சூன் 2022
விழிடா தமிழா விழிடா நீ
வீறு கொண்டு எழுடா
சாதி சண்டை ஏனடா
இங்கே எல்லாரும் தமிழன் தானடா…
சாதி தந்த நீதி என்று
சகமனிதனையே தள்ளி வச்சான்!
சாமி தந்த நீதி என்று மாட்டுக்கு இங்கு மணியடிச்சான்!
மனுஷனோட புத்தியில
மனுஷ்மிருதிய மறைச்சு வச்சான்!
மண்ணுலகம் உள்ளவரை மகுடம் சூட ஆசை வச்சான்!
சாதியைப் பாடி சமத்துவத்தை
மண்ணிலே மூடிவச்சான்!
சகோதரனாய் வாழ்ந்தவனை சாதி சொல்லிப் பிரிச்சு வச்சான்!
அவன் ஆனந்தமாக வாழ நம்மை சாதி சண்டையிட்டுச் சாக வச்சான்! சுய அறிவு அற்றவனாகச் சொந்த மண்ணில் வாழ வச்சான்!
மனிதனாக வாழ்வோம் சகமனிதனை மதித்து வாழ்வோம்! தமிழனாக வாழ்வோம் தரணியில் தலைநிமிர்ந்து வாழ்வோம்!
சூழ்ச்சியை நீ புரிந்து கொள்நீ சும்மா இருப்பதை நிறுத்திகொள்! தமிழ் இனமாய் சேர்ந்து கொள் தமிழனை ஆளவைக்க உறுதிகொள்!!
திரு. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்