நவம்பர் 2022
மாவீரர்கள்
மாவீரர்கள் என்று கூறும்போதே
மானத்தமிழர்களின் உதிரம் கொதிக்கும்!!!
தம் நாட்டுக்காகவும் இன மக்களுக்காவும் உதிரத்தைக்
கொடையாக அளித்த கொடை வள்ளல்கள்!
பரணத்தை வென்றீர்கள்! தமிழ் இனத்தைக் காத்தீர்கள்
மாவீரர்களானீர்கள்! காற்றோடு கலந்து வீர காவியமானீர்கள்!
உங்கள் கல்லறைகூட எதிரியை நடுநடுங்கச் செய்யும்!
உங்கள் நினைவுகள் எதிரியின் தூக்கத்தை நிலைகுலையச் செய்யும்!
அயராது உழைத்த நீங்கள் உறங்க சென்றீர்களோ?
நிம்மதியாக உறங்குங்கள்! எம்மைப்போன்ற இளையோர்
உமது கனவையும் சேர்த்து சுமந்து செல்கிறோம்!
சத்தியமிட்டுச் சொல்கிறேன்! தமிழ்க் கருவறைகள்
மீண்டும் உம்மை சுமக்கும்! ஈழத்தமிழ் மண்ணைக்
கண்டு உலகமே வியக்கும்! வானுயர
புலிக்கொடி பறக்கும்!
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்! இன்னுயிர்
ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும்
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
திரு. டொமினிக் செயசீலன்,
செந்தமிழர் பாசறை – கத்தார்.