spot_img

ஊடறுக்க வேண்டிய நச்சுவலைப்பின்னல்கள் (திராவிடம், ஆரியம் மற்றும் உலக வல்லாதிக்கச் சூழ்ச்சிகள்)

ஊடறுக்க வேண்டிய நச்சுவலைப்பின்னல்கள் (திராவிடம், ஆரியம் மற்றும் உலக வல்லாதிக்கச் சூழ்ச்சிகள்)

திராவிடம், ஆரியம் மற்றும் உலக வல்லாதிக்க தான் ஆரியம் மற்றம் உலக வல்லாடுத்த விலையோ இலட்சக்கணக்கான உயிர்கள்; அதுவே ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை. இந்த இனப்படுகொலைக்குப் பின்பு தான், நம்மைச் சுற்றி ஒரு நச்சு வலைப்பின்னல் பின்னப்பட்டிருக்கிறது: அதை ஊடறுக்க வேண்டிய கால நெருக்கடியில் நாம் இருக்கிறோம்; அதற்குப் பேராயுதமாக கைக்கொள்ள வேண்டியது தமிழ்த்தேசியத்தைத் தான் என்பதனைத்தும் நமக்குப் புரிந்தது. இப்படி விழித்துக் கொண்ட போது, நாம் மிக முக்கியமான மூன்று சவால்களை எதிர்கொள்கிறோம். அவை, முதலாவதாக, தமிழ் நிலத்தைக் கையில் வைத்துக் கொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் திராவிடம், இரண்டாவது ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆரியம், மூன்றாவது இவர்கள் இருவரையும் இயக்கிக் கொண்டிருக்கும் உலக வல்லாதிக்கங்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை நம்மை அழிக்க முயலும் ஆரியம்:

இதில் ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆரியாகளை உற்றுநோக்குகையில், சிந்து சமவெளி வரை பரவிச் செழித்திருந்த தமிழர் நாகரிகத்தை வீழ்த்தி உள்ளே நுழைந்த ஆரியம், அவர்களின் வருகையின் போதுச் சிறந்திருந்த நம் மொழி, கலை, இலக்கியம், வழிபாடு, பண்பாடு மற்றும் மெய்யியலைத் திருடி அதையே பேராயுதமாகப் பயன்படுத்தி, பல அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு பெற்ற செல்வாக்கினால், இந்திய ஒன்றியம் முழுமைக்கும் வேரூன்றியது. மேலும் அது, இல்லாத இந்து மதத்தை உருவாக்கி, இந்துத்துவத்தை மக்கள் மீது திணித்து, வெறுப்பரசியலை விதைத்து, தேசிய இனங்களைப் பிரித்தாண்டு சூழ்ச்சி செய்து, அதிகாரத்தை எல்லாம் மையத்தில் குவித்து கொண்டிருக்கிறது. இன்று ஆளும் பாஜகவும், அன்று ஆண்ட காங்கிரசும் எப்போதுமே வேறு வேறு அல்ல. அவை இரண்டுமே, ஆரியத்தின் சந்தர்ப்பவாதமிக்க இருவேறு முகங்கள் மட்டுமே.

‘தமிழ்’ என்னும் மொழியும், “தமிழர்” எனும் இனமும், தனித்த தேசிய அடையாளத்தைப் பெறச் செய்த அத்தனை முயற்சிகளையும் தடுத்து நிறுத்தியது. ஆரியம். காங்கிரஸ் தமிழினப் படுகொலையை முன்னின்று நிகழ்த்தியது பாஜக அதற்குத் துணை நின்றது. அதற்கு முக்கிய காரணம், தமிழியமே ஆரியத்தின் நேற்று, இன்று மற்றும் நாளை ஆகிய முக்காலத்துக்குமான உண்மையான சித்தாந்த எதிரி என்பதே! இந்த ஆரியம் தனது சதித்திட்டங்களை மறைமுகமாகச் செயல்படுத்தத் தமிழ்நிலத்தில் வைத்திருக்கும் வேலையாள் தான், திராவிடம்.

