சூலை 2022
வீழ்வோம் என்று நினைத்தாயோ!
உரிமைக்கு உடன்கட்டை ஏறும் கூட்டம்!
குருதி எங்கள் நிலத்தின் நீர் ஓட்டம்!
காலணி இல்லாமல் போர்க்களம் கண்ட கூட்டம்!
தலைவன் கண்ட கனவின் மீது காதல் கண்டோம்!
போர்க்குணம் எங்கள் பிறப்பின் மரபு என்று அறிந்தோம்!
வாழவே வாள் எடுத்தோம்!
உயிர் போகும் என்றறிந்தே தலைவன் துணை நின்றோம்!
கயவர்களும், கண்டவர்களும் எங்கள் கன்னியர்களை
தீண்ட கரிகாலன் தலை கொய்ய கண்டோம்!
கடல்கடந்தோம், கண்டம் கடந்தோம்,
நாடு பல கண்டோம் எங்கள் அடையாளம் மறக்க மறந்தோம்!!
பயம் அறியா தாய் புலியின் பிள்ளைகள்,
அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்!!
கனவுகளை களைய விடியும் வரை உறங்குவது இல்லை!
விடியும்வரை உறங்காமல் களம் காணும் உறங்காப்புலிகள் நாங்கள்!
உயிர் போகும் நிலையிலும், ஒற்றை துவக்கை
பறிகொடுக்க மனம் இல்லா புலி கூட்டம்!
இறுதிச் சண்டை எங்கள் முடிவல்ல!
லட்சங் கனவுகள் – கோடி கனவாக விதைக்கப்பட்டவை!
உடல் உரமாக! உதிரம் நீராக!
பல மழை கண்டும் எங்கள் ரத்தத்தின் அச்சு அழியாக் கரை!
தோட்டாக்கள் துளைத்த சுவர்கள் சொல்லும் எங்கள் மறவர்களின் வீரம்!!
ஓட்டை துவக்குக்குப் பயந்து ஓடியவன் அறிவான் ஓடியது
துவக்குக்குப் பயந்து அல்ல துவக்கு ஏந்தியவனுக்கு என்று!!
நாங்கள் சுதந்திரம் நாடி மாண்டது மண்ணுக்கு உரமாக அல்ல!
உயிராக போற்றிய தமிழுக்கு!!
துரோகம் அறுவடை செய்து வீரம் விதைக்கப்பட்டது!
எங்களுடன் களம் கண்ட ரப்பர் செருப்பை கண்டு,
அஞ்சுவான் என்றால் அவனே எங்கள் துரோகி!!
தோட்டாக்கள் தொலைவில் இல்லை!
சுதந்திர தாகமும் அடங்கவில்லை!
எங்கள் பனைமரத்துக்கு பங்குண்டு!
பகைவனின் பகல் கனவை உடைப்பதற்கு!
மகன் இல்லா தாய்க்கும் மகன் ஆனான் தலைவன்!
தாய் இல்லா மகனுக்கும், தாயான தவப்புதல்வன்
பாட்டன் பண்டாரனும் காணாத படைகண்டான் தலைவன்
முப்படை கொண்ட ஒரே தமிழன் மகன்!
திரு. வினோ,
ரியாத் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.