட்டார்.

அதன் பின்னணி இதுதான். “இந்த உடன்பாட்டை ஆதரித்து அறிக்கை வெளியிடும்படி இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தன்னை வற்புறுத்தினர். அப்போது இந்த அறிக்கையை நான் வெளியிட்டால் திமுக தலைவர் கருணாநிதி தன்னை கண்டித்தால் என்ன செய்வது என்று மறுத்த போது, அந்த அதிகாரிகள் திமுக தலைவர் ஒருபோதும் கண்டித்து அறிக்கை கொடுக்க மாட்டார் என உறுதி கூறினர்” என்றார் அமிர்தலிங்கம்.

அதிலும் அவர்கள் கூறியதில் அமிர்தலிங்கத்திற்கு நம்பிக்கை இல்லை. எனவே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது கருணாநிதி பின்வருமாறு கூறினார். “தலைவர் செல்வா காலத்தில் இருந்து நீங்களும் உங்களைப் போன்ற பல தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற தியாகம் செய்திருக்கிறீர்கள். ஆனால், நேற்று பிறந்த பிரபாகரன் உங்களை எல்லாம் புறந்தள்ளி தன்னை முன்னிறுத்தப் பார்க்கிறான். இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.இந்திய இராணுவம் இலங்கை சென்றுவிட்டது. இன்னும் ஒரு வார காலத்தில் பிரபாகரனுக்கு சரியான பாடத்தை புகட்டும். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். இந்த உடன்பாட்டை வரவேற்று அறிக்கை கொடுங்கள்” என்று கருணாநிதி கூறினார். அதன் பிறகு தான் அமிர்தலிங்கம் அந்த அறிக்கையை கொடுத்தார்.

பொற்கொடி:- ராசீவ் சேயவர்த்தனா உடன்பாட்டை திமுக தலைவர் கருணாநிதியோ, திமுக கட்சியின் செயற்குழுவோ பொதுக்குழுவோ இதுவரை கண்டிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மாறன்:- இந்திய ராணுவம் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர்களைத் தேடித் தேடி அழிப்பு வேட்டை நடத்திய காலத்தில் அதிலிருந்து தப்பி பாலசிங்கமும் அவருடைய துணைவியாரும் பெங்களூரில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து பாலசிங்கம் அவர்களுக்கு அவசர செய்தி கிடைத்தது. தமிழ்நாட்டில் இருந்த புலிகள் மூலமாக இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சேலத்தில் நள்ளிரவில் ஒரு விடுதியில் யாரும் அறியாத வண்ணம் மறைமுகமாக நடந்த சந்திப்பில் அவருடன் கருணாநிதியின் மருமகன் முரசொலியும் உடன் இருந்தார்.

பொற்கொடி:- அச்சந்திப்பில், தமிழீழத்தில் நிலவும் போர் சூழ்நிலை குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைமை எந்த நேரத்திலும் அழிக்கப்படும் ஆபத்து இருப்பது குறித்தும் தனக்கு மிகுந்த கவலையும் வேதனையும் ஏற்பட்டு இருப்பதாக கருணாநிதி கூறியதுடன், வலிமை வாய்ந்த இந்திய ராணுவத்துடன் மோதி அழிந்து போவதை விட ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைவது நல்லது என்றும், தனித்தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு மாகாண அரசு திட்டத்தை ஏற்றுக் கொள்வதே சிறந்ததாகும் என்று அறிவுரை கூறினார்.

மாறன்:- அத்துடன் அவர் நிற்கவில்லை, திமுகவைத் தடை செய்ய இந்திய அரசு சட்டம் கொண்டு வந்த போது இலட்சியமா கட்சியா என்ற கேள்வி எழுந்தது. அப்போது கட்சியை காப்பாற்றுவது என முடிவு செய்து திராவிட தாய்நாடு கோரிக்கையை நாங்கள் கைவிட்டதால் தான் இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்கும்படி கூறினார்.

பொற்கொடி:- இந்த சந்திப்பின் உள்நோக்கம் என்ன என்பது பாலசிங்கத்திற்கும் அவருடன் சென்றிருந்த புலிகளுக்கும் புரிந்தது. பாலசிங்கத்துடன் வந்திருந்த மூத்த புலித்தோழர் ஒருவர் இலட்சியத்திற்காகத்தான் இயக்கம் கண்டோம். இலட்சியத்தை கைவிட்டால் இயக்கத்திற்காக இத்தனை பேர் உயிர்த் தியாகம் செய்தது எதற்காக என்று கேட்டார். அவர் இவ்வாறு கூறியதும் கருணாநிதி கடும் கோபமடைந்தார். அப்போது பாலசிங்கம் குறுக்கிட்டு விடுதலைப்புலிகள் வீரம் தெரிந்த ஒன்றுதான். அவர்களிடம் சரணாகதி என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரபாகரனும் அவரது தோழர்களும் உன்னத இலட்சியத்திற்காக உயிரைத் துறக்கவும் தயாராக இருப்பார்களே அன்றி எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும் சரணடைந்து இழுக்கைத் தேடிக் கொள்ள மாட்டார்கள் என கூறினார்.

மாறன்:- ஆனால், கருணாநிதி அதை ஏற்கவில்லை. இருந்தாலும் இந்த நிலைப்பாட்டை பிரதமர் ராசிவ் காந்திக்கு தெரிவிப்பதாக கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார். ராசீவ் காந்தியின் சார்பில் அவர்களிடம் பேசி அவர்களை சரணடைய வைப்பது தான் முதல்வர் கருணாநிதி உள்நோக்கமாக இருந்தது. புலிகள் தரப்பில் உள்ள நியாயத்தையோ அல்லது இந்திய ராணுவம் தமிழ் மக்களை கொன்று குவிப்பது குறித்தோ பிரதமரிடம் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவோ அவர் ஒருபோதும் தயாராக இல்லை என்பதை இந்த சந்திப்பு அம்பலப்படுத்தி இருந்தது.

பொற்கொடி:- 1989 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமராக இருந்த ராசீவ் காந்தி பதவி விலகி வி.பி. சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

மாறன்:- இலங்கையில் இந்திய ராணுவம் ரீதியாக தலையிட்டதே தவறு என்று அவர் கண்டித்தார். இந்திய அமைதிப் படையை உடனடியாக திரும்ப பெற ஆணையைப் பிறப்பித்தார். 1990 மார்ச் மாதத்திற்கு முன்னால் இந்தியப் படைகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார்.

பொற்கொடி:- இலங்கை பிரச்சனை தொடர்பாக சகல தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமுகமான முடிவைக் காண உதவுமாறு முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் வி.பி. சிங் வேண்டிக் கொண்டதோடு, அந்த முடிவை இந்திய அரசும் ஏற்கும் என்று அறிவித்தார்.

அறிவு:- அப்படியா! தமிழினத்தலைவர் கருணாநிதி இந்த நல்ல வாய்ப்பை எப்படி கையாண்டார்?

மாறன்:- ஈழப் பிரச்சினையில் தீர்வு காண இந்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் விடப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி அவர்கள் கொழும்புவில் இருந்த பாலசிங்கத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இலங்கை அதிபர் பிரேமதேசவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த பாலசிங்கம் முதலமைச்சரின் அழைப்பைத் தட்ட முடியாமல் பிரபாகரன் அனுமதியுடன் சென்னைக்கு வந்தார். அவருடன் யோகியும் வந்தார். சென்னையில் மிகுந்த பாதுகாப்புடன் அவர்கள் துறைமுக விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முதலமைச்சரும் அவருடைய மருமகன் முரசொலி மாறன் மட்டுமே சந்தித்து பேசினார்கள். தமிழகத் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அப்போது வடக்கு கிழக்கு மாகாண சபையில் சரிபாதி இடங்களும், நிர்வாகத்தில் சரிபாதி பங்கும் அளிக்க ஈ பி ஆர் எல் இயக்கம் தயாராக இருக்கிறது என்றும், அதை ஏற்று இரு தரப்பினரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று கருணாநிதி கேட்டார்.

இந்திய அமைதிப்படையுடன் கூட்டு சேர்ந்து ஈபிஆர்எல் இயக்க உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய குற்றங்கள் குறித்து பாலசிங்கம் விரிவாக எடுத்துக் கூறினார். வரதராஜ பெருமாள் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களின் விளைவாக ஈழத் தமிழர்கள் அவர்களை ஒதுக்குவதாகவும் பாலசிங்கம் எடுத்துரைத்தார்.