தமிழர் எனும் நமது பேரடையாளத்தைத் திரிக்கும் திராவிடம்:

திராவிடம் என்பது எப்போதும் ஆரியத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்துள்ளது என்பதற்கு, வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆரியம், வடக்கில் நிலைபெற்ற போது தெற்கிலும், குறிப்பாகத் தொடர்ச்சியாக எதிர்த்து நிற்கும் உள்ளாற்றல் கொண்ட தமிழகத்தில், தங்களுக்கென ஒரு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த எண்ணியது. அதற்குச் சில அடிமைகளை, தனக்காகக் குற்றேவல் செய்வதற்கென்றே தோந்தெடுத்து, அவர்களை வளர்த்து விடுவதன மூலம், இந்நிலத்தின் மக்கள் தமக்கான அரசியலைத் தானே செய்ய விடாது தடுக்கும் சூழ்ச்சியை கையிலெடுத்தது.

தொடக்க காலத்தில் ஆரியத்தை எதிர்ப்பதாகச் சொல்லித் தொடங்கப்பட்ட திராவிடம், அதிகாரத்திற்கு வர ஆரியத் தலைமையாக இருந்த ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டு வைத்து தான், ஆட்சியைப் பிடித்தது. பின் யாரை எதிர்த்து ஆட்சிக்கு வந்ததோ அந்த தேசியக் கட்சியான காங்கிரசுடனேயே மாறி மாறி கூட்டு வைக்க திமுகவோ, திமுகவிலிருந்து பிரிந்த அதிமுகவோ தயங்கியதே இல்லை. அதிலும் குறிப்பாகத் திமுக, வாஜ்பாய் அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய முடியாமல் தவித்தபோது, அமைச்சரவையில் பதவியைப் பெற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் கூட ஒரு சமூக இயக்கம் தான் எனச் சொல்லிக் கூட்டனி வைத்ததோடு, பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸு டனும் பத்தாண்டுக் கூட்டணி வைத்துத் தனக்குக் கொள்கைப் பிடிப்பு அல்ல; கொள்கை என்பதே கிஞ்சித்தும் கிடையாது என்று நிறுவியிருக்கிறது. இப்போது ஆரியத்தின அதிதீவிர முகமான மோடி கால பாஜகவுடன் மீண்டும் நெருங்கி, பதவி வெறிபிடித்து அலையும் திமுக, ஆட்சி நிகழ்வுக்கு அல்ல, தன் கட்சி நிகழ்வுக்கே அழைத்துப் பெருமைப்படுத்த ஒரே காரணம், அதிகாரத்தின் மீதான பேராசையன்றி வேறென்ன?

திராவிடர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் நம் தாய்நிலத்தைக் கையகப்படுத்திய பிறகு, அந்நிலத்தை வைத்துப் பெரும் பணம் ஈட்டத்துவங்கினார்கள்; நம்மைக் கூலிகளாக்கி அப்பெரும் பணத்தைக் கொண்டு நிறுவனங்களை நிறுவினார்கள்; தொழில் துவங்கினார்கள்; அதன் மூலம் கிடைத்த ஆதாயத்தையும், பொருளையும் வைத்து அரசியலில் களமாடத் துவங்கினார்கள்; இவ்வாறு அடைந்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள தமிழர்களுக்கிடையே தன்னினப் பகையை, சாதிவெறியை மூட்டி, அதில் குளிர்காய்கிறார்கள். இப்படி நிலமும், பொருளும், பணமும், அதிகாரமும் ஒரு இடத்தில் குவியும் போது இயல்பாகவே அந்த நிலத்தின் மக்கள், இரண்டாம்தர, மூன்றாம் தரக் குடிகளாக மாறிப் போகிறார்கள்.

சங்க இலக்கியமான நற்றிணையில் ஒரு பாடல் வரி இவ்வாறு வருகிறது. மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்….. அதன் பொருள், நோயுற்ற ஒருவரைக் குணப்படுத்த மரத்தின் இலையையோ, பட்டையையோ, காயையோ, கனியையோ பயன்படுத்துவர்; மாறாக மரத்தினை அழித்து, ஒருபோதும் நோயுற்றவரின் உயிரைக் காக்க மாட்டார்கள். மனித உயிரைவிட மரத்தின் உயிர் மேலானது என வாழ்ந்த மான்புமிக்க தமிழனை திராவிடர்கள், மதுபோதைக்கு அடிமையாக்கி, திரைக்கவர்ச்சிக்கு உள்ளாக்கி, அதீத நுகாவை மக்களுக்கு பழக்கப்படுத்தி சாதி மதத்தை நிறுவனமயப்படுத்தி, அரசியலை வணிகமயமாக்கி, காசுக்கு வாக்குகளை விற்கும் இழி நிலையை உருவாக்கி, வெற்றியை விலைக்கு வாங்கும் கேவலத்தைச் செய்து வருகிறார்கள்.

