மே 2022
தமிழீழம் அமைக்க ஏலும்!
எத்தனை வலிகள் எம் மக்களுக்கு?
எவ்வளவு இழப்புகள் எங்கள் மண்ணிற்கு?
தளராது மீண்டெழுமே தமிழீழத் தாய்நாடு!
தடைகள் யாவும் தமிழருக்கு அகன்றிட,
தமிழ் வேங்கைகள் மீண்டும் பிறந்திட,
நித்தம் அதற்குள் இன்னல்கள் பலநூறு!
இனத்தையும் அழித்ததே ஈழத்தில் இறுதிப்போரும்!
வேண்டும் வேண்டும் ஈழம் வேண்டும்!
வேங்கைகள் மீண்டும் பிறந்திட வேண்டும்!
தலைவன் வருவான்! கரம் கொடுப்பான்!
ஈழம் மீட்பான்! இனத்தைக் காப்பான்!
எந்தத் திசையிலும் என்னினம் நகர்ந்த போதும்,
நில்லாமல் அங்கே ஏவுகணை மழையும் பொழிந்ததே!
தமிழம் வேறு சிங்களம் வேறு!
சேர்ந்து வாழ்ந்து வீழ்ந்தது போதும்!
மீண்டும் மீண்டும் ஏமாற்றம் வீணே!
தமிழீழம் ஒன்றே எமக்கானத் தீர்வு!
தமிழகத் தமிழரும், ஈழத் தமிழரும்
இனமாய் நின்று, துணையாய் வந்தால்
சதிகாரக் கூட்டத்தின் சாதனை,
எம்மக்களின் குருதிப்பெருக்கோ?
பூஞ்சோலையும் இரத்தத்தில் சிவந்ததே!
மாவீரர் செய்த தியாகம் மறவோம்!
மண்ணுள் விதையென வீழ்ந்ததும் அறிவோம்!
நிலையும் மாறும்! துயரும் தீரும்!
சதிகள் மாளும்! தமிழும் ஆளும்!
அறத்தின் வழிநின்ற மக்களையும்
யுத்த நிறுத்தமென வேடதாரிகள் பொய்யுரைக்க,
தரணியில் தமிழராய் நாமும் நிமிர்வோம்!
தமிழினம் ஒன்றாய் மீண்டும் எழுவோம்!
சேய்கள் எல்லாம் சேரச்சேர,
பகைவர் எல்லாம் ஓடிப்போக தாய்த்தமிழும் ஆளும்!
வான்மாரியாகப் பொழிந்த குண்டுகள்
குலத்தினை நாசம் செய்ததோ? இருந்தாலும்
மாவீரர் கனவைத் நெஞ்சில் சுமந்தே
தடைகள் கலைந்து தமிழீழம் மீட்போம்!
தமிழீழம மைக்கயேலும்!
தமிழீழம மைக்கயேலும்!
தமிழீழம மைக்கயேலும்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.