சூன் 2022
திராவிடத்தின் துரோக வரலாறு
ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாகாணங்களுள் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் 1916ஆம் ஆண்டு டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டி அவர்களால் பிராமனர் அல்லாதோர் இயக்கமாக தொடங்கப்பட்ட கட்சிதான் ஜஸ்டிஸ் பார்ட்டி (Justice party) என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சி. பெயர்தான் “சென்னை மாகாணம்”, ஆனால் அன்றுமுதல் இன்றுவரை கடந்த நூறு ஆண்டுகளாக எவ்வாறெல்லாம் திராவிடத்தின் பெயரைக் கொண்டு தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டு வருகின்றனர் என்பதற்கான ஒரு சிறு கட்டுரை தான் இது.
பிராமணரல்லாதார் இயக்கத்தின் முன்னோடியான பிட்டி தியாகராய செட்டி ஒரு தெலுங்கர். முதல்வர் பதவி மட்டுமல்லாது, ஒரு தமிழர்கூட அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக, அதுவும் எவரெல்லாம் தமிழர்களுக்கு எதிராக, தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்களோ அவர்களுக்கே பதவி கொடுத்து அழகு பார்த்தவர் தான் தியாகராயச் செட்டி. இன்னொரு முன்னோடியாள டி.எம். நாயரோ ஒரு மலையாளி, 1920இல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது நீதிக்கட்சி, முதல் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார். அதன்பின்பு 1921 முதல் 1926 வரை ஆண்டவர் பனகல் அரசர். அதன்பின்பு 1930 வரையில் ஐயா ப.சுப்பராயன். 1930 முதல் 1932 வரையில் முனுசாமி நாயுடு. அதன்பின்பு 1932 1936 வரையில் ஒப்பிலி ராஜா அரசு, 1937 வரையில் குமாரசாமி வெங்கட ரெட்டி, இதில் ஒருவரும் தமிழரில்லை. மிக பெரும்பான்மையான பூர்வகுடி மக்கனில் ஒரு தமிழன் கூட ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர் திராவிட வடுகர்கள்.

1920 முதல் 1987 வரை நீதிக்கட்சியின் ஆட்சி. அந்த காலகட்டத்திலேயே அப்பொழுது தமிழ்நாட்டின் வசமிருந்த தமிழ்நாடு எல்லைகளான திருப்பதி, சித்தூர், குண்டூர் ஆகிய இடங்களில் பரவலாக தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்களை குடியமர்த்தி பெரும்பான்மையின் தமிழக மக்களின் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று அறிவித்து விட்டார்கள். 1920 முதல் 1937ஆம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்த நீதிக்கட்சி 1937ம் வருடம் இந்திய தேசிய காங்கிரசிடம் தோல்வி அடைந்தது. காங்கிரசு கட்சின் முதல்வராக ஐயா ராஜகோபாலாச்சாரி பொறுப்பேற்றார். அதே 1937ஆம் வருடம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
சிங்காரவேலரோடு ஒன்று சேர்ந்து தமிழுக்காகப் போராடுவது போல் வேடம் கட்டிய பெரியார், சிங்காரவேலர் எடுத்துக்கொண்ட தமிழர் நலன் சார்ந்த சீரிய திட்டத்தை ஏற்க மறுத்து, செத்துக்கொண்டிருந்த நீதிக்கட்சிக்கு 1938 வருடம் தலைவரானார். அக்காலகட்டத்தில் மொழிப்போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தினால் தமிழ் தமிழர் நாடு தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் பேரெழுச்சியாக எழுந்தது. ஆனால் வெண்ணை கூடி வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக 1944இல் நீதிக்கட்சிக்கு தமிழர் கழகம்” என பெயர் மாற்றம் செய்வதற்கு பதிலாக “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றம் செய்து கைக்கெட்டும் தூரத்தில் வந்த தமிழ்த் தேசியத்தை தமிழ்த் தேசிய அரசியலை சுக்கு சுக்காக்கினார் பெரியார்.
