சூலை 2022
“தமிழ்த்தாயின் புலம்பல்” மக்கள் புரட்சியாக வெடிக்கும்!
வந்த வழி தெரிந்து கொண்டோம்
வாழும் நிலையை புரிந்து கொண்டோம்!
நாடாண்டவன் செய்த செயலாலே நலிவுற்று நாம் நிற்கின்றோம்!
ஆரியமும், திராவிடமும் தமிழர்களை அடிமையாக்கி ஆள்கிறது!
அன்போடு திண்ணச் சொல்லி அரளிக்காயை கொடுக்கிறது!
அடிமைகளாய் வாழ்ந்திடவா அரும்புகளை பெற்றெடுத்தோம்!
அடிமைகளாய் வாழ்ந்திடவா அரும்புகளை பெற்றெடுத்தோம் !
அடிமை உணர்வுகளை அறுத்து இங்கே எறிந்திடுவோம்!
அச்சம் எமக்கில்லை என பறைகொட்டி பாடிடுவோம்!
கயவர்களின் ஆட்சியை களையெடுக்க இணைந்திடுவோம்!
தமிழனை தடுக்கின்ற தடைகளை தகர்த்தெறிவோம்!
புண்ணிய பூமியிலே புரட்சி ஒன்று பிறக்கட்டும்!
புதிய தமிழகத்தை – நாளைக்கு நம்பிள்ளை சுவைக்கட்டும்!
புலம்பல்கள் எல்லாம் மக்கள் புரட்சியாக வெடிக்கட்டும்!
புதியதோர் தமிழகத்தை நாம் தமிழர் படைக்கட்டும்!!
திரு. க.நாகநாதன்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.