பொற்கொடி:- முறை தவறிய தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வந்த ஈ பி ஆர் எல் இயக்கம் இந்திய அமைதிப்படையின் கைப்பாவையாக இயங்கியதையும் இந்திய இராணுவத்துடன் இணைந்து அட்டூழியங்கள் புரிந்ததின் விளைவாகவே புலிகள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றும் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.

மாறன்:- மக்கள் விருப்பத்தை விட புதிய தேர்தல் நடத்தி தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வர புலிகள் விரும்புவதாகவும் பாலசிங்கம் கூறினார். தமிழர் தாயகத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்றால் விடுதலைப்புலிகள் பெருவெற்றி பெறுவது திண்ணம் என்பதையும் அவர் எடுத்து கூறினார். கருணாநிதியின் சூழ்ச்சித் திட்டத்திற்கும் இணங்க பாலசிங்கம் மறுத்துவிட்டார் .

பொற்கொடி:- உண்மையில் பிரதமர் வி பி சிங் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண அவர் முயற்சி செய்யவில்லை. புலிகள் மீது அவருக்கு இருந்த வெறுப்பின் காரணமாகவே துரோகக் கும்பலுடன் இணைந்து அதிகாரத்தைப் பகிர்ந்து ஏற்க வேண்டும் என அவர் வற்புறுத்தினார். புலிகள் ஏற்க மறுத்ததையடுத்து நிறைவாக அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

மாறன்:- இலங்கையில் இருந்து இந்தியப் படை வெளியேறிய போது தலைவர் பிரபாகரனின் புகழ் உயர்ந்தது. ஒரு வல்லரசின் படையை இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக எதிர்த்துப் போராடி இறுதியில் அந்தப் படையை வெற்றிகரமாகத் தனது மண்ணில் இருந்து வெளியேறச் செய்த பிரபாகரனின் அளப்பரிய சாதனை கண்டு உலகமே வியந்தது. காலமெல்லாம் பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டி வந்த கருணாநிதி 1990 ஆம் ஆண்டில் இறுதியில் பிரபாகரன் சாதனையைப் பாராட்டிப் பேசினார். பிரபாகரன் 1971 தேர்தலில் நான் சைதைப் பகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது எனக்காக இரவு பகலாக வேலை செய்தது தம்பி தானே உரிமை கொண்டாடினார். அவரது இந்த பேச்சு முரசொலியிலும் வெளிவந்திருக்கிறது. ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழகத் தேர்தலில் இருந்தும் அரசியலில் இருந்தும் எப்போதும் நாங்கள் விலகி இருக்கிறோம்; ஒருபோதும் அதில் நாங்கள் தலையிட்டதில்லை என்று கூறினார். கருணாநிதியின் இயல்புகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். காலமெல்லாம் தன்னால் பழிக்கப்பட்ட ஒருவர் உயர்நிலைக்கு வந்துவிட்டால் உடனடியாக பல்டி அடித்து சொந்த உரிமையை கொண்டாடுவது அவருக்கு கைவந்த கலை ஆகும்.

பொற்கொடி:- தமிழ்நாட்டில் ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பிலும், அதில் அங்கம் வகித்த அமைப்புகளின் சார்பிலும் ஈழத் தமிழர்களுக்கு மருந்துகள் திரட்டப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்களும் மருந்துக்கடை உரிமையாளர்களும் தமிழ்ப் பற்றாளர்களும் ஏராளமான மருந்துகளை வாரி வாரி வழங்கினார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மருந்துகள் தமிழகத்தில் இருந்து பத்திரமாக படகுகள் மூலம் தமிழீழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மாறன்:- அதே வேளையில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை விடுதலைப் புலிகளின் தூதர்கள் சந்தித்து காயமடைந்த போராளிகள் தமிழகத்தில் சிகிச்சை பெறவும், தேவையான மருந்துகளை வாங்கிச் செல்லவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் வைத்தனர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதை நம்பி தமிழகம் வந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போராளிகளை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தவரும் கருணாநிதியே.

பொற்கொடி:- அதே போன்று ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு இன்னும் மருந்துகள் வாங்குவதற்காக புலிகள் கொண்டு வந்த பல லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தது கருணாநிதி அரசு.