1937 ராஜகோபாலாச்சாரியின் ஆட்சிக்கு பின் 1939ஆண்டு பிரித்தானிய இந்தியா, மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது. 1939 முதல் 1946 வரை ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி), 1946 1947இல் ஆந்திர கேசரி என்றழைக்கப்பட்ட பிரகாசம், அதன்பின்பு 1949 வரை ஓ.பி.ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தனர். அதுவரையில் சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட இன்றைய தமிழ்நாடு, சுதந்திர இந்தியாவில் மெட்ராஸ் ஸ்டேட் (சென்னை மாநிலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இனி மொழி வழியில்தான் மாநிலங்களின் பிரிவினை என்று முடிவான பின்பு தமிழ்நாடு தமிழருக்கே என்ற நிலைப்பாட்டுக்கு பெரியாகும் தள்ளப்பட்டார். ஆனால் 1949 ஆம் வருடம் தனிக்கட்சி (திமுக) கண்ட அவருடைய சீடர் அண்ணாவோ சாத்தியமே இல்லாத திராவிட நாடு கோரிக்கையை முன்னெடுத்தார். காரணம் தேர்தல் அரசியல். தங்களுக்கே உரிய வடுக வாக்கு வங்கியை, கடுகளவும் சிந்தாமல் வைக்கவேண்டுமே அதற்காக. அது அன்று முதல் இன்றுவரையில் சாத்தியமாகி கொண்டிருக்கிறது. காரணம் ஏமாளி தமிழ் இளம். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட பின்பும், அதற்கான காரணம் அப்படியே இருக்கிறது என்று அண்ணா சொல்ல காரணமும் அதே வடுக வாக்கு வங்கி தான்.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1949 முதல் 1952 வரை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் குமாரசாமி ராஜா, அதன்பின்பு 1954 வரை ஐயா.ராஜகோபாலச்சாரி. 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள், எதிரிகளால் கூட பொற்கால ஆட்சி என்று வர்ணிக்கப்பட்டதும், 50 ஆண்டு கால திராவிட ஆட்சியாளர்கலால் கூட செய்யமுடியாத அரிய பல சாதனைகளை செய்தவருமான கர்மவீரர் காமராஜரின் ஆட்சி, நாட்டில் விவசாயத்தை பெருக்குவதற்காக எண்ணற்ற பல தீர்தேக்க திட்டங்களை அமைத்து நீர் வளத்தையும் நில வளத்தையும் பெருக்கினார். அவற்றில் குறிப்பீட்ட சில திட்டங்களாக பவானிசாகர் அணை, மணிமுத்தாறு, வைகை அணை, மேட்டூர் அணை, பரம்பிக்குளம் கீழ்பவானி அணை என்று இன்றைக்கும் விவசாயிகள் பெருவாறு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் ஐயா காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதுமட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் எண்ணற்ற தொழிற் சாலைகளை நிறுவினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பலூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், ஆவடி கனரக தொழிற்சாலை என்று எண்ணற்றனவாகும்.
படிக்காத மேதை என்ற புகழுக்கு சொந்தக்காரரான ஐயா காமராஜர் அவர்கள், குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எனச் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழை மாணவர்களும் படிக்க வேண்டுமென்று இலவசக்கல்வி மற்றும் 16 ஆயிரம் பள்ளிக்கூடங்கனை நிறுவினார். ஆனால் அவருடைய ஆட்சி காலப் பொன்னேட்டில் ஒரு மிகப்பெரிய கரும்புள்ளி ஒன்றை வைத்துவிட்டார். (அது கூடிய விரைவில் அழிக்கப்பட்டுவிடும் என்பது வேறு விடயம்). 1956 நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பெருமளவு தமிழர் வாழ்ந்த பீர்மேடு, தேவிகுளம் பகுதிகளை கேரளாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். முல்லைப் பெரியாற்றின் நீருக்கு கையேந்தவிட்டார்.
தமிழருக்கே உரித்தான பரந்த மனப்பான்மையாலும், சுதந்திரப் போராட்ட வீரராக இந்திய நாட்டை அளவு கடந்து நேசித்ததாலும் நடந்த பிழை இது. ஆனால் ஐயா ம.பொ.சி தலைமையிலான வடஎல்லை மீட்புப் போராட்டத்தால், சென்ளையும், திருத்தணியும் ஆந்திரர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. 1963 முதல் 1967 வரை முதலமைச்சராக இருந்தவர் எம்.பக்தவத்சலம். 1965ம் ஆண்டு மாணவர்களின் தன்னெழுச்சியான இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியை அறுவடை செய்து 1967ம் ஆண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் அண்ணா.
