பிப்ரவரி 2024
பட்டினப்பாலை
(பாடல் 252-255 / 301)
அரு விலை நறும் பூ தூஉய் தெருவின்
முதுவாய் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீ தொடை ஓர்க்கும்
பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து

பொருளுரை:
கரிகாலனது படையெடுப்பிற்கு முன்னதாக அவன் தாக்கவிருந்த நிலத்தில் நல்ல மணம் கொண்ட அரிய வகை மலர்கள் தூவப்பட்ட வீதியில், மக்கள் அச்சம் கொள்ளும் அறம் போற்றப்படும் மன்றம் வீற்றிருந்தது. அம்மன்றத்தில் பெரிய விழாக்கள் நடைபெறும். அறிவில் சிறந்த கூத்தர்கள் “முழவு” எனும் இசைக்கருவியுடன் முறுக்கிய நரம்புகள் கொண்ட யாழ் கருவியும் சேர்த்து அங்கே இசைப்பர்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.