அக்டோபர் 2022
காலத்தை வென்றவன்
தமிழர் வீரத்தையும் தியாகத்தையும் உலகறியச் செய்தவன்!
தரணியில் தமிழர் பெருமையை பறைசாற்றிய போர்வீரன்!
தலைவன் பெயரை கேட்கும் போதே உள்ளத்தில் எழுச்சி பொங்கிடுமே!
தலைவன் பிரபாவின் பெயரைச் சொன்னாலே வீரமும் வந்திடுமே!
தமிழனாக வந்துதித்த புலிப்பிள்ளை அண்ணன் பிரபாகரன்!
தமிழர் வாழ்வில் ஒளியேற்றிய செங்கதிரவன்!
தன்னலம் பாராது பொதுநலத்துடன் வாழ்ந்த புலிப்பிள்ளை!
தமிழினத்திற்கு தனது குடும்பத்தையும் கொடையளித்த வேலுப்பிள்ளை!
எதிரிக்கும் அன்பு காட்டிய பாசக்காரன்!
துரோகத்தைக் கண்டு அஞ்சாத தமிழர் பேரரசன்!
தமிழினமே மூச்சென வாழ்ந்த தலைவன்!
தமிழருக்கு என்றும் அவரே இறைவன்!
காலத்தை வென்ற கலியுகக் கரிகாலன்!
தமிழினக் கயவருக்கு அவரே காலன்!
தனது கடமை தவறாதவர் அண்ணன் பிரபாகரன்!
தற்பெருமை கொள்ளாத தன்பானத் தமிழன் பிரபாகரன்!
வாழ்க பிரபாகரன் புகழ் வளர்க!
தமிழினம் வாழியே தலைவன் வாழியே!
திருமதி. அபிராமி திருமலைக்குமரன்
மகளிர் பாசறை,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.