சூலை 2022
இயற்கை தந்த கொடையே
வனமானேன்!!
நானின்றி அமையாது வையத்தின்
உயிர்களே!!
மழைக்கு தாயானேன்!
மலைகளின் சேயானேன்!
மண்ணில் மானுடம் தழைக்க பிறந்தேனே!!
கார்முகிலை வான்மாரியென எனக்குள் நீந்தவிட்டேன்!!
மேடுபள்ளம் கடந்து ஆறென நிறையவிட்டேன்!!
காடென்று நானும் கர்வமும் கொண்ட தில்லை!!
பல்லுயிர்கள் வாழ்ந்திடும் வீடென்று
நிலைத்தேனே!!
மூலிகை வளமும் எனக்குள்
ஆயிரமுண்டு!
முல்லை நினமென எனக்கு
பெயருமுண்டு!!
இத்தனை சிறப்பும்
எனக்குள் உண்டு! அத்தனையும் மறந்து
எந்தன் தலையறுப்பதேனோ??
நயவஞ்சகர் கூட்டம் நாற்புறமும் சூழ்ந்து,
நாள்தோறும் எந்தன் காலைக் முறிப்பதென்ன!!
கதிரவன் கருணை கொள்ள காட்டுத்தீயென பறந்தேன்!
கயவரை அழித்திட விரைந்தேன்!!
அறிவில்லா மாந்தர் அறவே ஒழியட்டும்!
அவர்களின் ஆணவம் இன்றே முடியட்டும்!!
இனியேனும் மண்ணின்
உயிர்கள் சிறக்கட்டும்!!
காடுகள் தோறும்
வெளிச்சம் பிறக்கட்டும்!!
திரு. பா. வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்