மாறன்:- இது குறித்து தலைவர் புலி ஆதரவாளருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மருந்துகள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையிலான பணத்தை தமிழ்நாட்டு காவல்துறை கைப்பற்றியுள்ளது. எமக்கு இங்கிருக்கும் எவ்வளவோ பண கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழக முதல்வரான கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவது தான் வேதனை தருகிறது. ஆனாலும் உங்கள் உதவி எனக்கு ஒரு பெரும் நம்பிக்கையையும் ஆறுதலை தருகிறது. எங்களுக்கு இப்போது தேவையானது மருந்து பொருட்கள் தான். தொடர்ந்தும் இது போல் எமக்கு மருந்து பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள். அதுதான் இங்கே நமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்றும், மற்றொரு கடிதத்தில் நமது போராளிகள் பலர் அதுவும் படுகாயம் அடைந்து ஊனமடைந்தவர்கள் இன்னும் தமிழகச் சிறைகளுக்குள் அநியாயமாக அடைபட்டுக் கிடப்பது எனக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது என்று எழுதியிருக்கிறார்.

பொற்கொடி:- கருணாநிதியை நம்பி அவரது ஒப்புதலின் பேரில் அனுப்பப்பட்ட அமைப்பு போராளிகள் தொடர்ந்து சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமான மற்ற செயல் என டெல்லியில் சார்ச் பெர்ணாண்டசு கூட்டிய ஒரு மாநாட்டில் போராளிகளை அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ததின் பொருட்டு அவர்களைத் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழினத் தலைவர் என தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி ஊனமடைந்த தமிழர்களிடம் இறுதிவரை இரக்கம் காட்டவே இல்லை.

மாறன்:- 1990 ஆம் ஆண்டு மே 8-ம் தேதி தேசவிரோத நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபடுவதாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டிய பொழுது, அவர் மத்திய மாநில அரசுகளிடையே பிளவு ஏற்படுத்த ரா உளவுத்துறை தொடர்ந்து செயல்படுகிறது. இலங்கையில் உள்ள பல்வேறு போராளிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதற்கு ரா உளவுத்துறையே காரணம் என்று பகிரங்கமாக சட்டமன்றத்திலே குற்றம் சாட்டியவர், சகோதரச் சண்டையே காரணம் என பிற்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது பொய்யான பழியைச் சுமத்த முயன்றார்.

பொற்கொடி:- இறுதிப்போர்ச் சூழலில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்களைச் சிங்கள ராணுவம் சுற்றிவளைத்து குண்டு மழை பொழிந்த போது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உடனடியாக போர் நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மாறன்:- இந்திய அரசையும் தன்னையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி 14-10-08 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். இக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு ஆவன செய்யாவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். ஓரிருவரைத் தவிர வேறு யாரும் தனக்கு ஆதரவாக இல்லை என்பதைக் கண்ட கருணாநிதி உடனடியாக பல்டி அடித்தார். அமைச்சர்கள் என்ன தமிழகத்தை சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பதவி விலக வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சிகளும் அதை வரவேற்றன. ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மக்கள் உள்ளங்களில் உற்சாகத்தை நம்பிக்கையை ஊட்டியது. ஆனால் 12 நாட்கள் கழிவதற்குள் கருணாநிதி தலைகீழான நிலை எடுத்தார் 26-10-08 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்சி சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார். கருணாநிதி என்ன பேசினார்கள் என்று வெளியிடாமல், போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என செய்தியாளர் கூட்டத்தில் கருணாநிதி அறிவித்தார்.

பொற்கொடி:- நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்சி ஏதாவது வாக்குறுதி கொடுத்திருந்தால் அதன் மீது முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் அனைத்து கட்சித் தலைவர்களுக்கு தான் உண்டு. தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் கருணாநிதிக்கு கிடையாது. அவர் அனைத்து கட்சி கூட்டத்தை மீண்டும் கூட்டி அதில் பிரணாப் முகர்சியுடன் பேசிய விவரங்களை தெரிவித்து அனைத்து கட்சிகளின் சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தனது கூட்டணி கட்சியான காங்கிரசை காப்பாற்றுவதற்காக கருணாநிதி அனைத்து கட்சிகள் கூடி நிறைவேற்றிய தீர்மானத்தை குப்பைக் கூடையில் வீசி எறிந்தார்.

மாறன்:- இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு சிங்கள அரசை வற்புறுத்தி இருந்தது என்பது உண்மையானால், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

பொற்கொடி:- இலங்கை அதிபர் ராசபக்சேயின் தம்பியும் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபய ராசபக்சே பகிரங்கமாக பின்வருமாறு கூறினார். இந்திய அரசு ஒரு போதும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவே இல்லையென்றார். அப்படியானால் கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக நாடகமாடினார் என்பது தானே உண்மை.

மாறன்:- சிங்கள அரசு போரை நிறுத்த முன் வந்தால் விடுதலைப் புலிகளும் போரினை நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் 7-11-2008 அன்று வேண்டுகோள் விடுத்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் வேண்டுகோளை ஏற்பதாக பகிரங்கமாக தெரிவித்தார். அதன் பின் தமிழக சட்டமன்றம் கூடி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றியது. சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தந்தன. அதன் பின் 25-11-2008 அன்று போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்பாக அனைத்து கட்சிகளின் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

பொற்கொடி:- இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 29-01-09 அன்று முத்துக்குமார் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். அதைத் தொடர்ந்து 23-03-09 வரை தமிழகத்தில் 14 பேர் தங்கள் உயிரை ஈகம் செய்தனர்.

மாறன்:- இலங்கையில் நிலைமை மேலும் மேலும் மோசமாயிற்றே தவிர சீர்படவில்லை. தமிழக மக்களின் போராட்டங்களும் நாளுக்கு நாள் வலுத்தன.

பொற்கொடி:- எனவே கருணாநிதி மற்றொரு நாடகத்தை நடத்தினார். 04-12-08 அன்று அவர் தலைமையில் அவருடைய தோழமைக் கட்சிகளை மட்டுமே கொண்ட குழு ஒன்று தில்லி சென்று பிரதமரை சந்தித்தது. 14-10-08 அன்று அவர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் பெரும்பாலோருக்கு தெரிவிக்காமலும் அழைக்காமலும், தமிழக மக்களை திசைத் திருப்ப, தனக்கு வேண்டிய சில கட்சித் தலைவர்கள் மட்டும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து தனக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டாரே, தவிர பேரினவாத போருக்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பும் அவர் தெரிவிக்கவில்லை.

மாறன்:- இதை மேலும் நிரூபிக்கும் வகையில் ஒரு உச்சகட்டமான நாடகத்தை அரங்கேற்றினார். 27-04-09 அன்று திடீரென காலை 6 மணிக்கு அண்ணா நினைவிடத்திற்கு சென்று சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக கருணாநிதி அறிவித்தார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம் எனக் கூறினார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலை தடுத்து நிறுத்தியவர், இப்போது திடீரென இந்திய அரசுக்கு எதிராக சாகும் வரை பட்டினி போராட்டம் நடத்த முன் வந்தார். அண்ணா நினைவிடத்திற்கு முன்னால் அவருடைய கட்சிக்காரர்கள் திரட்டப்பட்டு தங்கள் தலைவரின் உன்னதமான தியாகப் போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார்கள். ஆனால் பகல் பன்னிரண்டு மணி அளவில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தமக்கு செய்தி அனுப்பி உள்ளதாக கூறி உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆக காலை உணவிற்கும் பிறகு பட்டினிப் போராட்டத்தை தொடங்கி பிற்பகல் உணவுக்கு முன்பாக அதை முடித்துக் கொண்ட சாதனையாளர் கருணாநிதி மட்டுமே. ஆனால் அன்று மாலையிலே முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தன.

பொற்கொடி:- போருக்கு பின்னதான இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் சீர்குலைவு பற்றி ஆராய வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கு சுவிட்சர்லாந்து நாடு ஒரு விண்ணப்பத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்ணப்பத்தை மறுத்த இலங்கைத் தூதர் ஒரு தீர்மானத்தை அனுப்பினார். இலங்கையின் உள்நாட்டு நடவடிக்கைகளில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்பதுதான் அந்த தீர்மானம் ஆகும்.

27-05-2009 அன்று ஐநா மனித உரிமை அமைப்புக் கூட்டத்தில் இலங்கையின் தீர்மானத்திற்கு இந்தியாவும் சீனாவும் இணைந்து நின்று ஆதரவு திரட்டினர். அதன் விளைவாக தீர்மானத்திற்கு 29 நாடுகள் ஆதரவு கிடைத்தது. 12 நாடுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

மாறன்:- இலங்கையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட விவரமும் 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் எந்த அடிப்படையும் வசதி இல்லாத முகாம்களில் அடைக்கப்பட்டு போதுமான உணவோ, குடிநீரோ, சுகாதார வசதிகளோ இல்லாமல் சித்திரவதை செய்யப்படுவதும் அண்டை நாடான இந்தியாவுக்கு தெரியாமல் இல்லை. அப்படி இருந்தும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

பொற்கொடி:- இந்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்துத் திருத்த வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி சிங்கள அரசுக்கு ஆதரவான நடவடிக்கைகளையே மேற்கொண்டார்.

மாறன்:- முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டு இருக்கும் மக்கள் குறித்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவானதால் அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பினார். 10-10-09 அன்று இந்த குழு சென்று 14-10-09 அன்று திரும்பியது. சிங்கள அரசு எங்கெங்கு அழைத்துச் சென்று முகங்களை காட்டியதோ அங்கே மட்டும் இந்த குழுவினர் சென்றனர். போரில் படுகாயம் அடைந்தவர்கள் அங்கங்களை இழந்தவர்கள், இயலாத முதியவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு போதுமான மருத்துவ வசதிகளும் சத்துள்ள உணவுகளும் அளிக்கப்படுகிறதா என இந்த குழு ஆராயவில்லை. குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் வாழ்பவர்கள் ஒன்றாக வைக்கும்படி இந்த குழுவினர் வற்புறுத்தினார்களா என்ற கேள்விக்கும் விடை இல்லை.
போரின் கடைசி காலகட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரப்பட்டியலை கேட்டு பெற்றார்களா என்றால் இல்லை.

பொற்கொடி:- முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் இருக்கிறதா என்று கேட்டு அவ்வாறு இருந்தால் அதை பார்வையிட்டு தங்கள் விரும்பும் சிலரையாவது அழைத்து பேசினார்களா என்றால் அதுவும் இல்லை. ராஜபக்சே அளித்த விருந்தினை உண்டு விட்டு அவர் தந்த பரிசு பொருட்களையும் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள் தவிர இந்தியா உட்பட உலக நாடுகள் அளித்த உதவி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கண்காணிக்க சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்த தவறிட்டார்கள்.

மாறன்:- இந்தக் குழு திரும்பியதும் முதலமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். (1) 15-10-09 அன்றிலிருந்து 15 நாட்களில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்கள் இருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
(2) ஆதரவற்ற குழந்தைகள் உடல் ஊனமுற்றோர் ஆகியோர் தொண்டு நிறுவனங்களில் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள்.
(3) அனைத்து மக்களும் 3 மாதங்களுக்குள் முழுமையாக முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால் அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கடந்து விட்ட பின்னும் நிலைமை சீரடையவில்லை. ஆனால் அவர்களின் நிலங்களும் வீடுகளும் சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இளம்பெண்கள் பிரிக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். மேற்கண்ட உண்மைகளை மூடி மறைத்து, கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை சிங்கள அரசு சாதகமாக பயன்படுத்தியது. ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டி சிங்கள பிரதிநிதி வாதாடினார். இலங்கைக்கு அருகில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் முகாம்களில் நிலைமை ஓரளவு நன்றாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் அந்த மக்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் இலங்கையில் இருந்து பல ஆயிரம் கி.மீ. அப்பால் உள்ள நாடுகள் இந்த பிரச்சனையின் உண்மை புரியாமல் மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாடுவது தவறு என்று வாதாடினார். உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து தப்புவதற்கு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இலங்கைக்கு உதவியிருக்கிறதே தவிர அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவில்லை.

பொற்கொடி:- டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராசபக்சே கும்பலை போர்க் குற்றவாளிகள் என 16-01-10 அன்று தீர்ப்பளித்தது. சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இறுதிவரை திமுகவும் கருணாநிதியும் ராசபக்சே போர் குற்றவாளி என ஒரு முறையாவது குற்றம் சாட்ட முன்வரவில்லை.
முள்வேலி முகாம்களில் இருந்து எமது மக்களை விடுவிப்போம். போர்க் குற்றவாளிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் என்று அனைத்து தமிழர் சார்பிலும் முழங்க வேண்டியவர் அன்று வாய்மூடி மௌனம் சாதித்தார்.

