செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா
நாகை மாவட்டத்தைச் சார்ந்த திரு.கவாஸ்கர் என்பவர் சவூதி அரேபியா நாட்டில் பல்வேறு பணியிட சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், அவரை மீட்டுத் தருமாறும் அவரது குடும்பத்தினர் நாம் தமிழர் கட்சியின் நாகை மண்டலச் செயலாளர் திரு. அப்பு அவர்கள் மூலம் நமக்குக் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று உரிய நடவடிக்கைகளை செந்தமிழர் பாசறை சவூதி பொறுப்பாளர்கள் மேற்கொண்டு, அவரைப் பத்திரமாக மீட்டு தாயகம் அனுப்பி வைத்தனர்.
இன்று காலை அவரை திருச்சி விமான நிலையத்தில் நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருச்சி இரஞ்சித், பிரபு தனபாலன், சோழசூரன், அப்பு, பழனிவேல் ஆகியோர் வரவேற்று குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார்கள்.












செந்தமிழர் பாசறை சவூதி அரேபியா தம்மாம் மண்டலம் – கோபர் பகுதி – வாராந்திர களப்பணி மற்றும் ஒன்றுகூடல்
செந்தமிழர் பாசறை – அமீரகம்

2025 மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் – துபாய் மண்டலம்


2025 மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் – அல்கூஸ், புதிய கிராண்ட் மற்றும் ஓயாசிஸ் மண்டலம் – நிகழ்வில் அனைவருக்கும் உப்பில்லாக் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

கடந்த பொங்கல் விழாவில் சிறப்பாகச் சிலம்பம் சுற்றிய சகோதரர் இர்பான் அவர்களுக்கு பாசறை சார்பாக பரிசுப் பொருள் வழங்கப்பட்டது.

2025 மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு குழந்தைகள் கலந்துரையாடும் நிகழ்வு குவியம் செயலிவழி சிறப்பாக நடைபெற்றது. இதில் இன எழுச்சி நாளின் முக்கியத்துவம், வரலாறு போன்றவற்றை கவிதைகள் மற்றும் உரைகள் வாயிலாக பதிவு செய்தார்கள்.



செந்தமிழ் பாசறை – அமீரகம் தமிழி வகுப்பு மாணவர் கோகுலேஸ் திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றார்.
செந்தமிழர் பாசறை – ஓமன்



செந்தமிழர் பாசறை ஓமன் முன்னெடுத்த 16 ஆம் ஆண்டு இன எழுச்சி நாள் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 16.05.2025 (வெள்ளிக்கிழமை) மசுகட் ஈகைச்சுடர் திலீபன் அரங்கத்தில் நடைபெற்றது. நம் தொப்புள்கொடி உறவுகளை நினைவுகூர்ந்திடும் இந்நிகழ்வில் 60 க்கும் அதிகமான தமிழ் உறவுகள் இன உணர்வோடு கலந்துக்கொண்டனர். தாயகத்திலிருந்து நமது மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி. மு. கார்த்திகா இணைய வழியில் பங்கேற்று எழுச்சி உரை வழங்கினார்.


செந்தமிழர் பாசறை ஓமனின் மூத்த நிர்வாகியும் மற்றும் ஆன்றோர் அவையை சேர்ந்த மதிப்பிற்குரிய ஐயா திரு. இரங்கமுத்து பாண்டியன் மற்றும் நமது பாசறையின் முன்னாள் செயலாளர் மற்றும் தற்போதைய பொருளாளர் திரு. திருமுருகன் அவர்களும் ஓமனிலிருந்து விடை பெறுவதால் அவர்களுக்கு நமது பாசறை சார்பாக நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்ததில் செந்தமிழர் பாசறை ஓமன் பெருமை கொள்கிறது.
ஓமன் நாட்டில் தவித்த தமிழருக்கு மருத்துவ உதவி
2025 கடந்த மே மாதம் துபாயிலிருந்து சென்னை பயணம் மேற்கொண்ட சூர்யா என்பவர் மருவத்துவ அவசரநிலை காரணமாக மசுகட் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு ஓமன் இராயல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நமது கட்சியின் இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளரின் உறவினரான சூர்யாவிற்கு உதவி செய்திடுமாறு தலைமை அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
காசநோய் பாதிப்பு என்பதனையும் பொருட்படுத்தாமல், மசுகட் மண்டல செயலாளர் திரு.அருள் பிரகாசு, செந்தமிழர் பாசறை – வளைகுடா செயலாளர் திரு.இரவிவர்மன் ஆகிய இருவரும், செய்தி கிடைத்தவுடன் உடனடியாக மருத்துவமனையில் சென்று சூர்யா அவர்களை சந்தித்து, விவரங்களைப் பெற்று, ஓமன் இராயல் மருத்துவமனையில் பணிபுரியும் நமது பொறுப்பாளர் திரு. செல்லத்துரை அவர்களிடம் பகிர்ந்தனர். அதன்பிறகு திரு.செல்லத்துரை அவர்கள் முழு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளையும் செய்து கவனித்துக் கொண்டார்கள். பயணத்திற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் சேவை மையப் பொறுப்பாளர் திரு. இலெனின் அவர்கள் வழங்கினார்.
தற்போது திரு. சூர்யா தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தக்க நேரத்தில் உதவிட உழைத்த அனைவருக்கும் செந்தமிழர் பாசறை ஓமன் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
செந்தமிழர் பாசறை – குவைத்


குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த 16 ஆம் ஆண்டு இன எழுச்சி நாள் (தமிழினப் படுகொலை) நினைவேந்தல் நிகழ்வு 16.05.2025 (வெள்ளிக்கிழமை) குவைத் பாலச்சந்திரன் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 க்கும் அதிகமான தமிழ் உறவுகள் இன உணர்வோடு கலந்துக்கொண்டனர்.



சித்திரை மாதம் 27 (10.05.2025 ) சனிக்கிழமை, மாத்தமிழ் மரபுப் பா பட்டறை அமைப்பு முன்னெடுத்த இளவேனில் இளநீர்த்தமிழ் விழா என்ற கோடை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஐயா மறைமலை அடிகளார் அவர்களின் மகன் வழி பேரனாகிய தமிழறிஞர் ஐயா மறை. தி. தாயுமானவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அவர் எழுதிய நூலை அறிமுகப்படுத்தி வெளியிட்டார்கள்.
நமது குவைத் செந்தமிழர் பாசறைக் குழு சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு வழங்கி வரவேற்பு செய்தார்கள். அதைத் தொடர்ந்து வளைகுடா செந்தமிழர் பாசறையின் இணைச் செயலாளர் திரு. அருண் தெலஸ்போர் அவர்கள் “தனித்தமிழ் இயக்கம் நடத்திய ஐயா மறைமலை அடிகளாரின் பெருமை பற்றியும் ஐயா அவர்களின் தமிழ்த் தொண்டுகளை பற்றியும் ஆன்மீகத் தொண்டுகளை பற்றியும் உரையாற்றினார். பின்னர் இவ்விழாவில் குவைத் செந்தமிழர் பாசறையின் பறையிசைக் குழுவினர்கள் கலந்துக்கொண்டு தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசையை சிறப்பாக இசைத்தனர். கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர்.
இறுதியாக இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் உயர்திரு தமிழறிஞர் ஐயா மறை. தி.தாயுமானவன் அவர்களின் சிறப்புரையில், தமிழ்நாட்டில் தற்பொழுது தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றுவது உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை, இயற்கை வளங்களின் பாதுகாவலன் மற்றும் தமிழக இளைஞர்களை சரியான முறையில் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அரசியல் ஆசான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே என்று புகழாரம் சூட்டினார். தமிழராய்ப் பிறந்தவர்கள் சீமான் அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் சிறப்புரை வழங்கினார்.

செந்தமிழர் பாசறை – கத்தார்



2025 மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழினவழிப்புப் போரின் கொடுமைகளை நினைவூட்டும் குறியீடாக அனைவருக்கும் தேங்காய்ச் சிரட்டையில் உப்பில்லாக் கஞ்சி வழங்கப்பட்டது.


மே18 இன எழுச்சி நாளை முன்னிட்டு செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக 23/05/2025 அன்று நடத்தப்பட்ட குருதிக்கொடை முகாமில் 101 உறவுகள் கடந்து கலந்து கொண்டு 75 அலகுகள் குருதி கொடையாக வழங்கினர்.
செந்தமிழர் பாசறை – பக்ரைன்


2025 மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு செந்தமிழர் பாசறை பக்ரைன் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.




குருதிக்கொடை முகாம்
