சனவரி 2024
பட்டினப்பாலை
(பாடல் 246-251 / 301)
கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில்
பரு நிலை நெடு தூண் ஒல்க தீண்டிப்
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்


பொருளுரை:
பகைவரின் நாட்டை கரிகாலன் வென்றவுடன் அங்கு மீட்கப்பட்ட மகளிர் கொண்டி மகளிர் ஆவர். மாலை வேளையில் மக்கள் நீர் உண்ணும் துறையில் கொண்டி மகளிர் மூழ்குவர். அவர்கள் அணையாத விளக்குகள் கொண்ட, மலர்கள் தூவிய, மெழுகிய தளம் கொண்ட, பலரும் வந்து தொழும், புதியவர்கள் வந்து தங்கும் மன்றத்தில் நடப்பட்டுள்ள கந்து எனும் கல்லை வணங்குவர். இத்தகைய மன்றம் களிற்று யானையுடன் பெண் யானை கூடித் தங்கும் இடமாகவும் திகழ்ந்தது.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.