ஜனவரி 14 1969 மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்தது “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணாவின் ஆட்சியில், 1969 ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பின் ஏழு நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் நெடுஞ்செழியன். அதன்பின்பு கருணாநிதி 1969 1976. திமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்று அஇஅதிமுக என்ற கட்சியைத் தொடங்கி, அதன் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த எம்ஜி ராமச்சந்திரன் 1977 முதல் 1987 வரை. அதன்பின்பு மாறி மாறி திராவிடர்களின் ஆட்சி தான். இன்று வரையில் அது தமிழரின் கையில் அகப்படவே இல்லை.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்த போதும் சரி, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் சரி, திராவிடர்கள் எப்பொழுதும் தமிழருக்கான உரிய உரிமையை கொடுத்தது கிடையாது. அவரவருக்கு உண்டான மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, அவரவர் நாட்டை அவரவர் ஆள்வது தானே உரிமை. ஆனால் தமிழகத்தை திராவிடர்கன்தான் ஆண்டார்கள். அதனாலென்ன வட இந்தியாவை ஒப்பிடுகையில் தமிழகம் இப்பொழுது முன்னேறிய நாடாக தானே உள்ளது என்று வெள்ளந்தியாக கேட்பவர்களுக்கு. இரண்டாம் உலகப்போரில் இரண்டு அணு குண்டுகளை மார்பில் தாங்கிய ஜப்பான் இன்று உலக வல்லரசுகளில் ஒன்று. வெறும் மனித உழைப்பை மட்டுமே முதலீடாகக்கொண்டு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
இப்பூமிப்பந்தில் கடவுள் நமக்கு அளித்த வரமாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான காடு வளம், கனிம வளம், மலை வளம், கடல் வளம், எண்ணை வனம் என எண்ணற்ற வளங்களை இயற்கை நமக்குக் கையளித்துள்ளது. எனவே நீங்கள் தமிழ்நாட்டை வட இந்தியாவோடு ஒப்பிடவேண்டாம். ஏனென்றால் தமிழ்நாடு மட்டும் தனி நாடாக இருந்திருக்குமேயானால் இன்று நம் தமிழ்நாடு உலக வல்லரசுகளில் ஒன்றாக இருந்திருக்கும்.
இனியும் வேண்டுமா ஆரிய, திராவிட ஆட்சி?
மூன்று காரணங்கள்:
1.கனிமவளக் கொள்ளை:
இயற்கை அன்னை நமக்கு கையளித்த மனிதனால் உருவாக்கவே முடியாத பொற்களஞ்சியத்தை அழித்து கூறுபோட்டு விற்பதற்கு அனுமதி அளித்தது யார்? இது நமக்கான சொத்தா? இல்லவே இல்லை!!, அடுத்த தலைமுறைச் சொத்து. ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் குவாரி, தாதுமணல் கொள்ளை, இப்படி அனைத்து வளங்களையும் அள்ளி, விற்று தெற்கு ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் சேர்ந்தாகிவிட்டது. இப்பொழுது நம் நாட்டில் அரங்கேறியிருக்கும், அரங்கேறிக் கொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், கூடங்குளம், நியூட்ரினோ. 8 வழிச் சாலை, கெயில் எரிவாயு குழாய், சாகர் மாலா, ஸ்டெரிலைட், இப்படி இன்னும் பல அழிவு திட்டங்களுக்கும் கையெழுத்து போட்டாகிவிட்டது. கடவுள் அள்ளி கொடுத்த மழை நீரை சேமித்து வைக்காமல் அப்படியே கடலில் கலந்தாகி விட்டது. நீர் மேலாண்மையாவது மண்ணாவது!! இனி அடுத்த 6 மாதங்களில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு. இதுநான் கடந்த கால வரலாறு. இப்பொழுது முதலமைச்சரான ஸ்டாலின் அவர்கள் இதை தடுத்து நிறுத்த போகிறாரா? ஆம் என்று நம்பிக்கொண்டிருந்தால் உங்கள் சிந்தனையை பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.
