spot_img

சூலை 2025

செந்தமிழர் பாசறை – அமீரகம்

பணி நிறைவடைந்து தாயகம் செல்லவிருக்கும் ஐயா. திரு. இராமகிருஷ்ணன் அவர்களுக்கு அமீரக செந்தமிழர் பாசறை சார்பாக நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

வணக்கம்!
ஐயா இராமகிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பு மிகச்சிறப்பானது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதன்மைப் பொறுப்பாளர்கள் யாரும் செயல்பட இயலாத நிலையில் ஒற்றைப் புலியாக பாசறையின் செயல்பாடுகளை முன்னின்று செய்தவர்; அதற்குப் பிந்தைய பாசறையின் மீள்கட்டமைப்பில் தம் உழைப்பை முழுமையாக வழங்கி பாசறை மீட்டெடுப்பில் பங்கெடுத்தவர்; பாசறையின் தலைவர், ஆன்றோர் அவைத் தலைவர், பொருளாளர் என சிறப்பான பணிகளைத் திறம்படச் செய்தவர்; என் போன்ற இளையோர் செயல்பட திறம்பட வழிகாட்டி பாசறையை நடத்திச் சென்றவர்; சிறப்பான கட்டுரைகளை மின்னிதழுக்கு வழங்கியவர் என பாசறையின் அனைத்து நிலைச் செயல்பாடுகளிலும் ஐயாவின் பங்களிப்பு மிகச்சிறப்பானது. பாசறையோடு எப்போதும் தொடர்பில் இருக்கவும், தாய்நாட்டுக் களத்தில் சிறப்பாகச் செயல்படவும் எங்களின் வாழ்த்துகள்….

என்றும் அன்புடன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.

அபுதாபி மண்டலக் கலந்தாய்வு சாபியாவில் 15.6.2025 அன்று முன்னெடுக்கப்பட்டது.

அமீரக செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர் கலந்தாய்வு சூன் 8 2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அமீரக செந்தமிழர் பாசறை துபாய் மண்டலம் முன்னெடுத்த தேரா மற்றும் கோர்லாஞ்ச் கிளைகளுக்கான ஒருங்கிணைந்த சூன் மாதத்திற்கான இரண்டாவது  நேரடி கலந்தாய்வு 16.06.2025 அன்று நடைபெற்றது.

அமீரக செந்தமிழர் பாசறையில் புதிதாக இணைந்த சகோதரர்
திரு. சரவணன் அவர்களின் அழைப்பை ஏற்று 14.6.2025 அன்று அவர்களின் இல்லத்திற்குச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டோம். இச்சந்திப்பில் அவர்களுக்கு பாசறை செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது.

செந்தமிழர் பாசறை – குவைத்

நாம் தமிழர் கட்சி, மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சகோதரி அனீஸ் பாத்திமா அவர்கள், ஊடகவியலாளர் நூ.சே.அம்சத் அவர்களின் இணையேற்பு விழாவில் செந்தமிழர் பாசறை குவைத் மூத்த நிர்வாகி திரு.முகமது அலி அவர்கள் கலந்து கொண்டு பாசறையின் சார்பாக வாழ்த்து மடலை வழங்கினார்கள்.

செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா

05.06.2025 செந்தமிழர் பாசறை சவூதி அரேபியா தம்மாம் மண்டலம் முன்னெடுத்த வாராந்திர களப்பணி மற்றும் உறவுகளின் சந்திப்பு 

செந்தமிழர் பாசறை – ஓமன்

ஓமன் செந்தமிழர் பாசறை பொருளாளர் அன்புச் சகோதரர் திரு. வேத.திருமுருகன் அவர்கள் பணி நிறைவு செய்து தாயகம் தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறார்.

வணக்கம்!

ஓமன் பாசறையில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு, பலாஜ் பகுதியின் செயலாளர், சோகார் மண்டலச் செயலாளர் போன்ற பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர்; இக்கட்டான கொரோனா தொற்றுச் சூழலில், பல பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் தாயகம் சென்ற நிலையில், ஓமன் செயலாளராகப் பொறுப்பேற்று, திரு.சமீர்கான் அவர்களோடு இணைந்து, தொய்விலிருந்து பாசறையை மீட்டு வலுப்படுத்தியவர். கடந்த இரு ஆண்டுகளாக பொருளாளராகச் சிறப்பாகச் செயல்பட்டவர்.

தமிழ்த்தேசிய அரசியலில் ஆழ்ந்த நம்பிக்கையோடும், கொள்கைத் தெளிவோடும் புதிய உறுப்பினர்களைப் பொறுப்பாளர்களாக வார்த்தெடுத்த உழைப்பாளர். அவரின் சீரிய பணிகளைப் பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கி 16.06.2025 வழியனுப்பி வைத்தோம்.

வாழ்த்துகளுடன்

திரு. சந்திரசேகர்,
செயலாளர்,
செந்தமிழர் பாசறை ஓமன்.

19.06.2025 மசுகட் மண்டலப் பொறுப்பாளர் கலந்தாய்வு

செந்தமிழர் பாசறை – பக்ரைன்

பக்ரைன் செந்தமிழர் பாசறை சார்பாக 07.06.2025 நடைபெற்ற பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம்

செந்தமிழர் பாசறை – கத்தார்

கத்தார் செந்தமிழர் பாசறை சார்பாக 07.06.2025 நடைபெற்ற பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles