சூலை 2022
இளைஞர்களை விழிப்படையச் செய்யும் சீமான்
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து ஒதுங்கி இருந்த போன்ற எண்ணற்ற இளைஞர்களை விழிப்படையச் செய்து, எந்த இளைஞன் அந்த சாக்கடையை கண்டு விலகிப் போனானோ, அதே இளைஞர் படையை வைத்து, அந்த சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தவர் அண்ணன் சீமான்.
அரசியலை கண்டு நீ விலகிப் போனாலும், அந்த அரசியல் உன்னைவிட்டு ஒருபோதும் விலகி போகாது என்று உணர்த்தியவர் அண்ணன் சீமான். அரசியல் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று எண்ணியிருந்த, என்போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்களை, விழிப்படையச் செய்து தமிழக அரசியலில் ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கியவர் அண்ணன் சீமான்.
சினிமா மோகத்தில் இருந்த இளைஞர்கள், அந்த நடிகரை பற்றி இவர் விமர்சிப்பது, இந்த நடிகரை பற்றி அவர் விமர்சிப்பது. ஒருவருக்கொருவர் நடிகரின் பெயரைச்சொல்லி நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொள்வது, அந்த நடிகரின் பதாகையை இவர் கிழிப்பது, இந்த நடிகரின் பதாகையை அவர் கிழிப்பது, பெற்ற தாய், தந்தைக்கு ஒரு வேலை சோறுபோட வழிஇல்லாத நிலையிலும்கூட ஒரு நடிகனின் பிறந்தநாள் மற்றும் அந்த நடிகனின் பட வெளியீட்டு விழாவிற்கு நூறு அடி உயரத்திற்கு பதாகை வைத்து பாலாபிசேகம் செய்வது, இது போன்ற இன்னும் பல இழி செயல்களின் ஈடுபட்டிருத்த இளைஞர்களை விழிப்படையச் செய்து, உனது வேலை நடிகனின் பின்னால் செல்வது அல்ல என்று எடுத்துக்கூறி சமூக அக்கறை கொண்ட இளைஞர்களாக மாற்றி இந்த மண்ணையும், மக்களையும் தன் உயிருக்கு நிகராக நேசிக்க வைத்தவர் அண்ணன் சீமான்.
சாதி, மத போதை மற்றும் சாராய போதையில் சீரழிந்து, நமது உரிமைகளை இழந்து, நமது உணர்வுகளை இழந்து, நமது கலை, இலக்கியம், பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தையும் இழந்து, அனாதைகளை போல் கேட்க நாதியற்ற இனமாக நிற்கின்றோம் என சிந்திக்க வைத்தவர் அண்ணன் சீமான். ஐம்பதாயிரம் ஆண்டுகள் பெருமை மிக்க நம் தமிழ் இனத்தின் வரலாறுகளை, வெறும் ஐம்பது ஆண்டுகளில் அழித்தொழிந்த தீய திராவிடர்களின் முகத்திரையை கிழித்து, உண்மையை இந்த உலகிற்கு உரக்கச் சொன்னவர் அண்ணன் சீமான்.
தமிழகத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தாலும், அத்தனை கட்சிகளும் தேர்தல் நேரத்தில் திராவிடக் கட்சிகளோடும், தேசிய கட்சிகளோடும், கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திப்பார்கள். அப்படி பல கட்சிகள் கூட்டணி வைத்தாலும், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை. தமிழகத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஓட்டுக்கு காக கொடுக்காமல் தேர்தல் களத்தில் மேடைதோரும் நல்ல கருத்துக்களையும், தத்துவங்களையும் மட்டும் முன்நிறுத்தி தன்னம்பிக்கையோடு தைரியமாக தனித்து களம் காண முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் அண்ணன் சீமான். சாதி, மதங்களாகப் பிரிந்து, பிளந்து கிடந்தால் நம் மொழி, நம் இனம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.
அதே நேரம் நாம், சாதி, மதங்களை கடந்து நாம் தமிழராக ஒன்றுபட்டால் நம் தமிழினத்தை இவ்வுலகில் எவராலும் ஜெயிக்க முடியாது என்ற உணர்வை ஊட்டியவர் அண்ணன் சீமான். இதுவரை திராவிடனை நம்பி இழந்தது போதும், இனி இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என விழிப்படையச் செய்து முன் எச்சரிக்கை கொடுத்தவர் அண்ணன் சீமான், வந்தவரையெல்லாம் வாழ வைப்பது எம் இனத்தின் பெருமை, இனி எம் சொந்தவரை மட்டுமே ஆளவைப்பது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை என எடுத்துச்சொல்லி, எங்கள் மூளையில் படிந்திருந்த சாதி, மத போதை மற்றும் தீய திராவிடத்தின் அடிமை சிந்தனையின் அழுக்கை அகற்றி, விழிப்படையச் செய்து, தமிழ் அவமானம் அல்ல தமிழ் எங்கள் அடையாளம் என எடுத்துரைத்தவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.
திரு. நத்தபுரக்கி ரெ.விஜயகாந்தி
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.