நிலத்தின் உரிமையாளருக்கே அதன்மீது பற்று இருக்கும்; வந்து குடியேறியவர்கள் பெரும்பாலும் அந்த நிலத்திலிருந்து எவ்வாறு பொருள் ஈட்டலாம் என்றே எண்ணுவர். எனவே, இந்த நச்சு வலைப்பின்னல்களில் இருந்து தமிழாகள் மீளும் வசையில் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட, நம் தாயகத்தில் இனியேனும் தமிழர்களுக்கு ஆளும் அதிகாரம் வழங்கப்படுவது அவசியமாகும். அவ்வாறு நம் அடிப்படை சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகள் காக்கப்பட்டால் மட்டுமே, நம் நிலமும் வளமும் பாதுகாக்கப்படும். இத்தகைய சட்டங்களைத் துணிவுடன் இயற்ற, அதை விரைந்து செயல்படுத்த, தமிழ் மக்களுக்கு உரிமைகளை மீண்டும் பெற்றுத் தர, மண்ணின் மைந்தர்கள் அரியணையில் அமர்ந்தால் மட்டுமே சாத்தியம் உண்டாகும்.

நவீன காலனித்துவத்தைத் திணிக்கும் உலக வல்லாதிக்கங்கள்:

உலக வல்லாதிக்கங்களைப் பார்க்கும் போது, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நேரடியாகச் சென்று, சமர் செய்து காலனிகளாகப் பல நாடுகளைக் கைப்பற்றின. இரு உலகப்போர்களுக்கு பின்பு மறைமுகமாக, போரை ஒரு வணிகமாக்கி நாடுகளுக்கு இடையே தொடாசிக்கல்களை ஏற்படுத்துவதோடு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகியவற்றை ஆட்சிக் கொள்கைகளில் பின்பற்றச் சொல்லி, பொருளாதார ரீதியாக, நவீன காலனியாதிக்கத்தைப் புகுத்துகின்றன. இந்த ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு அடிபணியும் நாடுகளில் தமக்கு ஒத்துழைக்கும் தலைவர்களுக்குத் தொடர் அதிகாரத்தை உறுதிசெய்து, அறமற்ற வளச்சுரண்டல்களையும், இயற்கை மீதான வன்முறையையும் நடத்தப் பின்னிருந்து தூண்டுகின்றன.

அதோடு ஒரே அடையாளம், பண்பாடு மற்றும் நாகரீகம் என்ற பெயரில் ஒற்றைமயத்தைத் தினித்து, நம் அரசியல், பொருளாதாரம், நம்பிக்கைகள் என அத்தனையையும் கண்ணுக்குப் புலப்படாத கட்டுக்குள் வைத்துள்ளன. இதனாலேயே உலக வெப்பமாதல், காலநிலை மாற்றம் போன்ற சூழலியல் சிக்கல்களும், கொரோனா போன்ற பேரிடர்களும் அதிகரித்துள்ளன. இவை அனைத்திற்கும் தீர்வுகளைக் கண்டடைய, இயற்கையோடு இயைந்த மரபுசார் வாழ்வும், தற்சார்பு பசுமை உற்பத்திப் பொருளாதாரமும் பெரிதும் உதவும். குறைந்தபட்ச அடிப்படை உரிமைகளைத் திரும்பப் பெற்று, இழந்த நிலத்தையும் வளத்தையும் மீட்க முயல்வோம்; எனவே கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்துவதோடு, புதிதாக வாய்ப்புகளையும் உருவாக்கி, ஒற்றுமையுடன் இந்த நச்சு வலைப் பின்னல்களை அறுப்போம்!!!  தமிழ்த் தேசிய அரசை அமைப்போம்!!! தமிழினத்தைக் காப்போம்!!!

திருமதி. பவ்யா இம்மானுவேல், 

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles