செப்டம்பர் 2022
உங்களதிகாரம் –இயற்கையைக் காக்கவா? அழிக்கவா?
எத்தனை எத்தனை இயற்கையடா!
அது நம் இறைவனின் படைப்படா!
ஆகாயம் உயர்ந்த மலையைப் பார் –
அதை நம் இயற்கை அன்னையின் தலையாய்ப் பார்!
அதை வெடிவைத்து தகர்ப்பது அறிவினம்
என்பதை சிந்தித்துப் பார்!
உயரமாய் வளர்ந்த மரத்தை பார்! –
அதை அழிப்பது தவறு என்பதை சிந்தித்து பார்!
முல்லைக்குத் தேர் கொடுத்த
நம் பாரிவள்ளல் வாழ்ந்த மண்ணடா!
அதிகாரம் பெற்ற சீர்கெட்டோர்
இயற்கையை அழிப்பது கொடுமை அன்றோ? –
சிந்தித்து பார்! நாம்பெறும்
அதிகாரம் இயற்கையை காத்து,
நம் இனம் காத்து செழித்து வாழ்ந்திடவே!
இதுவரை இருந்த அதிகாரங்கள்
விணெண்று கருதுவோம்! – நாம்
பெறப்போகும் அதிகாரம்
இயற்கையை காத்திடவே
என இனி மாற்றுவோம்!
செந்தமிழராய் பைந்தமிழராய்
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்!
இயற்கையின் தோழன் “விவசாயி”
அந்த விவசாயியின் சின்னம் பெற்ற
செந்தமிழன் “சீமான்” பாதையில்
“தமிழ்த் தேசியம்” அமைத்திட
அறிவாயுதம் ஏந்தி “அதிகாரம்” நிறுவுவோம்!
“நாம் தமிழர்”
திரு. தா.அருள்ராசு,
செந்தமிழர் பாசறை – குவைத்.