மார்ச் 2024
பட்டினப்பாலை
( பாடல் 256-260/301)
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்புவும்
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
பிணம் தின் யாக்கை பேய் மகள் துவன்றவும்

பொருளுரை:
கரிகாலன் படையெடுப்பிற்கு முன்னதாக அவன் தாக்கவிருந்த மருத நிலத்தில், சிறு மலர்கள் கொண்ட நெருஞ்சிச் செடிகளும் அறுகம்புற்களும் படர்ந்து வளர்ந்திருந்தன. கொடிய வாயினையுடைய நரிகள் அச்சம் தோன்றும்படியாக ஊளையிட்டன. அழுவது போன்று ஒலி எழுப்பும் கூகையுடன் (ஆந்தை) கோட்டான்களும் ஒலி எழுப்பின. துன்பந்தரும் பேயினங்களும் சிகை விரித்தபடி உலவின.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.