மாறன்:- அமெரிக்காவைச் சேர்ந்த எலின் சாண்டர் “ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்காக நியாயம் கேட்கும் பொறுப்பு மற்ற எவரைக் காட்டிலும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அதிகம் என்றார். அவருக்கு இருந்த இந்த உணர்வு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இல்லாமல் போயிற்று.

பொற்கொடி:- சர்வதேச நீதிமன்றத்தில் ராசபக்சே கும்பலை போர்க் குற்றவாளிகளாக நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, உலகத்தமிழர் மாநாடு ஒன்றினை நடத்தி அதன் மூலம் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தி குரல் எழுப்ப வேண்டிய கருணாநிதி அதற்கு பதில் இந்தப் பிரச்சினையை திசை திருப்பும் வகையிலும், நீர்த்துப்போக வைக்கவும் கோவையில் உலக செம்மொழி மாநாட்டினை நடத்தினார். தன் குடும்பம் சூழ, ராசபக்சேவுக்கு கோபம் வரும் வகையில் யாரும் எதுவும் பேசிவிட வேண்டாம் என்று தமது அமைச்சர்களுக்கும், அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களுக்கும் அறிவுரை கூறவும் கருணாநிதி தயங்கவில்லை. அது மட்டுமல்ல நம்முடைய மௌனவலி யாருக்கு தெரியப்போகிறது என்று அங்கு நீலிக்கண்ணீர் வடித்தது தான் கயமைத்தனத்தின் உச்சம்.

மாறன்:- இத்துடன் அவர் நிற்கவில்லை; முறையாகத் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள புலிகள் தவறிவிட்டதாகவும் அதன் விளைவாகவே ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் பிரபாகரன் மீது பழியைச் சுமத்தினார்.

பொற்கொடி:- தேசியத் தலைவரின் தாய் 83 வயது நிறைந்த மூதாட்டியான பார்வதி அம்மா தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த போது நெஞ்சில் ஈரம் இல்லாமல் அவர் வந்த விமானத்திலேயே கீழே தரை இறங்க விடாமல் அவரைத் திருப்பி அனுப்பிய நிகழ்ச்சி ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகத்திற்கெல்லாம் சிகரம் வைத்தது போலானது.

மாறன்:- பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக் கூடாது எனவும், பாலச்சந்திரனை கூட விடக்கூடாது எனவும் அழுத்தம் திருத்தமாக கூறியவர் கருணாநிதி.

பொற்கொடி:- இறுதி மணித்துளிகளில் மக்களைச் சரணடைய சொன்ன கருணாநிதி மகள் கனிமொழி, சரணடைந்த மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ள மனமில்லாமலே ராசபக்சேவிடம் இன்முகத்துடன் பரிசு வாங்கியதை உலகத் தமிழினம் மறந்திருக்காது.

மாறன்:- உயிர் காக்கும் மருந்துகள் ரத்தம் போன்றவை போகக்கூடாது என தடை செய்தது திமுக அரசு. இனம் அழிந்து கொண்டிருந்தபோது பதவிக்காக டெல்லியில் பேரம் பேசியது திமுக.

பொற்கொடி:- ஈழப்போரில் தமிழகத் தமிழர்கள் ஒன்றிணைந்து எழுந்து விட முடியாதபடி அடக்குமுறை ஒடுக்குமுறை எனத் தொடர்ந்தது, மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டங்களை வன்முறையாக்கியது, தமிழ் ஆதரவாளர்களை சிறைப்படுத்தியது என திமுக செய்த இரண்டகம் கொஞ்சநஞ்சமல்ல.

மாறன்:- கருணாநிதியின் கோர முகத்தை உலகத்திற்கு இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது தமிழ்நாட்டு தமிழர்களின் தலைவன் என்ற போர்வையில் (போதையில்) ஈழத் தமிழர்களுக்கு சிறப்பு முகாம் என்னும் வதை முகாம்களை நிறுவியது தான். கருணாநிதி விதித்த விதி, இன்றளவும் அவர்களுக்கு விடியலில்லை என்பதுதான் பெரும் துயரம்.