2. வெளிமாநிலத்தவர் குடியேற்றம்:
பொதுவாக ஒரு நாட்டின் என்பது அந்நாட்டின் வளங்களை முன்னேற்றம் பொருத்தும், குடிமக்களின் பொருளாதார அளவை பொறுத்துமே தீமானிக்கப்படுகின்றது. 50 ஆண்டுகளில் எத்தனை தமிழ் தேசிய முதலாளிகள் உருவாகி உள்ளார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் உருவாக்கிய தமிழ் தேசிய முதலாளிகள் யார் என்று பார்த்தால் கிரானைட் முதலாளி, தாதுமணல் முதலாளி, ஆற்றுமணல் முதலாளி. என்ன ஒரு புத்திசாலித்தனம். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பெரும்பான்மையான பிரபலமான வணிக வளாகம், மருத்துவமனை, பள்ளி கல்லூரி நிர்வாகம் அனைத்திலும் வெளிமாநிலத்தவர்களே. தற்பொழுதுள்ள ஆய்வின்படி ஒரு கோடிக்கும் அதிகமான வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குடியேறியுள்ளார்கள். அவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தமிழக குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அட்டை பெற்று சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் 10 ஏக்கரில் அசாம் பவன், ஒரிசா பவன் என்று வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் போன்று அம்மாநில அரசு அலுவலகம் இங்கே செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள நாலரைக் கோடி வாக்குகளில் ஒரு கோடி வெளிமாநிலத்தவர் என்றால் அவர்களது வாக்குவங்கி யாரிடம் இருக்கும்? திராவிடத்திடமும், ஆரியத்திடமும் தானே? அவர்கள் பெரும் வணிக நிறுவனமாக மட்டுமில்லாமல் சிறுசிறு மளிகை கடை, துணிக்கடை, அழகு சாதன விற்பனையகம் (பேன்சி ஸ்டோர்), தேனீர்க்கடை என அனைத்திலும் நுழைந்துவிட்டனர். அவர்களது பொருளாதாரம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இங்கே திராவிடர்கள் சூழ்ச்சியாக, தமிழர்களை மது போதைக்கு அடிமையாக்கியும், திரைப்பட கவர்ச்சியில் மூழ்கடித்தும், மிகப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
3. தமிழர்களின் வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசாங்கப் பதவிகளிலும், திராவிடர்களும், ஆரியர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். யாராவது மறுக்க முடியுமா? கடந்த 2018 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. தமிழகத்தின், அனைத்து அரசு வேலைவாய்ப்பிலும், அனைத்து மாநிலத்தவரும் கலந்துகொள்ளலாம் என்றும், பதவி கிடைத்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தமிழ்மொழி கற்றால் போதுமானது என்று ஒரு விலக்கு கொடுத்துள்ளது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் அந்தத்த மாநில மக்களுக்கு 90% வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 10% பிற மாநிலத்தவர். தமிழ்நாட்டில் மட்டும் 100% இந்தியா முழுமைக்கும் உள்ள அனைத்து மாநிலத்தவரும் இங்கே போட்டியில் கலந்துகொள்ளலாம் என்றால் நாம் எப்படிப்பட்ட அடிமையிலும் கீழான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். என்பது நம் கண்முன்னே வந்து போகும். 58 -60 வயதாகும் வரை அவர்கள் பதவியில் இருப்பார்கள். நம் பிள்ளைகளின் எதிர்காலம், ஒரு கனாக்காலம்.
நாம் தமிழர் கட்சியின் தேவையும் அவசியமும்:
இனியும் நமக்கு இந்த ஆரிய, திராவிட ஆட்சிதான் வேண்டுமா?? அல்லது அனைத்து அடக்குமுறை ஒடுக்கு முறையையும் தகர்த்தெறிந்து புலிப்பாய்ச்சலாய் பாய்ந்து வரும் நாம் தமிழர் ஆட்சி வேண்டுமா?? என்பதை, நீங்கள் உங்கள் மனச்சாட்சியுடன் விவாதிக்க விட்டுவிடுகிறேன்.
திரு. வெள்ளியங்கிரி சண்முகம்
செந்தமிழர் பாசறை – குவைத்