அக்டோபர் 2022
உண்மையை நீ தேடு!
நாடு நல்ல நாடு நம்மோட நாடு
நல்லபடி வாழ்வதற்கு உண்மையை நீ தேடு!
நீரின்றி பயிர்கள் வாட பசுமை தோன்றுமா?
படத்தில் உள்ள பழம் பசிக்காகுமா?
பண்பற்றவன் பதவியில் அமர்ந்தால் நீதி கிட்டுமா?
வாழ்க வாழ்க என்று சொன்னால் வறுமை ஒழியுமா?
களவு போன மலைகள் மீண்டும் காட்சி கொடுக்குமா?
காடு மலை காவாத அரசு நல்லரசாகுமா?
இக்கொடியநிலை மாற கேள்வியின்றி
கடந்து செல்வது மனிதம் ஆகுமா?
தெருக்களுக்கு தேசத் தலைவர் பெயர் வேண்டுமாம்!
தேம்பி அழும் குழந்தைக்கு சோறு வேண்டாமாம்!
பக்தன் வேடம் பூண்டுவிட்டால் பக்தியாகுமா?
தேசபக்தன் என்று கூற தேசம் வளருமா?
“என்னுடைய பாட்டு உன்னுடைய ஓட்டு
உரைப்பதை கேட்டு பத்தியை நீ தீட்டு
களவாணி பேச்சைக் கேட்டு காசுக்காக போடாதே ஓட்டு”
வள்ளலார் மாணவன் நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.