அக்டோபர் 2023
“உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என்று வீர முழக்கமிட்டு வாழ்வின் இறுதி நொடி வரை தன் இனத்திற்காக வாழ்ந்தவர் சிலம்புச் செல்வர்.
ம பொ சிவஞானம் அவர்கள், எளிய குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த எண்ணங்களையும், நோக்கங்களையும் கொண்டு தன் வாழ்வை வாழ்ந்தவர். முறையான ஆரம்பக் கல்வி கிடைக்காத போதிலும், கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி தன் தாய் மொழியை கற்றுத் தேர்ந்தவர். தேவாரம், திருவாசகம், திருவருட்பா, அல்லி அரசாணை மாலை போன்ற தமிழ் இலக்கியங்களை தன் அன்புத் தாயாரிடம் இருந்து இளம்வயதில் கற்றுக்கொண்டவர்.
வறுமையின் காரணமாக இளம் வயதில் கல் உடைக்கும் பணி, கட்டடப்பணி, நெசவுத்தொழில், அச்சுக்கோர்க்கும் பணி போன்றவற்றைச் செய்தார். காந்திய கொள்கைகளை பின்பற்றி கதர் ஆடையையும், உணவில் கட்டுப்பாடையும் வைத்துக்கொண்டு எளிமையான வாழ்வை வாழ்ந்தவர். பாரதியால் ஈர்க்கப்பட்டு பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் ஆகினார். சீர்மிகு மேடைப் பேச்சால் அக்கால இளைஞர்களை தன் வயப்படுத்திவைக்கும் ஆற்றல் கொண்டவர். அவரின் பேச்சுசை அச்சியில் ஏற்றினால் இலக்கண பிழை ஏதுமின்றி அழகான சொற்றொடரோடு அமைந்திருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருந்தனர்.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தார். அதன் பொருட்டு, வ.உ.சி.க்கு சிலை அமைக்க பொருள் சேகரிக்க சிவஞாளம் அவர்கள் முற்பட்டபோது. செல்வந்தர்கள் பலரும் மறுதலித்தனர். ஆனாலும் ஏழைகளிடம் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சிலையை நிறுவினார்.
சுயாட்சி சிந்தனைகளெல்லாம் அற்றுப்போய் கூட்டாட்சியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் மாநில அரசால் தன் இலை மக்களுக்காக எந்த நன்மையும் செய்ய இயலாது என்பதை இன்று நாம் அறிவோம். இதற்காக அன்றே தீர்க்க தரிசனம் உரைத்து. “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று முழங்கி முதன்முதலில் மாநிலத்தின் உரிமைக்காக போராடியவர் மா.பொ.சி. அவர்கள்.
“மண்ணின் விடுதலையே மக்களின் விடுதலை;
மக்களின் விடுதலையே இளத்தின் விடுதலை.”
இக்கூற்றுக்கு இணங்க நிலத்தின் மீது நாம் எப்பொழுது உரிமை இழக்கிறோமோ அப்பொழுது அந்த இனம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனலாம். இன்று சென்னை மாநகரம் தமிழ்நாட்டின் அங்கமாக இருப்பதற்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. “மதராக மனதே” என்று கிளம்பிய தெலுங்கர்களின் சூழ்ச்சியை உணர்ந்த சிவஞானம் அவர்கள் மாபெரும் எழுச்சி போராட்டத்தை 1930ல் நடத்தி, “தலை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்று பெரும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டோடு தக்க வைத்துக்கொள்ள அரும்பாடுபட்டார். மக்களின் விடுதலையை பற்றி மா.பொ.சி. அவர்கள்
காந்தியடிகளுக்கு எழுதிய கடிதத்தில் தீண்டாமையை கொடுமையானது, தான் தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கப்பட்டவன் நம்புவது. அவ்வாறே ஓர் இனம் அடுத்தவரால் தாழ்த்தப்படும் போது வீழ்வதில்லை; மாறாக அவ்விளம் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று நம்பும் போது வீழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 1945 ஆம் ஆண்டு தமிழ் முரசு எனும் மாத இதழைத் துவங்கினார். விடுதலைப் போராட்ட காலத்திலேயே தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என்று தமிழ் தேசிய விதையை விதைத்தவர். சுதந்திர இந்தியாவில் “சுதந்திர தமிழ் அரசு’ அமைந்திட வேண்டும் என்று முழங்கினார். “வேரா போன்றோர் ‘திராவிட நாடு’ என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்த வேளையில் ‘தமிழ் தேசம்’ வேண்டும் என்று உரக்கக் கூறிய ஒப்பற்ற மாளத் தமிழன். தமிழ்நாடு செழிக்க வேண்டும்; தமிழ் வளர வேண்டும்;
தமிழர் வாழ வேண்டும்; அதற்கு தமிழ் அரசு வேண்டும் எனும் நிலைப்பாட்டைக்கொண்டிருந்தார். யார் தமிழர்கள் என்று வரையறுத்து, தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் சிந்திக்காது உலகளாவிய தமிழர்களைப் பற்றிய அக்கறையும் கொண்டவர். எந்த கற்களையும் படிக்கற்களாக மாற்றும் ஆற்றல் உடையவர்களே உயர்ந்தவர்களாக போற்றப்படுவர். சிறைச்சாலைக்கு ஆறு முறை சென்றவர்; சிறையில் இருக்கும் போது தான் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, குடியானவர்களைப் பற்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தை முழுமையாக படித்து முடித்தார்.