பொற்கொடி:- 1983 ஜூலையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53 ஈழத் தமிழர்கள் வெலிக்கடை சிறையில் வைத்துச் சிங்களக் காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர், அதைத் தொடர்ந்து சிங்கள இனவெறி இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வெறியாட்டத்தில் பலநூறு ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் தமிழ்ப் பெண்கள் பலர் சிங்களக் காடையர்களின் வல்லுறவுக்குப் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமிழகத்தில் வந்து குவிந்தனர். ஆத்திரமும் கோபமும் அடைந்த தமிழக மக்கள், தன்னெழுச்சியாக, மிகப்பெரிய அளவில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் குதித்தார்கள். தமிழகம் முழுவதும் பல நகரங்கள், கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – என அனைத்துத் தரப்பும் தெருவில் இறங்கி, பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள், அன்றைய சிங்கள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பு எனப் போராட்டங்கள் நடத்தினர்.

மாறன்:- அதன் பிறகு தமிழர்களை ஒன்றிணைய விடாமல் புலிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம், பிரிவினைவாதம் என்று பீதி கிளப்பிப் பார்ப்பன ஆதிக்கச் செய்தி ஊடகங்கள் நடத்திய அவதூறுப் பிரச்சாரம், குறிப்பாக, ராசீவ் கொலைக்குப் பிறகு செயலலிதா அரசு கட்டவிழ்த்துவிட்ட ஈழ எதிர்ப்புப் பிரச்சாரம், ஈழத் தமிழர் வேட்டை – இவை காரணமாக முன்பு நிலவிய ஈழ ஆதரவு எழுச்சி மங்கி மறைந்து போனது. கடைசியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கே மக்கள் அஞ்சும் சூழல் நிலவியது.

பொற்கொடி:- புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒழித்துக் கட்டுவதென்பது ஜெயலலிதா அரசின் நடவடிக்கை என்பதைத் தாண்டி, அவரது தனிப்பட்ட அளவிலான வெறி பிடித்த நடவடிக்கையாகவே இருந்தது.

மான்ற :- மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில், ஈழ விடுதலைக்கு ஆதரவான எழுச்சி எதுவும் தமிழகத்தில் நடைபெறவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

அறிவு:- செயலலிதாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழர்கள் தானே? அவர்கள் ஏன் ஈழத் தமிழர்களுக்காக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை?

பொற்கொடி:- செயலலிதாவின் இறுதி காலகட்டத்தில் ஆட்சிக்கு வந்த பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகியோர் தமிழர்கள் என்றாலும் அவர்கள் திராவிடத்தில் வளர்ந்து ஆரிய அடிமைகளாகப் போனவர்கள். அவர்கள் குறைந்த அளவு நினைத்திருந்தால் கூட சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்காவது விடுதலை கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் தங்களின் இருப்பைத் தக்க வைக்க தங்களுக்குள் ஏற்பட்ட தாயாதிச் சண்டையில் ஈழத்தையும், ஈழத் தமிழர்களையும் மறந்தே போனார்கள். ஏன் தமிழக மக்களையே மறந்து போனார்கள்! அவர்களைப் பொறுத்தவரை “அடிமை வாழ்விலும் உரிமைச் சாவு மேலானது” எனும் ஒப்பற்ற கூற்று பயனற்ற ஒன்றானது.

மாறன்:- திராவிடம் என்பதே ஏமாற்று நாடகம். திமுக, அதிமுக என இவர்களை நம்பி இன்றும் சிலர் இருக்கிறார்கள்.

பொற்கொடி:- இன்று தமிழ்த்தேசியம் நாம் தமிழர் என்று வரும்போது இத்தனை கடுப்பும் கோபமும் வருகிறது என்றால், எந்த அளவிற்கு திராவிட கட்சிகள் உள்ளுக்குள் வன்மத்துடனும் எரிச்சலுடனும் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்:- ஆக, தமிழர்கள் திராவிட மாயையில் சிக்கி நம் இனத்தையே அழியக் கொடுத்திருக்கிறோம் என்பதே உண்மையிலும் உண்மை.

ஈழத்தில் சந்திப்போம்!

திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles