சூன் 2022
சமீபத்தில் ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழன்னை ஓவியத்தை, தமிழுக்குத் சனாதனக்கூட்டம் தொடர்பற்ற விமர்சித்து வருகிறது. அவர்களுக்கான பதில். உங்களுக்கு வடநாட்டு இலட்சுமி மற்றும் சரஸ்வதியின் வடிவமாக, பவ்யமாகத்தான் தமிழன்னை இருக்க வேண்டும் என்றால் அதை நான் ஏற்க வேண்டிய தேவை இல்லை.
ஆரவாரத்தோடு இருக்கும் தமிழன்னையையும், நான் ஏற்பேன், கொண்டாடுவேன். உங்களுக்கு ஆரிய நிறத்துடன், பனீரென்று இருக்கும் தமிழன்னையை மட்டும்தான் கொண்டாடுவீர்கள் என்றால் அதற்கு நான். ஆளல்ல. இம்மண்ணின் நிறத்துடன் கம்பீரமாக ரௌத்திரக் கூத்தாடும் தமிழன்னையை நான் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது?
கற்றது தமிழ் திரைப்படத்தில் வசனம் ஒருவனை வரும், தமிழ் சாந்தப்படுத்துவது மட்டுமல்ல, ரௌத்திரத்தையும் பழக்கும்!! இந்த வசனத்துக்கு விசிலடித்த பலர், இந்த ரௌத்திரக் கூத்தாடும் தமிழன்னையை விமர்சிப்பது நகைப்பையே வரவழைக்கிறது.இப்படித்தான் முருகனை, இம்மண்ணின் உருவத்தில் கொண்டு வந்து நிறுத்தியபோதும் கதறினார்கள். ஆனால் இம்மண்ணின் இறை இம்மண்ணை சார்ந்த உருவத்திலேதான் இருக்கும்.
இறுதியாக தமிழன்னையை உருவத்திற்குள் அடைக்காதீர்கள். அவள் “அருவம்”, ஒற்றை உருவத்திற்குள் அடங்காதவன். என் மனக்கண்ணில் எவ்வாறு தோன்றுவாளோ அவ்வாறு நான் கொண்டாடுவேன்.
திரு. பினோபின் ராஜ்
செந்தமிழர் பாசறை – ஓமன்