சிலப்பதிகாரத்தை தமிழர்கள் மத்தியில் மீண்டுமாய் கொண்டு சேர்த்த பெருமை சிவஞானம் அவர்களையே சேரும். தாள் முள்ளின்று நடத்திய, தமிழரசு கழக மாநில மாநாட்டின் முதல் நாள், ‘இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு இலக்கியங்களை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை இவரைச் சாரும். எளிய மக்களிடையே சிலப்பதிகாரத்தை கொண்டு சேர்த்த காரணத்தினால் இவர் “சிலம்புச் செல்வர்” என்று அழைக்கப்பெற்றார்.
1946 ஆம் ஆண்டு தமிழ் தேச விடுதலைப் போராட்டத்தை துவங்கினார். சுதந்திரத்தின் போது மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட வேலளயில் திருப்பதியை ஆந்திராவோடு இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது அப்போது திருப்பதியை மீட்க போராட்டத்தை துவங்கினார். பல ஆண்டுகளாக காங்கிரசு கட்சியில் தொண்டாற்றிய சிவஞாளம் அவர்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சொல்லி குற்றப்படுத்தப்பட்டார். இதன் காரணமாக அக்கட்சியை விட்டு வெளியேறினார். தன்னால் துவங்கப்பட்ட தமிழரசு கழகத்தை முற்றிலுமாக இப்போராட்டத்தில் ஈடுபடுத்தினார். திருப்பதியை இழந்த போதிலும் திருத்தணியை மீட்டுத் தந்த தகைமையாளர். குடகையை இழந்த போதிலும் கன்னியாகுமரியை மீட்டுத் தந்தவர்.
ராஜாஜியோடு மிக நெருக்கமாக இருந்தபோதிலும் அவர் துவங்கிய சுதந்திர கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்தார். ஆரம்ப கல்வியே பெற்றிராத இவருக்கு டாக்டர் பட்டம் தேடி வந்தது. தனது 89ம் வயதில், அக்டோபர் 3, 1995 அன்று ம.பொ.சி. அவர்கள் மரணமடைந்தார். தனது வாழ்நாளின் பெரும் பங்கை காங்கிரஸ் கட்சியில் செலவிட்ட அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாத நிலையிலும் மக்களுக்காக தான் ஆற்றும் பணியை தனி மனிதராக நின்று செய்து முடித்தார். இவர் விதைத்த விதையில் முனைத்த கன்றுகளாக இன்று நாம் இக்களத்தில் நிற்கிறோம். தமிழ் நிலத்தை வந்தேறிகள் கையிலிருந்து விடுவித்து, தமிழர் வாழ்வு வளம் பெற சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் கண்ட களவு நினைவாக பாடுபட வேண்டியது நம் கடமை.
எந்த ஒரு மனிதன் தன் நாட்டின் புவியியல் பின்னணியில் உள்ள வரவாற்றை உணர்ந்து அதன் மீது அக்கறை கொள்கிறாளோ அவனே தலைவனாக இருக்க முடியும். நீர்வளம் நிலவளம் மிக்க இந்த பைந்தமிழ் நாட்டில் அதை காக்க நினைப்பவன் எவளோ அவனே ஆளத்தகுதியுள்ளவன். நாம் தமிழர்.
திருமதி பவ்யா இம்மானுவேல்,
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.